Here are the Latest Collections on Tamil kadhal Kavithaigal and Tamil Love Quotes - Best Kadhal Kavithaigal in Tamil.
காதல் கவிதை Kavithai in Tamil Font - Tamil Love Status
kadhal Kavithaigal
- Tamil Love SMS
- Tamil Love Quotes
- kadhal kavithai SMS in Tamil
Love Status and Quotes
👇👇👇👇👇👇👇
கனமான பொழுதுகளும்
கண நொடியில்
கரைகிறது
உடன் நீயிருக்க
துடிப்பும்
தவிப்பும்
எனக்கானதாகவே
இருக்க வேண்டும்
உன்னிதயம்
என் தாகம்
அறிந்தாய்
எப்படி இப்படி
பருகுகிறாயே நீரை
என் மனக்குழப்பத்தை
முதலில் தெளிவுப்படுத்து
பின்பு எனக்கான
உன் படைப்பை
தெரியப்படுத்து
இந்த நொடிகள்
போதும்
நீயுடனில்லா
நிமிடங்களில்
என் நாழிகையை
அழகாய் நகர்த்திட
கனவா நிஜமா
என்றுணரமுடியா
இதமான
ஓர் உணர்வு
எதிர்பாரா
உன் அரவணைப்பு
பேரன்பின் பெருங்
காதல் நீ
மேகத்தினுள்
மறையும் நிலவாய்
அவ்வப்போது மறைந்து
கொல்கிறாய் மனதை
நீர் துளி
தீண்டிய பாதமாய்
சில்லிடுகிறது மனம்
உன் கரம் தீண்ட
உன் வீட்டு
பறவையின் கீச்சலிள்
என் மனதிலும்
முளைக்குது சிறகுகள்
பறந்து வர உன்னிடம்
பற்றி கொண்ட
கரப்பிடிக்குள்
பத்தி கொல்(ள்)கிறது
காதல் தீயும் அனலாய்
யார் என்னை
தாழ்த்தி பேசினாலும்
நீயெனை எப்போதும்
உயர்ந்த இடத்திலேயே
வைத்திருக்கிறாய்
அன்பே உன்னிதயத்தில்
மனதோடு நீ
நினைவோடு நான்
மௌன உரையாடலில்
உன்னோடு
விழிகளுனை
தேடியதை விட
உள்ளம் உன்னில்
தொலைந்தது
தான் அதிகம்
நம் நினைவில் மூழ்கி
சட்டென
ஏந்தி கொ(ல்)ள்ளாதே
பட்டென
தவிக்குது மனம்
உன் விழியீர்பில்
கரை தொட
ஓயும் கடலலை
உன் கரம்
பட வீசும்
நம் காதலலை
கேட்காமலேயே
தீர்த்து வைக்கிறாய்
ஏக்கங்களை
தந்தையின் மடியில்
தலைசாயும்
குழந்தையாய் நான்
தயக்கம் இருந்தாலும்
நெருக்கத்தை தூண்டுகிறது
உன் நேசம்
நீ என்னவன் என்று
வார்த்தைக்கு தடைபோட்டு
விழியில் கதை பேசுகிறாய்
காதல் மொழியில்
காத்திருக்கும் கண்களில்
தேங்கி கிடக்கும்
கனவுகளை உனையன்றி
யாரறிவார் என்னுயிரே
உன் துடிப்பில்
என் மூச்சு
மொத்த திமிரின்
வடிவம் நீயென்றறிவேன்
அத்தனையும் விட்டெறிந்து
விட்டாயே
இத்தனை காதலா
என்னில் உனக்கு
இத்தனை மெனக்கெடல்
எதற்கு
ஒரு நொடியென்
விழிகளை வாசித்தால்
