Latest Collections of தமிழ் அன்பு கவிதை - Tamil Anbu Kavithai

அன்பு கவிதைகள்

  • அன்பு kavithai
  • Anbu Kavithaigal - Tamil Kavithaigal
  • அன்பு கவிதை வரிகள்

அன்பு கவிதை தமிழ்


மண்ணில்
பூத்த பூக்கள்
தான் உதிரும்
நம் மனதில்
பூத்து நட்புக்கள்
என்றும் உதிர்வதில்லை...


மௌனத்தில் உள்ள வார்த்தைகளையும்
கோபத்தில் உள்ள அன்பையும்
யாரால்
உணர முடிகிறதோ
அவர்களே
நமக்கு கிடைத்த
உன்னதமான உறவு


நமக்காக வாழ்கின்றவர்கள்
நம்மிடம் எதிர்பார்ப்பது
நம் சந்தோஷத்தை மட்டுமே...


வெளிப்படுத்த தெரியாத
அன்பு கூட
பேரன்பு தானே...


பிடிக்காதவரை
நேசிக்க தொடங்கிவிட்டால்
இனி பிரிவுக்கே
இடமில்லை...


அன்புடன் பேசுங்கள்
அது உங்களை
அழகாக்கும்...


கிடைக்கும் என்பதில்
பிரச்சனை இல்லை
ஆனால் நிலைக்குமா
என்பதில்
தான் பிரச்சனை
(அன்பு)


நமக்கு பிடித்தவர்களிடம் கெஞ்சவும்🙏
நம்மை பிடித்தவர்களிடம் கொஞ்சவும்😘
அதீத அன்பு மட்டுமே காரணம்😍
அந்த தருணங்கள் பேரழகு😍


அருகில் இருப்பதால்
அன்பு அதிகரிப்பதும் இல்லை
தொலைவில் இருப்பதால்
அன்பு குறைவதுமில்லை


சிலரை விட்டு
விலக முடிவதில்லை
காரணம் உலகமாய் நினைத்து
வாழ்ந்து விட்டதாலும்
உயிர் கூட உடலை விட்டு
பிரிய மறுப்பதில்லை


அன்பு என்பது
ஒரு சிறந்த பரிசு
அதை பெற்றாலும்
கொடுத்தாலும்
சந்தோஷமே...!


நம்
அன்பு ராச்சியத்தை
ஆட்சி செய்ய
கால் பதிக்கின்றாள்
குட்டி தேவதை


அன்புக்காக
ஏங்கி தேடாதீர்கள்
அன்புக்காக ஏங்குபவரை
தேடுங்கள்...!


நிலையான அன்புக்கு
பிரிவில்லை 👫
சொல்லாத சொல்லுக்கு
அர்த்தமில்லை
தேடும் பாசத்திற்கு
தோல்வி இல்லை 👫
உண்மையான
என் அன்புக்கு
மரணம் இல்லை 👫👫👫


அக்கறையுடன் கேட்பதற்கு
பதில் சொல்வதே
அன்பின் வெளிப்பாடு...!


பிறர் அழகில்
மயங்காதே
அழகு கிடைப்பது
சந்தோசம் அல்ல
அன்புல்லம்கிடைப்பதுதான்
உன்மையான சந்தோசம்


நம்மிடம்
ஒன்றுமே இல்லாவிட்டாலும்
தர்மம் செய்ய
ஒன்றே ஒன்று
அளவற்றதாக உள்ளது
அது அன்பு


அன்புக்கு நிகரானது
எதுவும் இல்லை
பாசத்துக்கு கட்டுப்படாத
மனிதர்கள் யாரும் இல்லை
உண்மையான அன்புக்கும் பாசத்திக்கும்
என்றுமே பிரிவு
என்பது கிடையாது


அன்பு
எனும் விதை
தரமாக இருந்தால்
நட்பு
எனும் கனிகள்
சுவையாக கிடைக்கும்


உண்மையான அன்புக்கு
முகங்கள் தேவையில்லை
முகவரியும் தேவையில்லை
நம்மை நினைக்கும்
உண்மையான நினைவுகள்
மட்டுமே போதும்


காலங்கள் சிலரை
மறக்க செய்துவிடும்
ஆனால்
ஒரு சிலரின்
அன்பு காலத்தையே
மறக்க செய்துவிடும்


உண்மையான
அன்புகள்
நம்மை சுற்றி
இருக்கும் போது
நாம் யாரும்
தனி நபர் இல்லை


அன்பு மட்டும் தான்
உலகில் நிரந்தரமானது
அதை உண்மையாக்குவதும்
பொய்யாக்குவதும்
நாம் நேசிப்பவரிடம்
மட்டுமே உள்ளது


அன்பை மட்டும்
பகிர்ந்து கொண்டே இரு
ஏனொன்றால் அன்பின்
ஊற்று மட்டுமே என்றுமே
வற்றாத ஜீவநதி


அடங்கிப்போவதும்
அடிபணிவதும்
உன் அன்பிற்க்கு
மட்டுமே


சில பேர்
நமக்காக நிறைய
செய்வாங்க பட்
ஒன்னும் பண்ணாத
மாதிரி காட்டிப்பாங்க
அந்த அன்பு
என்ன விலை
கொடுத்தாலும்
வாங்க முடியாது


