Random கவிதை Collections 2022 - Get Tamil Kavithai, Kadhal kavithai, and Tamil Quotes from Different Tamil Kavithaigal Categories for Stories.

Tamil Kavithai Collections 2022 - Tamil Copied Kavithai

Kavithai

👇👇👇👇👇👇👇


அனைவரையும் ஏமாற்ற
நான் அணிந்து கொண்ட
புன்னகை முகமூடி
எனை பார்த்து
புன்னகைக்கிறது
உனையே நீயே
ஏமாற்றி கொண்டு
இருக்கிறாய் என


அன்பை பகிர்ந்து கொள்ளவும்
புரிந்துக்கொள்ளவும்
அறிவு தேவையில்லை
அழகிய மனம் போதும்


ஆயிரம் உறவுகள்
நம்பிக்கையான
வார்த்தைகளைக் கூறினாலும்
மனம் ஏற்றுக் கொள்ளும்
உறவு கூறினால் மட்டுமே
அந்த வார்த்தைகளுக்கு
உயிர் இருக்கும்


நம் வாழ்க்கையில்
நாம் தொலைத்தவர்களை
தேடலாம் ஆனால்
நமக்கு தொல்லை
கொடுத்தவர்களை
தேடவே கூடாது


பொய்யாக தோற்றமளிக்கும்
சந்தோஷங்களை
துரத்துவதை விட
உண்மையாக கிடைக்கும்
வலிகளை வரவேற்பதே
உன் வாழ்க்கையை
வசந்தமாக்கும்


நம்மை
நேசிப்பவருக்கு
வார்த்தைகள் மட்டுமல்ல
மௌனம் கூட
புரியும்


நீ இல்லாத போது
சந்தோஷமாக உள்ளது
நாட்கள் ஓடுவது தெரியவில்லை
ஆனால் நீ என்னை விட்டு
ஒரு நொடி கூட பிரிவதில்லை
ஏன் பிரிவதில்லை கஷ்டமே


நேற்று நடந்ததை
மறந்தா தான்
இன்று உன்னால்
சிரிக்க முடியும்


வழியில் வந்தவர்களை
நேசிப்பதில்
கவனம் செலுத்துவதால்
வழி காட்டியவர்களை
மறந்துவிடுகிறோம்
நாள் நலமாகட்டும்


மாற்றம் முதலில்
கடினமாக இருக்கும்
நடுவில் கொஞ்சம்
குழப்பமாக இருக்கும்
இறுதியில் மிக
அழகாக இருக்கும்


வழியில் வந்தவர்களை
நேசிப்பதில்
கவனம் செலுத்துவதால்
வழி காட்டியவர்களை
மறந்துவிடுகிறோம்


மதிக்காத
உறவுகளின் வீட்டில்
மரமாய்
நிற்பதை விட
உந்தன் சொந்த வீட்டில்
வரவேற்கும் கால்மிதியாய்
இருப்பதே மேல்


அன்பிற்கு மரியாதை
அதன் எல்லைக்குள்
இருக்கும் வரை தான்


இந்த உலகம்
ஆசையை தூண்டிவிட
படைக்கப்பட்டது
அதனை நாம் ரசிக்கலாம்
ஆனால் அதிலே
மூழ்கிவிட கூடாது


நாம் அதிகமாக
நேசித்த ஒருவரே
நாம் அதிகமாக
வெறுக்கும் ஒருவராக
மாற்றப்படுகின்றனர்
காலத்தின்
சில விளையாட்டினால்


மற்றவர்களை
ஆறுதல்படுத்துபவர்களுக்கு
தான் ஒரு கட்டத்தில்
யார் என்ன ஆயிற்று
என்று கேட்கவும்
ஆளில்லாமல் போய்விடுகிறார்கள்


விரும்பியவை
இல்லையென்றாலும்
விரும்பியே பயணிக்கிறது
எதையும் ஏற்றுக்கொள்ள
கற்றுக்கொண்ட மனம்