மன ஏட்டை
புரிந்து கொள்வாயே
உன் தீண்டலா
கொலுசின்
மென் தீண்டலா
சில்லென சிலிர்க்கிறது
நீரலையும் பாதம் தொட
வாழ்ந்து காட்ட
எத்தனையோ வழியை
தேடி தேடி
இறுதியில்
உன் நிழலில் வாழ்வதே
அழகு என உணர்ந்தேன்
அடை மழையில்
நனைவதும் ஆனந்தமே
பொழிவது நீ
முத்தங்கள் என்றால்
உதிரா மலராய்
மலர்ந்திருக்க
வேண்டும்
நம் காதல்
உன் மனதில்
நான் மரணித்தாலும்
மென் தீண்டலில்
பதித்தான் அழுத்தமாய்
காதலை முத்திரையாய்
முத்தத்தில்
உன் நேசத்தின்
நறுமணத்தில்
என் சுவாசமடா
அன்பே
இப்படியே இருந்துவிடேன்
முப் பொழுதும்
என் காதலனாய்
எனதன்பு கணவா
வெறும் வரிகளும்
உன் வார்த்தைகளாகவே
எதிரொலிக்கிறது
காதலோடு கவிதையாய்
அங்கே நீ
மழை என்றால்
இங்கே நனைகிறேன்
நானும் உன்னோடு
இணைந்தே
சந்தோஷ சாரலில்
எதுவும் தோனாத
போதுதான் உணர்கிறேன்
நீ எல்லாமுமாக
எனக்குள் இருப்பதை
இயந்திர வாழ்க்கையும்
இனிமையாகிறது
என்னிதய வீணையில்
ஸ்வரங்களாய் நீயிருப்பதாலேயே
மீண்டு விட்டேன்
என்பதைவிட
மீட்டெடுத்தாய்
என்பதே நிஜம்
வெறுமை எனும்
தனிமையிலிருந்து
அன்பால்
தேய்ந்து வளரும்
நிலவாய்
நம் காதல்
ஊடலுக்கு
பின் பௌர்ணமியாக
நீ சென்று
கொண்டே இருக்கிறாய்
உன் நினைவு
வந்து கொண்டே இருக்கு
நாணாலின்
தீண்டலிலும்
உன் ஞாபகங்கள்
பேரிம்சையாய்
தீண்டுதே மனதை
எதையும் கண்டு
கொள்ளாத மனம் தான்
உனை கண்டு விட்டால்
எனை கண்களிலேனும்
கடத்திவிட மாட்டாயா
என்றே எண்ணுகிறது
சிறு உலகம்
பெரும் மகிழ்ச்சி
நீ நான்
யோசித்து எழுதவில்லை
நேசித்து எழுதுகிறேன்
உனை சு(வா)சித்து
கொண்டிருப்பதால்
என்னுள்
புகையாய் சூழ்ந்து
தீயாய் எரிக்கிறது
உன் நினைவு தணல்
மனமெங்கும் நறுமணம்
பூவின் வாசனையாய்
உன்னன்பின் நேசத்தில்
மாற்றமோ ஏமாற்றமோ
உன்னால் மட்டுமே
சாத்தியம்
என் வாழ்வில்
சலிக்காமல்
நீ கலைத்து விளையாட
அலுக்காமல்
நான் அள்ளிமுடிந்த
நொடிகள்
அழகாய் மனதில்
சுகமான வலியாய்
சீ(தீ)ண்ட நீயில்லாத
போது
ஊடலிலும் காதலை
கொட்டி தீர்க்கும்
நமக்குள்
ஏது பிரிவு அன்பே
உறக்கத்தை துரத்தி
கனவுகளை
கோர்த்து கண்களும்
காத்திருக்கு
நீ வருவாயென
மனதிலும்
ஒரு காதல் கீதம்
சலங்கை ஒலியாய்
உன் கரம்
மா(மீ) ட்ட
மன கூண்டில்
நீ சிறை
கைதியாய்
நான் உனை
காணும் ஆவலில்
