Here are the Latest Collections of Love Status and Quotes in Tamil.

Love Status and Quotes for Whatsapp and instagram Status

Kadhal Status

Love Status

👇👇👇👇👇👇👇


நினைப்பதில்லை
என்று வருந்தாதே
என் நாழிகை நகர்ந்து
கொண்டிருப்பது
நம் அழகிய
நினைவுகளில் தானன்பே


கையளவு இதயத்தில்
கடலளவு காதலை
நிரப்பி மூழ்கடிக்கிறாய்
அன்பில் அன்பே


தொலைதூர நிலவாய்
நீ துரத்தும் மேகமாய்
உன் நினைவில் நான்


காற்றின் தீண்டலோடு
போட்டியிடும்
உன் மூச்சின் தீண்டலில்
தோற்று கொண்டிருக்கிறேன்
நான்


(சு)வாசிப்பது
நீயென்றால்
கவிதையாய்
நானிருப்பேன்


ஆழுறக்கமோ மீளாதுயிலோ
உன் கரங்களுக்குள்ளேயே
அடங்கிட வேண்டும்


தென்றலும் சுடுகிறது
உனை தீண்டாத காற்று
எனை தீண்டியதாலா


மையில்லா
உன் கிறுக்கலில்
பொய்யாய்
ஒரு கவிதையை
ரசித்தே கிறங்குது
மனமும்


அரை நொடி
வந்தாலும்
அருவியாய்
கொட்டி செல்கிறாய்
அன்பை அன்பே


விலங்காக பூட்டிக்கொள்
விலகாமல் இருப்பேன்
உன்னிதய சிறைக்குள்
காலமெல்லாம் காதலோடு


இம்சையான இன்பம்
உன் அமைதி
ஆழ் மனதுவரை
பேரிரைச்சலாய்
ஏதேதோ பேசி
கொல்கிறது


நேசமெல்லாம் வரிகளில்
நீயும் வா(நே)சிப்பாய்
என்றே


மனதை கொள்ளையடித்து
தண்டனையையும்
எனக்கே கொடுக்கிறாய்
நினைவு சிறைக்குள்
தள்ளி


காதலே இல்லாத
கவிதையை காதலிக்கிறேன்
நீ காதலோடு எழுதியதால்


பார்வைக்கு
எட்டாத தூரத்தில்
நீயென்ற கவலையில்லை
மனம் தொட்டு
பேசும் அருகில்
இருப்பதால் நீ


தேடவில்லை
உனை தொலைவது
நானென்பதால் உன்னில்


நீ இல்லையென்று
தெரிந்தும்
ஏதோவொரு நற்பாசை
எதிர்படமாட்டாயோ
என்று விழிகளுக்கு


புதிதாய் ஏதுமில்லை
பேசிய அதே வார்த்தைகள்
மீண்டும் மீண்டும்
புதிதாய் ரசிக்க
தோணுதே
உன்னிதழ் உதிர்ப்பதாலா


பற்றி கொண்டாய்
கரத்தை
பத்தி கொண்டது
காதல் தீ
பார்வைகளின் உரசலில்


சிலமுறை சண்டை
பலமுறை சமாதானம்
மீண்டும் புதிதாய்
காதலென்றே
நிறைவடைகிறது
நம் உரையாடல்
அடுத்து
எப்போதழைப்பாய்
என்ற ஏக்கத்துடனேயே


உன் பக்கங்களை
வாசித்து
என் பக்கங்களை
தொலைத்து
விட்டேன்
நான் நீயாகி


அன்பே என்றாலே
அது நீயென்றாகி
போனது
என் பேரன்பே


மெல்ல மெல்ல
பறிபோகுது மனம்
நீயெனை கொள்ளையடித்த
தருணங்களில்


விழித்ததும்
விழியோரம்
நீ என்
விடியலாய்


நீ வரும்
வழியில்
விழி நொடியும்
யுகமாய் நகர்கிறதே


எங்கோ இருக்கிறாய்
இங்கே கட்டுப்பட்டு
கிடக்கு மனம்
உனதன்பில்


தொடு திரையிலோ
தொடும் தூரத்திலோ
என் எதிர்பார்ப்பு
நீ மட்டுமே


என் வசந்தம்
காலத்தில் இல்லை
உன் காதலில்
அன்பே


காற்றோடு உளறாதே
காதோரம் இசைக்கிறது
உன் காதல் மொழி


காதலிக்க படுவதும்
வரமே
நீயென் வரம்


மௌனம் பிடிக்கும்
உன் வார்தைகளின்
வசீகரத்தில் தொலைந்து
எனை மறந்து
கேட்டு கொண்டிருக்க