உங்களது கண்ணீரை
யாரும் அறிவதில்லை
உங்களது வலிகளை
யாரும் உணர்வதில்லை
உங்களது இழப்புக்களை
யாரும் தேடியதில்லை
இவர்கள் தான் உங்களின்
குற்றங்களை மட்டும்
பட்டியலிடுவார்கள்


உனக்கு துணை என்று
பிறரை நினைக்காதே
அவர்கள் தேவை தீர்ந்ததும்
விலகி விடுவார்கள்
அந்நிலையில் புரியும்
இவ்வுலகில் உனக்கு துணை
நீ மட்டும் தான் என்று


யார் நினைவிலும்
இல்லை நாம்
என்பதை விட
யார் வலியிலும்
நாம் இல்லை
என்பதே
நிம்மதியான வாழ்க்கை


ஓர் உறவின் முடிவில்
நம்மை நாம்
இழந்திருப்போம்
இன்றேல்
புதிதாய் பிறந்து
இருப்போம்


நிஜங்களை மறந்து
கற்பனையில் வாழந்து
நினைவுகளுடன் பயணம்
செய்வதில் முடிந்து விடுகிறது
மனித வாழ்க்கை


நாம் நம்மை
எப்படி பார்க்கிறோம்
என்பதே முக்கியம்
மற்றவர்கள்
அபிப்பிராயமெல்லாம்
தேவையில்லாத ஆணி தான்


ஏமாற்றங்களையும்
துரோகங்களையும்
அதிகம் சந்தித்தவர்களுக்கு
வாழ்க்கையில்
தத்துவம் மட்டுமல்ல
சாமர்த்தியமும்
தானாகவே வரும்


நிறைவேறிய லட்சியம்
நிறைவேறா ஆசை
கனவுக்குள் உறங்கும்
கல்லறைத் தோட்டம்


ஆரம்பிக்கப்படாமலே
காத்திருக்கிறது
உனக்கான அன்பு
முற்றுப்புள்ளி வைக்க
மனமில்லாததால்


எல்லாம் நிறைந்திருப்பது
ஓர் அழகு என்றால்
எதுவுமே இல்லாமல்
இருப்பதும்
ஓர் அழகுதான்


நிஜத்தை விட
நிழல்கள் எப்போதும்
அழகாகத்தான் இருக்கும்
நிழலை நம்பி நிஜத்தை
இழந்துவிடாதீர்கள்


எத்தனைதான்
சண்டையிட்டாலும்
உன் சமாதானத்தின்
கிறுக்குத்தனத்தில்
உடைந்துவிடுகிறது
அத்தனை கோபமும்


ஏமாற்றி
கொண்டிப்பவர்களிடம்
தினமும் ஏமாறுவது போல்
நடிப்பதும் ஒரு அன்பு தான்


மனம் எதையும்
யோசிக்க முடியாதபடி
வெறுமையில் வாடும்
நேரங்களில் இசையே அந்த
வெற்றிடத்தை நிரப்புகிறது


ஏதோ ஒரு நம்பிக்கை
வாழ்க்கையை முன்னோக்கி
நகர்த்தி செல்கிறது...
சிலருக்கு இறை நம்பிக்கையாய்
சிலருக்கு தன்னம்பிக்கையாய்


நீ நீயாக இரு
பிடித்தவர்கள்
நேசிக்கட்டும்
பிடிக்காதவர்கள்
யோசிக்கட்டும்


சிரித்துக் கொண்டே
கடந்துவிடு
உன் கஷ்டங்களை
மட்டுமல்ல
உன்னை கலங்க
வைத்தவர்களையும்


ஒவ்வொரு ஆண்களின்
மனதில் இளவரசியாக
இருப்பது மகள்
ஒவ்வொரு பெண்களின்
மனதில் இறைவனாக
இருப்பது அப்பா


நம்பிக்கையுடன்
பயணித்து கொள்ளுங்கள்
தானாய் தோன்றி
தானாய் மறையும்
விமர்சனங்கள் எல்லாம்
பாதி வழியில்
நீங்கி போபவையே


இதற்கு மேலும்
ஒன்று உண்டா
என வினவிய
வினாக்களுக்கு
பதிலாகவே அமைந்தது
இந்த வாழ்க்கை