அத்தனையும் சாதாரணமே
உன் அன்பின் முன்
துவட்டுவது
உன் கரங்கள்
என்றால்
நீராடுவேன்
மீண்டும் மீண்டும்
என்னவனே
அடம் பிடிக்கும்
மனம் அடிமையானது
உன் அன்பிடம்
எப்படி அலங்கரித்து
கொண்டாலும்
உன் வசீகர
பார்வையின்
முன் அத்தனையும்
அலங்கோலம் தான்
எண்ணங்களுக்கு
பஞ்சமேயில்லை
உனக்கான ரசனையில்
தொடர்கிறது
முற்றுப்புள்ளி இன்றி
நினைக்க நினைக்க
இனிமையாய்
மனதிலும் மத்தாப்பு
பல வண்ணங்களில்
உனை காண
கண்கள்
சந்தோஷ தீப்பொறியாய்
பஞ்சணையில் இல்லாத
மென்மை
உன் நெஞ்சணையில்
உறக்கமும் வருடுது
கண்களை மயிலிறாகாய்
ஊடல்கள் நமக்குள்
புதிதில்லை என்றாலும்
பல மணிநேர
மௌனத்தின் பின்
உன் குரல் கேட்க
கண்களும் நனையிது
ஆனந்தத்தில் தொலைத்தது
கிடைத்தது போல்
வண்ணங்கள் கலையாத
வானவில் நீ
என் மன வானில்
பேசா நொடிகளில்
பேசி கொல்கிறாய்
பார்வையில்
பல வே(லை)ளைகளில்
நீயெனை மறந்திருந்தாலும்
எந்நொடியிலும்
நினைத்திருப்பது நானுனையே
அத்தனை
மன அழுத்தத்திலும்
ஒரு ஆறுதல்
என்றால்
அது நீயே
ஒரு முறையேனும்
வீழ்த்திட வேண்டும்
நானுனை ஜெயித்திட
விழி போரில்
வார்த்தைகளில்
கூறாவிட்டாலும்
வாழ்க்கையில் அடிக்கடி
உணர வைக்கிறாய்
உனக்கென் மீது
அதீத காதலென்று
எதிர்பாரா
இன்ப அதிர்ச்சிகளை
கொடுத்து
உன் நினைவு
அசைபோட
என் நிழலும்
துணை சேர
பாதமும் பயணிக்குது
நாம் நடந்த பாதையில்
கோர்த்த வார்த்தைகளை
சேர்க்கும்முன்
கொட்டித் தின்கிறது
வெட்கம்
நான் ஆசை
படுவதெதுவும்
நிராசையானதில்லை
உன்னாசைகள்
எனக்காக என்பதால்
எண்ணத்தில் இருப்பதை
என்னில் கிறுக்கி
எனையும்
கிறுக்காக்குகிறாய்
கிராதகா
ஆலயத்தில் சிறப்பு
மணியோசையாய்
மன ஆலயத்தில்
சிறப்பு
உன் நினைவோசை
இசைக்கும்
இன்னிசையாய்
காணாத போதும்
கண்முன்னே
நடமாடும்
என் விழிகளின்
ஜீவன் நீ
நீரில் மூழ்கியும்
அணையவில்லை
உன் நினைவு தீ
உன் அகிம்சையே
எனை தூண்டுகிறது
அராஜகமாய்
உனை காதலிக்க
என்னவனே
கனமில்லா மலர்
கூடையாய் மனம்
எத்தனை சுமைகள்
இருப்பினும்
உடன் நீயிருப்பதால்
ஓய்வில்லா நெடுஞ்சாலையாய்
மன சாலையில்
நீ நடமாடுகிறாய்
வருவதும் போவதுமாய்
கலைந்த கனவுகளை
மீட்டுக்கொடு மீண்டுமொரு
கனவு காண
திரானியில்லை
கண்களுக்கு
உனக்கும்
தான் எத்தனை
சுயநலம்