எனை ரசிக்க
நினைத்தால்
நீ முந்தி
கொ(ல்)ள்கிறாய்
நினைவாக நானே
உன் ரசனையென்று


பிரித்தெடுக்க முடியாத
சிக்கலாய் சிக்கிக்கொள்ள
பிடிக்கும்
உனதன்பில் அன்பே


விடிந்த பின்னும்
மறையாத நிலவாக
மன வானில்
உலாவுகிறது
இரவின்
நினைவு துளிகள்


சட்டென்று
ஒரு கவிதை
கன்ன ஏட்டில்
ரசிப்பதா ருசிப்பதா
மெய்மறந்து நான்


கொட்டி தருகிறாய்
நேசத்தை
அள்ளி கொள்ள தான்
ஆயுள் போதவில்லை


மனம் பாரமாகும்
போதெல்லாம்
ஏந்தி கொள்கிறாய்
மடியில்
மன சுமைகளை
நீ தாங்கி கொண்டு


நிறை குடமும்
தளும்புது
கண்கள் உனை காண
மனமும் தள்ளாட காதலில்


நீயறியாமல்
உனை சு(வா)சிப்பதும்
ஒரு சுகம் தான்
காதல் கணவா


அணைத்து கொ(ல்)ள்ளும்
நினைவுகளை விரட்டியடிக்கிறேன்
மீண்டும் மீண்டும்
தட்டி தொலைக்குது மனதை
நீயில்லா பொழுதுகளில்


எந்த பக்கத்தை
புரட்டினாலும்
உந்தன் ஞாபகமே
மன ஏட்டில்


தனிமை பிடிக்கும்
நமக்கான உலகில்
சிறகடித்து பறப்பதால்
மனம்


மனதுக்குள்
ஒரு போராட்டம்
எனை கொல்லும் ஆயுதம்
உன் விழி மொழியா
இதழ் மொழியா என்று


யுத்த களத்தில்
எல்லை மீறாதவன்
தடுத்தும் மீறுகிறான்
எல்லை முத்த களத்தில்


நீ காதோடு
கிசுகிசுக்கும்
காதல் மொழிகள்
எல்லாம் மனதை
ரகசியமாய் அலங்கரிக்குது
தனித்திருக்கும் தருணங்களில்


ஆதவன் பார்வையில்
மலரும் தாமரையாய்
உனதன்பின் ஒளியில்
மகிழ்வாய் மலருது
மனம் எனதன்பே


உன் கள்ள சிரிப்பில்
கொள்ளை போகுது
மனம் கள்வனே


கூந்தலை அலங்கரிக்கிறாய்
பூக்களில் மனமோ
கோர்க்குது ஆசைகளை
மாலையாய் நாம் சூடிக்கொள்ள


மகிழ்வாய் நீளும்
நம் பயணத்தில்
எப்போதும்
என் பாதை
நீயே அன்பே


ஆசைகளை துறக்க
நினைத்தால்
மொத்த ஆசைகளின்
உருவமாய்
நீ சூழ்ந்து
கொ(ல்)ள்கிறாய் மனதில்


காற்று தீண்ட
சாயும் நாணலாய்
சாய்கிறேன் நானும்
உன் கண்கள்
காதலாய் தீண்ட
நாணத்தில்


பல முறை
தோற்று போனது பிரிவு
நம் பிரியத்திடம்
நம்மை பிரிக்க நினைத்து


கொடுத்து
செல்கிறேன்
இதயத்தை
எடுத்து வா
காதலிருந்தால்
என் மீது


எங்க போறீங்க இதோ உங்களுக்காக