நிம்மதியாக
வாழ வேண்டும்
என்று விரும்பினால்
எல்லாவற்றையும்
மன்னித்து வாழ
வேண்டும் என்று
கட்டாயம் இல்லை
சிலவற்றை மறந்தும்
நிம்மதியாக வாழலாம்


நம்ம நினைக்கிற வாழ்க்கை
நமக்கு கிடைச்சா சுவாரஸ்யம்
இருக்காதுன்னு தான்
கடவுள் கஷ்டங்கள அள்ளி
கொடுக்குறாப்புல அதுக்குன்னு
கஷ்டம் மட்டுமே கொடுத்துட்டு
இருந்தா எப்டி வாழ முடியும்


நம் கோபத்தைத் தூண்டி விட
நமக்குப் பிடிக்காத ஒருவரால்
முடியுமென்றால்
நம்மாளும் முடியும் அந்த
கோபத்தைக் கட்டுப்படுத்த


ஆறுதல் இல்லாமல்
அழுது முடித்த
பின் வரும்
தன்னம்பிக்கை
மிகப் பெரியது


உரிமை உள்ள உறவும்
உண்மை உள்ள அன்பும்
நேர்மை உள்ள நட்பும்
நம்பிக்கை
உள்ள வாழ்வும்
என்றும்
விட்டுப்போவதுமில்லை
தோற்றுப்போவதுமில்லை


காலமும் நேரமும்
கூடி வரும்போது
எதிர்பார்த்ததும் நடக்கலாம்
எதிர்பாராததும் நடக்கலாம்
அது காலத்தின் கட்டாயம்
எது நடக்குமோ
அது நடந்தே தீரும்


கசந்த உறவை
எண்ணாதே
கைகொடுக்க எஞ்சிய
உறவை எண்ணி
கடந்து செல்
வாழ்க்கை சிறக்கும்


தூரமிருந்து ரசிக்கிறேன்
பக்கமிருந்து தொலைத்த
உறவுகளை


நம்முடன் வாழ்பவர்கள்
மற்றும் பழகுபவர்களை
புரிந்து கொள்வதற்கு
முன் நம்மை நாமே
முதலில் புரிந்துகொள்வது அவசியம்


என்னடா இது வாழ்க்கை
என்ற சலிப்பு தோன்றும்
போதெல்லாம்
மாற்றம் தந்து வாழ விரும்பிட
சில அன்புகள் காரணமாகின்றன


சில ஞாபகங்கள்
எப்போதும் வாசம்
வீசிக் கொண்டே இருக்கும்
இதயத்தில்
காலங்கள் கடந்தாலும்
கூட இருந்தவர்கள் பிரிந்தாலும்


பையில் பணம்
இல்லையென்றாலும்
மகிழ்ச்சிக்கு குறைவில்லை
என்று வாழ்வது சிறப்பு


தொடக்கத்தில்
தெரிந்து கொள்ள
முடியாதவையும்
பழக்கத்தில்
புரிந்து கொள்ள முடியும்
யார் யார்
எப்படி பட்டவர்கள் என்று


பார்க்கின்ற அனைத்தையும்
மனதிற்கு கொண்டு
செல்லவும் கூடாது
மனதில் நினைப்பது
அனைத்தையும்
பேசிவிடவும் கூடாது
இரண்டும் பிரச்சனைதான்


எப்போதெல்லாம்
இது போதுமென்று
நம் மனம்
சந்தோசப்படுகின்றதோ
அப்போதெல்லாம்
நம் வாழ்க்கை
சந்தோசமாகிவிடுகின்றது


நம் வாழ்க்கையில்
கஷ்டங்கள் அதிகமாக
வரவில்லை என்றால்
பல விஷயங்கள்
கடைசிவரை
தெரியாமல்போய்விடும்


வாழ்க்கையில்
தோல்வியின் வலிகளை
நேசிக்க கற்றுக்கொள்
வெற்றியின் வழிகள்
தானாய் பிறக்கும்