என்னை மறந்து
உனையே
நினைக்க வைத்து
விட்டாயே நினைவாகி
ஜெபிக்கின்றேன்
உன் பெயரை
அர்ச்சனையாய் தினம்
இதய கோவிலிலே
தொடு திரையிலும்
தொட்டிழுக்குறாய்
மனதை
காந்த பார்வையில்
மார்கழி குளிராய்
மனம்
உன் ஆடை
போர்வையாக
உன்னெதிரே
நான் இல்லாத
வேளைகளிலும்
உன் விழிகளுக்குள்
வாழ்வதும்
நானென்றறிவேன்
என்னவனே
மையும் சொல்லும்
உன் மீதுள்ள
மையல்களை
கவிதையாய் கரைந்து
விழிகள் எழுத
நீ என்ற
நினைப்பே
எனை
நீந்த செய்கிறது
மகிழ்வாய்
அன்பில் அழகாய்
சாரல் மழையோடு
தூறலாய்
நம் காதல்
சேர்ந்தே நனைக்கிறது
என்னை
ஆசை மழையில்
நீ மறைத்தாலும்
மணம் வீசும்
மலராய்
உன் கண்களும்
காட்டி கொடுக்குது
என்மீதுள்ள
உன் காதலை
உன் வர்ணனைக்காகவே
எனை வர்ணித்து
கொள்கிறேன்
ஆவலாய்
எத்தனை
ஊடல் வந்தாலும்
இறுதியில்
மனதில் நிற்பது
உன் சமாதான
முத்தமே
வரும் அழைப்புக்களை
எல்லாம் நிராகரிக்கின்றேன்
உன்னழைப்புக்கு
தடையிருக்க கூடாதென்றே
உறக்கத்தின் பின்னும்
உறங்காமல் வளர்கிறது
நம் காதல்
விலகாத
உன் பிடிக்குள்
வேண்டுதலிலும்
கிடைக்காத
வரம் எதிர்பாரா
உன் தரிசனம்
ஆறியபோதும்
சுடச் சுட தேநீராய்
எப்போது சுவைத்தாலும்
தித்திப்பாய் இனிப்பது
நாம் அன்பில்
கரை(ல)ந்த
இனிமையான
நிமிடங்களே
காகித பூவிலும்
காதலின் நறுமணம்
உன் நேசத்தின்
நெருக்கத்தில்
எந்நொடி நினைத்தாலும்
முதல் சந்திப்பாய்
புதிதாய் மலர்கிறது
நம் காதல்
என்றோ நீயெனை
எதார்த்தமாய்
கடந்த போது
சற்றும் எதிர்பார்கவில்லை
நீயே என்
எதிர்காலமாவாய்
என்று என்னவனே
பாறை மனமும்
நீ எனக்காக
பனிக்கட்டியாய்
உருகும்
இதயமும் நீ
மெட்டியில் விலங்கிட்டு
இதய சிறைக்குள்
உனதாக்கி கொண்டாய்
எனை காலமெல்லாம்
உன் காதல்
கைதியாய் நான்
துவட்ட துவட்ட
நனைகின்றாய்
வெட்கத்தில் அழகாய்
வாழ்வின் வரம்
உன்னுடன்
நகரும் நிமிடங்கள்
என்னிதயம்
துடிக்க தவறினாலும்
உன்னிதயத்தை
நினைக்க
தவறியதில்லை
மனமும் எப்போதும்
மார்கழி தான்
உன் அன்பின்
சாரலில்
நனைந்துகொண்டே
இருப்பதால்
குளிர்மையாய்
வேண்டும் எப்போதும்
இந்த நெருக்கம்
மனதிலும் என்னுயிரே
எண்ணத்து ஆசையை
கன்னத்தில் பதித்தேன்
இருவரி கவிதையாக
உனக்கான வேண்டுதலில்
எனக்கான சுயநலமும்
உண்டு
நமக்கா என்பதால்
மென்னிதழும்