அன்பு என்பது
போர் செய்வது போன்றது
துவங்குவது சுலபம்
நிறுத்துவது கடினம்


அன்பு எனும்
எழுது கோலால்
மட்டுமே
வாழ்க்கை எனும்
பக்கங்களை
அழகாக்க முடியும்


உடைத்தெரிய
ஆயிரம் இருக்க
உயிர்த்தெழ ஏதாவது
ஒரு காரணத்தை
வைத்திருக்கிறது அன்பு


இப்பிரபஞ்சத்தின்
ஒற்றை நம்பிக்கையும்
ஒற்றைப் பேராசையும்
அன்பு மட்டும் தான்


எதிர்பார்ப்பு
இன்றி கிடைக்கும்
அன்பு பெருமழைக்கு ஈடானது


இன்பம் மட்டும் கூட்டி
இதய இராகம் மீட்டி
எந்த நிலையின் போதும்
மாறா அன்பை
மட்டும் ஊட்டி
வாழ வேண்டும்
அன்பான இதயங்களில்


பணவீக்கத்தை கட்டுப்படுத்த
பணத்தினை சேமியுங்கள்
மனவீக்கத்தை கட்டுப்படுத்த
அன்பினை செலவு செய்யுங்கள்


அன்பான உறவுகளின்
காயங்களுக்கு மருந்தாகவே
பயன்படுகிறது பாசம்


கொஞ்சம் அன்பு
கொஞ்சம் அக்கறை
பூர்த்தியாகும்
இப்பேரின்ப பெருவாழ்வு


கோபமும் ஒரு வகை
அன்பு தான்
அதை அனைவரிடமும்
காட்ட முடியாது
நெருங்கியவரிடம் மட்டுமே
காட்ட முடியும்


அறிவாக
பேசுபவர்களை விட
அன்பாக
பேசுபவர்களிடமே மனம்
அதிகமாக
பேச விரும்புகிறது


ஒரு குறிப்பிட்ட
காலத்திற்கு பிறகு
நாம் சிரிக்க வேண்டுமா
அல்லது அழ வேண்டுமா
என்ற முடிவெடுக்க
நாம் அன்பு வைத்தவர்களால்
மட்டுமே சாத்தியமாகிறது


மனதால் எவ்வளவு
பலமானவர்களையும்
அழ வைக்கும் ஒரே
ஆயுதம் உண்மையான
அன்பு மட்டுமே


உரிமையோடு
சண்டை போட்டு
கோபபடுறவங்க
மனசுல தான் ஆழமான
அன்பு அழியாமல்
இருக்கும்


அன்பு என்பது
ஒரு அழகிய உணர்வு
அதை அலட்சியபடுத்துபவர்களிடம்
காட்டி வீணடிக்காதீர்கள்
அழகாய் கொண்டாடி
தீர்ப்பவர்களிடம் காட்டுங்கள்


சிலரின்
உண்மையான அன்பால்
தவறுகள் கூட
மன்னிக்கப்படுகிறது


சொற்களில் முரண்பாடு
ஏற்பட்டாலும்
உன் மேல்
நான் கொண்ட
அன்பு மட்டும் மாறாது


கொடுப்பதிலும்
பெறுவதிலும்
கஞ்சத்தனம் வேண்டாமே
(அன்பு)


உலகில் எதிர்பார்பில்லாத
அன்பு கிடைப்பது வரம்
அதை உன்னிடம் கண்டேனே


அன்பால்
அழகு செய்
எவர் தடுத்தாலும்
மறையாது பேரன்பு


அன்பு ஒருபோதும்
அனாதையில்லை
எங்கோ எவரோ
யாரோ யாருக்கோ
எதையும் எதிர்பார்க்காமல்
அள்ளி கொடுத்துக்கொண்டுதான்
இருக்கின்றார்கள்
அளவில்லா அன்பை


அதிகமான அன்பு வச்சா
அன்பானவர்களுக்கு
தொல்ல கொடுக்க தான்
தோணுது


எல்லோர் இதயமும்
மென்மையானது தான்
அன்பால் கடினமானவர்களை
கூட மாற்ற முடியும்
அவர்களை அணுகும் வழி
தெரிந்தால்


பழகிய இருவரை
அன்பால் இணைத்தால்
அது அன்பின் வெற்றி
ஆக முடியாது
இருவரும் மனதால்
புரிந்து இறுதி வரை இணைந்து
அந்த உறவை தக்க வைத்துக்கொள்ளவதே
அன்பின் வெற்றியாகும்


கொடுக்கின்ற அன்பு
தான் திரும்ப கிடைக்கும்
பெறுகின்ற அன்பு தான்
இரட்டிப்பு மகிழ்ச்சியை தருகிறது


பேராசை முடிகின்ற இடத்தில்
மகிழ்ச்சி தொடங்குகிறது
புன்னகை தொடங்கும் இடத்தில்
வாழ்க்கை தொடர்கிறது
அன்பு இருக்கும் இடத்தில்
அனைத்தும் கிடைக்கிறது


உலகில் நிலையானது
பணமோ பொருளோ
அல்ல
நம்பிக்கை நிறைந்த
அன்பு மட்டுமே


Tamil Kadhal SMS