பிறக்கும்
ஒவ்வொரு விடியலும்
புது முயற்சியும்
புத்துணர்ச்சியுமாகத்
துவங்கட்டும்


மற்றவர்களை பார்த்தே
வாழப் பழகிக்கொண்ட
நமக்கு என்ன பிடிக்கும்
என்ன பிடிக்காது என்று
நாம் அறிவது கிடையாது


காலம் மாறினாலும்
காட்சிகள் மாறினாலும்
மாறாத மனம்
கொண்டவர்களும்
இருக்கத்தான் செய்கிறார்கள்


சிரிக்கும் போது
முகம் அழகு
அன்பு காட்டும் போது
மனம் அழகு
நம்பிக்கை வரும் போது
வாழ்க்கை அழகு
நீ நீயாகவே
இருக்கும் போது
எல்லாமே அழகு


முயற்சி நிறுத்தப்படும்
போது தான்
தோல்வியாகிறது
தொடரப்படும் போது
அதுவே வெற்றியாகிறது
உங்கள் முயற்சியை
ஒரு போதும் நிறுத்தாதீர்கள்


போனதெல்லாம் போகட்டும்
இனி புதிதாக தொடங்கலாம்
இல்வாழ்க்கையைனு
நினைக்கும்போது தான்
போனதிலிருந்து
சில நினைவுகள்
எட்டிப்பார்க்க செய்யுது


கேட்டுக் கேட்டு
கொடுக்கும் போது
பெருகிய நேசம் ஏனோ
கேட்டுக் கேட்டு
பெரும் போது
குறைந்து கொண்டே செல்கிறது


நம்பிக்கை இருக்கும் மனதில்
உழைக்க பயம் எழாது
தன்னம்பிக்கை கொண்டவர்களின்
கைகள் உழைக்க தயங்காது


ஆபத்துக் காலத்தில்
வாயைத் திறக்காதவன்
புத்திசாலி


ஒவ்வொரு காயமும்
பழகிப் போகிறதே தவிர
எந்த காயமும்
ஆறுவதே இல்லை


நம் வாழ்வை
மகிழ்வுடன்
கடத்தி செல்ல
பிறரிடம் லிமிட்டாக
பழக வேண்டும்


விதையோ வினையோ
விதைத்தவனுக்கு அதற்கான
பலன் நிச்சயமுண்டு


உடைந்த சிதிலமடைந்த
வீடுகளுக்கு
பின் பெரிய பெரிய
கதைகள் மறைந்திருக்கும்
அது போலதான் மனிதனும்


நாம் ஆடிய ஆட்டமும்
நடத்திய கூத்தும்
ஒரு நாள் ஓய்வு பெறும்
அப்போது
கூடுகிற கூட்டம் சொல்லும்
நாம் யார் என்பதை
வாழ்க்கையை
கவனமாக வாழுங்கள்


பொய்யாகவே
இருந்து விட்டு போகட்டும்
சில உறவுகளின் நேசம்
அதை கண்டு கொள்ளாமல்
கடந்து செல்லுங்கள்
நிரந்தர நிம்மதிக்காக


ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு
தருணங்களும் நினைவுகளாக
மாறிக்கொண்டே இருக்கின்றன
ஒவ்வொரு மனிதர்களும்
பாடங்களாக மாறிக் கொண்டே
இருக்கிறார்கள்
புதிது புதிதாக நானும் கற்றுக்
கொண்டே இருக்கிறேன்
இதுதான் வாழ்க்கை


யாரும் யாருக்காகவும் இல்லை
சுழலும் உலகம்
ஓர் சுற்றுலாத்தளமே
இச்சுற்றுப் பயணத்தில்
யாவருமே சுற்றுலாப் பயணிகளே


மாய உலகில்
தொலைந்து போக
விரும்பவில்லை
மாறாக எதிர்த்து நிற்க
விரும்புகிறேன்
எங்கிருந்தாலும் வாழ்ந்து
தானே ஆக வேண்டும்


வாழ்க்கையில்
அழிய கூடிய
புறத்தின் அழகு
கிடைத்தும் பயனில்லை
அழியா அகத்தின் அழகு
கிடைக்காவிட்டால்
வாழ்க்கைக்கு பயனில்லை