சுடும் என்றுணர்ந்தேன்
உன்னிதழ் தீண்ட
குளிர் காலத்தில்
அனல் காற்றாய்
நீள வேண்டும்
இந்நொடிகள்
நினைத்து நினைத்து
ரசித்திட
நம் நிமிடங்களை
மனம் நினைத்தால்
எதுவும் சாத்தியமே
உனை மறப்பதை
தவிர
முகவுரை
நீ என்பதால்
முடிவுவரை
சுபம் என்றே
ரசித்து
கொண்டிருக்கின்றேன்
வாழ்க்கை
எனும் புத்தகத்தை
மலரோடு மணமாய்
மனதோடு நீ
என்றும்
பிரித்திட முடியாத
உனைபோல்
நானும்
அன்பின் பிடிக்குள்
சிக்குண்டு என்னவன்
மன கூண்டில்
மௌனமாகி போனேன்
என்னுலகே அவனென்று
கனவு கலைந்த
பின்னும்
கண் மூடி ரசிக்கும்
நினைவாய்
நீ இம்சிக்கிறாய்
மனதில் கலையாமல்
தன்னை உருக்கி
கொண்டு
ஒளி கொடுக்கும்
மெழுகாய் நீயும்
உன் வலிகளை
தாங்கி கொண்டு
எனக்கு வழியாய்
இருக்கின்றாய்
உன்னில் பாதியான
பின்னே என்னுள்
நான் முழுமையானேன்
நான் வசிக்கும்
உன் இதயத்தை விட
அனைவரும் ரசிக்கும்
இந்த தாஜ்மஹால்
ஒன்றும் அத்தனை
அதிசயம் இல்லை
சில நேரம்
கொன்று செல்கிறாய்
பல நேரம்
கொண்டு செல்கிறாய்
மனதை
எனக்காக
எழுதும் பேனாவாய்
இருந்த
நான் உனக்காக
கரையும் மையாகி
போனேன்
உன்னில் தொலைந்த
பின்னே
நீ சென்ற பின்னே
நானும் பயணிக்கின்றேன்
உன் நினைவுகளோடு
மன பாதையில்
அத்தனையும்
ஜெயித்து விட்டதாய்
மனம் பட்டென
நீ தோள் சாய
என் மனதில்
பூத்த மென்
மலர் நீ
நான் நுகரும்
(சு)வாசமாய்
என்றும்
உதிரா நேசமாய்
மனம் தேடும்
வெப்பம்
நீ மார்கழி
குளிரில்
வண்ணம்
மாறா மயிலிறகாய்
எண்ணமெல்லாம்
நிறைந்து விட்டாய்
வருடியே
மனதை நினைவால்
உன் விரல்களில்
தான் எத்தனை
வித்தைகள்
கற்று கொடு
கொஞ்சம்
நான் வீணையும்
வாசிக்க
செல்லும் இடமெல்லாம்
உடன் நீயில்லை
என்றாலும்
உன் நினைவுண்டு
கொலுசொலியாய்
என்னுள் இருந்து
கொண்டே
எனை தவிக்கவிடும்
உன்னிதயமும்
பெரும் இம்சைதான்
நீயில்லா பொழுதுகளில்
நாட்கள் மாறலாம்
மாதங்கள் மாறலாம்
வருடங்கள் மாறலாம்
உன்னென் தோற்றங்களும்
மாறலாம் மாறாதே
என்றும் நானுன்
மீது கொண்ட காதல்
என் காதல் கணவா
ஆரம்ப புள்ளியும்
நீ முற்று புள்ளியும்
நீ என் வாழ்வில்
அழியா
வண்ண கோலமாய்
கவியெழுதும் இதழ்களுக்கு
கொஞ்சம் ஓய்வுகொடு
களைப்பாறி கொள்ளட்டும்
இளைப்பாறி கொள்கிறேன்
நானும்
விட்டு செல்கிறேன்
பாத சுவடுகளை
பயணம் முடியுமுன்
தொடர்ந்திடுவாய்
என்றே
அடிக்கடி தொட்டு
ரசிக்குது மனமும்
மல்லிகையை
உன் கரம்
சூட்டியதாலா
என்னவனே
விழி மூடி
கொள்
என்னிதயத்தில்
காண்பாய்
உனை
நெறுங்கி கொல்லாதே
ஜனனிக்கின்றேன்
மீண்டும் மீண்டும்
இறவாமலே
கரையை
உரசும் அலையாய்
உரசுகிறாய்
மனதை நினைவலையில்
எத்தனை இன்னல்களை
சந்தித்தாலும்
என் நாழிகையை
அழகாகவே
நிறைவாக்குகிறாய்
என்னவனே
மயிலிறகாய்
வருடுவதும்
நீ மௌனத்தில்
வாட்டுவதும்
நீ என் மனதை
உன் கழுத்தை
கட்டிக்கொண்டு
ஆளும் டை மீதும்
கொஞ்சம்
பொறாமையே
என்னிடத்தை
பிடித்து விட்டதே
என்று
ரசனை என்று
எதுவுமில்லை
விழிகளுக்கு
உனை தவிர
வேட்டியில் கரையாய்
படிந்து விட்டாய்
மனதில் அழித்தாலும்
அழியாத அழகிய
காதல் கறையாய்
உயிரே
நீ மிச்சம்
வைத்த தேநீரில்
எப்போதும்
சுவை அதிகம்
தான்
ஆறிப்போனாலும்
நீ மறந்து போன
ஞாபகங்களை
மனம் புதுப்பித்து
கொ(ல்)ள்கிறது தினம்
இன்னும்
சற்று இறுக்கி
கொள்குறையட்டும்
தூரம்
நம் மனங்களுக்கு
இடையிலும்
ஆழ் கடலில்
அமைதியான இரைச்சலாய்
ஆர்ப்பரிக்கிறாய்
ஆழ் மனதில்
பேரிரைச்சலாய் அகிம்சையால்
சேமித்து வைத்து
ரசிக்கிறேன்
உன் வார்த்தைகளை
வரிகளில்
நம் அழகிய
நிகழ்வுகளாய்
எதையும் தாங்கும்
இதயம் தான்
உன் மௌனத்தை
தவிர
நீ வாரி
கொள்ளும்
போதெல்லாம்
தாவி குதிக்கும்
சிறு குழந்தை
தான் நானும்
அன்பில்
வியந்து போகிறேன்
எப்படி வியாபித்தேன்
என்று
உன்னிதய கூட்டில்
கலைத்து விடுகிறேன்
கவலைகளை உடனுக்குடன்
உன் கண்கள்
கலங்கிட கூடாதென்றே
என்னவனே
காரிருள் சூழ்ந்தாலும்
நம் காதல் வானில்
ஜொலிப்போம்
பௌர்ணமியாய்
மனதிலும் தாகம்
ருசிப்பதா ரசிப்பதா
என்று உனையும்
நீ எங்கு
சென்றாலும்
மனம் இன்னும்
அதீதமாய்
நெருங்குகிறது
உன் நினைவிலேயே
நகரட்டும்
நொடிகளும் மெல்ல
நீ நகராமால்
இருந்து விடு
என்னுடனேயே
மாட்டி விட்டாய்
வளையல்களை
மனமும்
மாட்டி கொண்டு
சல சலக்குது
உன்னிடம்
நீரிலும் அழியா
கோலம்
உன் நினைவு தடம்
தனிமையிலும்
நிழலாய் என்னுடனே
நான் மறைந்த
பின்னும்
நம் நினைவில்
உன் கண்களும்
கரையுமென்றால்
என் காதலும்
சாகா வரம்
பெற்றதே
உன் மனதை
வாசித்த போது
தான்
என் எண்ணங்களும்
எழுத்தானது
நீயும் என்றோ
வாசிப்பாய் என்றே
எப்பொழுது வருவாய்
என்ற கேள்வியிலேயே