புத்திசாலியாய் இரு
முட்டாளாய் நடி
வாழ்க்கையில்
நிறைய கற்றுக்கொள்ளலாம்


இன்று
வாழாத்தெரியாதவர்கள்
நாளை வாழ்வதை
பற்றி தெரிந்து
கொள்ளவே
முயற்சி செய்கிறார்கள்


எந்த அவமானத்திற்கும்
கண்ணீர் வடித்து
கரைந்து போக
தேவையில்லை


விடியும் பொழுது
உங்களுக்கானது
தகுதியற்ற யாருக்காகவோ
நேரத்தை இழந்து விடாதீர்கள்


சந்தேகம் எழத
தொடங்கும் போதே
அதை நிறுத்தி விடு
உடைந்த பின் வருந்தாதே
நன்மையான செயலை
உடனடியாக செய்து விடு
மகிழ்ச்சி முத்தமிடும்


வானம் போன்ற பெரிய
இன்பங்கள் தேவையில்லை
விண்மீன் போன்ற குட்டி
குட்டி இன்பங்கள் போதும்
வாழ்க்கையை அழகாய் வாழ


நீ வாழும் வாழ்க்கையே
எல்லாவற்றையும்
முடிவு செய்கிறது


கிடைக்காத இடங்களில்
அன்பை வெளிகாட்டாதே
அடி வாங்கி
கொண்டே இருப்பாய்
உன் வாழ்வின் இறுதி வரை


எண்ணங்களிலுள்ள
தாழ்வு
மனப்பான்மையால்
திறமைக்கு
தடை போடாதீர்கள்
முடியும்
என்ற சொல்லே
மந்திரமாய்
நம்பிக்கை


வாழ்க்கை
அதிர்ஷ்டத்தை
தருகிறதோ இல்லையோ
ஒவ்வொரு நாளும்
அனுபவத்தை
தந்து விடுகிறது


விமர்சனம் நல்லது தான்
நம்மை உலகிற்கு
அடையாளம் காட்டுவது
நம்மை விமர்சனம்
செய்பவனே


நமக்கான வாழ்வில்
சந்தோஷத்தை
பிறர் உள்ளத்தில்
இடம் என்றுமே
கொடுக்க கூடாது
பின்னர் தான்
முழுமையான சுதந்திரம்
பெற்று சந்தோஷத்தை
அடைவாய்


உலகில்
விலைமதிப்பில்லாதது
நம்மிடம் இருப்பவை
அல்ல
நம்மிடம் இருப்பவர்கள்


கடமைக்காக பழகும்
ஒருவரிடம்
உங்கள் அன்பை வினாக்கதீர்கள்
நீங்கள் எவ்ளோ தான்
அன்பை திணித்தாலும்
திகட்டுவது போல
தான் நடந்து கொள்வார்கள்
ஏனென்றால் அவர்களுக்கு
உங்களை பிடிக்காது
நிதர்சனம்


பொறாமை குணத்தை
போர்வையாய்
போர்த்தி கொள்ளாதே
அது உன் மகிழ்ச்சியை
மட்டுமின்றி உன்னையே
அழித்துவிடும்


ஆசை பாசம்
வேஷம் மோசம்
ஒன்னுக்குள்ள ஒன்னுதான்


சரியான நேரத்தில்
வெளிப்படுத்தப்
படாத
அத்தனையும்
வீண்


காதலித்து
ஏமாந்தவர்களை விட
காதலிப்பதாக
நினைத்து
ஏமாந்தவர்களே
இங்கு அதிகம்


இப்படியாச்சும் இருக்கோமேனு
நினைக்காம
இப்படியெல்லாம் இல்லையேனு
நினைக்கிறது தான்
வாழ்க்கைல வர்ற எல்லா
பிரச்சனைக்கும் முக்கிய காரணம்


ஒரு நாளைக்கு
நம்மல காணும்னா
எங்க போன
என்ன பண்றணு
தேடுற
ஒரு உறவயாச்சும்
வாழ்க்கைல சம்பாதிக்கனும்