தொங்கி நிற்கிறது
சீக்கிரம் வந்துவிடு
என்ற எதிர்பார்ப்பு
உன் இதழ்
இட்ட முத்தங்கள்
எல்லாம்
முத்துக்களாகி அலங்கரித்தது
முகத்தையும் அழகிய
பருக்களாய்
காற்றாய்
தீண்டி காணாமல்
போகின்றாய்
மனதில் ஆசையெனும்
புயலை தூண்டி
என் ஒவ்வொரு
நொடியிலும்
மறைந்திருக்கும்
சுவாரஸ்யம்
நீ அன்பே
கண் பார்த்த அன்றே
நானுனை சொந்தமாக்கி
கொண்டேன்
என் மனதில்
முடிந்து
காதல் கணவா
ஏதோ நினைத்து
உன்னில் முடிகிறது
என் சிந்தனையும்
உன் சிறு சிறு
சந்தோஷங்களில்
என் பெரும்
மகிழ்ச்சியும்
தளர்ந்து கொண்டிருக்கிறது
பிடிவாதம்
சற்று நகர்ந்து
கொ(ல்)ள்
மீட்டு கொள்கிறேன்
எனை உன்னிடமிருந்து
பிரம்மை என்றாலும்
பிரமித்து போகிறேன்
காணும் இடங்களில்
எல்லாம் உனை
காணும் போது
தனித்திருக்கும் போதும்
உனை நினைத்திருக்க
வைத்துவிட்டாய்
மனதுக்குள் நுழைந்து
மனம் தேடும்
தாலாட்டு
நீ உறங்க மறுக்கும்
கண்களுக்கு
அப்படியென்ன மாயமோ
புரியவில்லை
நிஜம்கடந்த
நினைவுலகில் மட்டுமே
வாழ்கிறது
நம் சந்தோச
தருணங்கள் அனைத்தும்
உண்ணாத நாட்களுமுண்டு
உறங்காத நாழிகையும்
உண்டு
உனை எண்ணாத
நாட்களென்று
எதுவுமில்லை என்னுயிரே
இது தான்
காதலென்றால்
சற்று தூரமாகவே
இருந்துவிடு
உன் நினைவெனை
தொட்டு கொண்டே
இருக்க
சுகமான இம்சயாய்
அம்பாய் துளைக்கும்
உன் அன்பிற்காகவே
எத்தனை முறை
என்றாலும்
இறந்து பிறக்கலாம்
என் அன்பே
மை கொண்டு
சிந்த விரும்பவில்லை
கண்ணீரை
உன் மடி சாய்ந்து
அழுது தீர்த்திடவே
ஏ(தா)ங்கி கொண்டிருக்கு
இந்த மனமும்
இப்போது தான்
நீ சென்றாலும்
எப்போதோ
உனை பார்த்தது
போல்
கண்களும் பா(கா)த்து
கிடக்கு காதலுடன்
என் கள்வா
கடலுக்கு ஓசையாய்
மனதுக்கு வீணை நீ
இதய ராகமாய்
தொல்லைகள் செய்தே
கொள்ளையடிக்கிறாய்
மனதை அழகாய்
மனம் இல்லை
என் வசம் நான்
உன் வசமானதிலிருந்து
விழித்த பின்னும்
மீட்டி கொண்டிருக்கு
விழிகள் வந்தது
நீயல்லவா கனவாய்
அத்தனை தைரியமும்
அமைதியாகிறது
உன் கண்களை
எதிர் கொள்ள
முடியாமல்
கொஞ்சமேனும்
கருணை காட்டு
உன் அழைப்புக்காய்
காத்திருக்கும்
என் காதலுக்கு
அன்பே
அலைபாயுதே
கண்ணனுக்காக
அல்ல மன்னனுக்கா
மனம் என்
ஆபத்துக்களை
பற்றி கவலையில்லை
ஆட்கொள்ள நீயிருப்பதால்
நம் வாழ்க்கை பாதையில்