சந்தோஷத்திற்காக வாழ்க்கையில்
ஆயிரம் குறிக்கோள்களுடன்
இருக்கும் பலருக்கும்
தெரிவதில்லை
நிம்மதியும் சந்தோஷமும்
மிக எளிதான விஷயத்தில்
குடி இருப்பதை


எவ்வளவு கோபம்
வந்தாலும்
வார்த்தைகளை
விட்டு விடாதீர்கள்
விழும் அடிகள்
தரும் வலியை விட
வார்த்தை தரும்
வலிகள் அதிகம்


நீங்கள்
உங்கள் மேல்
வைக்காத நம்பிக்கையை
வேறு யாருமே
உங்கள் மேல் வைக்கவே
முடியாது நிச்சயமாக


நினைக்காத
மாதிரியும்
கண்டு கொள்ளாத
மாதிரியும் வாழ்வது
போராட்டமானாது


நடிக்காமலே
இருந்துவிட ஆசை
ஆனால்
பலருக்கு என்னை
பிடிக்காமல் போய்விடுமே
என்ற எண்ணம்தான்
மீண்டும்


இங்கு எல்லோரும்
வேஷக்காரர்கள் தான்
ஆனால்
நாம் என்ன வேஷம்
போடுகிறோம் என்பதில்
தான் எல்லாம் அடங்கும்


அநியாயமா
பேசுற பேச்சை
சீக்கிரம் நம்பிடுவாங்க
ஆனா நியாயமா பேசுனா
நம்ப மாட்டாங்க
பிடிக்கவும் செய்யாது


நிறைய பேர்
நான் நல்லவன்
நான் அடுத்தவங்களுக்கு
நன்மைதான் செய்கிறேன்
என்று நம்புவார்கள்
ஆனால் அதில்
அவர்களுக்கே தெரியாமல்
சுயநலம் கலந்து இருக்கும்
இதை மிகத்தெளிவாய்
சுட்டிகாட்டினால் அவர்களுக்கு
கோபம் வரும்
நீ எப்படி என்னைப் பற்றி
சொல்லாம் என்று


இன்று நீங்கள்
உணரும் வலி
நாளை நீங்கள்
உணரும்
பலமாக இருக்கும்


வாழ்நாட்கள்
அதிகம் வேண்டாம்
வாழ்ந்த நாட்கள்
அதிகமிருந்தால் போதும்


சிலர் காலத்திற்கு
ஏற்றார் போல்
மாற்றி கொள்வது
உடைகளை மட்டுமல்ல
உண்மையானவர்களிடம்
நடிக்கும் நடிப்பையும் தான்


எனக்கு எதில் சந்தோஷமோ
அதில் தான்
மற்றவர் சந்தோஷம்
அடைவார் என்ற
நினைப்பே தவறு


கிடைக்குமா
என்ற கேள்வியுடன்
ஒரு எதிர்பார்ப்பு
மனதளவில் தொடர்ந்து
இருந்து கொண்டு
தான் இருக்கிறது


ஏற்றுக்கொள்ள
முடியாத விசயங்களை
மாற்றி கொள்ளுங்கள்
மாற்றி கொள்ள முடியாத
விசயங்களை விட்டுதள்ளுங்கள்


துரோகியை
மன்னித்து விடலாம்
துரோகியான நண்பனை
மன்னிப்பது தான் கடினம்


ஒருவரை
புரிந்து கொள்ள
சில காலம் தேவைதான்
ஆயுளும் தேவையென்றால்
பிரிவே சிறந்தது


கஷ்டம் வரும்போது
கண்ணை மூடாதே
அது உன்னைக்
கொன்றுவிடும்
கண்ணைத் திறந்து பார்
நீ அதை வென்று விடலாம்
(by அப்துல்_கலாம்)


வாழ்க்கை
உனக்கு வசமாவதும்
அதுவே உனக்கு
விஷமாவதும்
உன் கைகளில்
தான் இருக்கிறது


சிந்தனையில் சிறிது
மாற்றங்கள் செய்தால்
வாழ்க்கையில்
மிகப் பெரிய
மாற்றம் அடையலாம்
எண்ணம் போல் வாழ்க்கை


சேமிச்சு வைக்கிற
பணமும்
சேமிச்சு வைக்கிற
பொறுமையும்
என்னிக்குமே
வீண் போவதில்லை


தெரிந்து கொண்டேன்
என்பதை விட
தெளிந்து விட்டேன்
என்பதே
உண்மையான அனுபவம்


கோபம் தான்
ஒரு மனிதனின்
மிகப்பெரிய எதிரி
அதனை கட்டுப்படுத்த
தவறினால்
நம் வாழ்க்கையையே
புரட்டி போட்டு விடும்


எதையும் ஏற்றுக்கொள்ளும்
மனநிலையை வளர்த்துக்
கொள்ளுங்கள்
அடுத்த நொடி
நம் கைகளில் இல்லை


யாரும் யாரையும்
விட்டுவிட வேண்டாம்
சிறை பிடிக்காமல் இருங்கள்
அதுவே சிறந்தது


மகிழ்ச்சியாக இருப்பதற்கு
முயற்சி செய்வதில்லை
மகிழ்ச்சியாக
இருப்பது போல்
காட்டிக் கொள்ளவே
பலரும் முயற்சிக்கின்றார்கள்


வாழ்க்கையும் ஓடுகிறது
நாமும் ஓடுறோம்
கூடவே
கஷ்டமும் கவலையும்
சேர்ந்து ஓடி வருது


ஒருவரின் பேச்சால்
அவர் உள்ளத்தை
அறிந்திட முடியாது
இனிக்க இனிக்க பேசுபவர்
நலன்விருப்பியுமல்ல
கடிந்துக்கொள்பவர் கேடு
நினைப்பவருமல்ல


எமுதப்படாத
எழுத முடியாத
வரிகளுக்குப்
பின்னால் சொல்லப்படாத
சொல்ல முடியாத
வார்த்தைகள் ஏராளம்


அவர்கள் போல் வாழ்க்கை
இவர்கள் போல் வாழ்க்கை
வாழவேண்டும் என்ற
ஏக்கப்பெருமூச்சில்
நம் வாழ்க்கை வெறுக்கப்பட்டு
வாழாமலேயே முடிக்கப்படுகிறது


உனக்கெல்லாம் எதுக்கு
என்கிறது ஒரு பக்கம்
உனக்காக தான் எல்லாம்
என்கிறது மறுபக்கம்


சில நேரங்களில்
நீங்கள் இருண்ட இடத்தில்
இருக்கும்போது
நீங்கள் புதைக்கப்பட்டதாக
நினைக்கிறீர்கள்
ஆனால் உண்மையில்
நீங்கள் விதைக்கப்படுகிறீர்கள்


சில தருணங்கள்
மறப்பதே இல்லை
சில நேசங்கள்
நெஞ்சை விட்டு
நீங்குவதும் இல்லை
சில விலகல்களின் காரணங்கள்
புரிவதும் இல்லை வாழ்வில்


எதையும் மறந்துவிட
முதலில் கற்றுக்கொள்ளுங்கள்
சுயநலக் உலகில்
காயங்களுக்கு
நினைவுகளை துணை
தேடாமல் இருக்க


கதிரவன்
கண் விழித்த
பின்னும்
உன் அணைப்பில்
கண் மூடி கிடப்பதும்
சுகம் தான்


உன்னைச் சுற்றி
நடப்பவற்றை அமைதியாக
கவனிக்க தொடங்கினாலே
நீ எடுக்கும் முடிவுகள்
தெளிவாக இருக்கும்


சில கனவுகளை நிஜமாக
எண்ணி மகிழ்வதும்
பல நிஜங்களை கனவாக
எண்ணி மறப்பதும்
தான் வாழ்க்கை


உண்மை இல்லாத
உறவுகளுடன் ஒட்டி
இருப்பதைவிட ஒதுங்கி
இருப்பதே நல்லது


வாழ்வில் நீங்கள்
சந்திக்கும் ஒவ்வொரு துன்பமும்
உங்களை ஒரு படி
மேலே ஏற்றிடவே வருகின்றன
மனம் தளராதீர்கள்


எங்க போறீங்க இதோ உங்களுக்காக