Here are the Latest Collections of Tamil Quotes and Kavithai SMS for Social Status and Stories.
Tamil Quotes
This is a Mixed SMS List Category - 50+ Tamil Status and Tamil Kavithai Quotes
- Tamil Life Quotes
- Tamil Motivational Quotes
- Tamil Good Morning Messages
- inspirational quotes for youngsters tamil
- தமிழ் தத்துவம்
- Haiku SMS
- காதல் கவிதை
தமிழ் SMS and Status
👇👇👇👇👇👇👇
சிநேகமான புன்னகை
நம்பிக்கை தரும் வார்த்தைகள்
மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
இவைகள் போதுமே
ஒருவருடைய
இன்றைய நாளை
அழகாய் மாற்ற
சிந்திக்காமல் அள்ளி
வீசி விட்டு போங்கள்
அவர்கள் வளர்ச்சியில்
உங்கள் பங்கும் இருக்கட்டும்
தலையணையே அறியும்
கனவுகளை மட்டுமல்ல
கண்ணீரையும்
பேசாத வார்த்தைகள்தான்
பொக்கிஷமென்றால்
நிறைய பொக்கிஷங்கள்
சேர்த்து வைத்திருக்கிறேன்
உன் இதயத்திடம் சமர்ப்பிக்க
நிலையில்லா
நீர்குமிழியல்ல
நட்பு
அதன் உள்ளிருக்கும் காற்று
நிரந்தரமானது
ஆவலாய் காத்திருக்கிறோம்
மழைக்காக குடையும்
உனக்காக நானும்
மறக்க நினைப்பதை
மறக்காமல் நினைப்பதே
மனதுக்கு வேலை
எப்பேர்பட்ட நம்பிக்கையும்
சந்தேகம் என்ற
சிறு தீப்பொறியால்
சிதைந்துதான்போகிறது
கிடைக்காமல்
போன இன்பங்களைவிட
தேடாமல்விட்ட
இன்பங்களே அதிகம்
கடந்துவந்த பாதையே
காலம் நமக்கு
கற்பிக்கும் பாடம்
விடியலின் அர்த்தம்
விளங்கவேயில்லை
நீயில்லா
பொழுதுகளில்
கடந்தகால அலட்சியம்
நிகழ்கால நீர்துளி
எதிர்கால ஏக்கத்துளி
இப்பிரபஞ்சம்
அன்பால் சூழ்ந்த
அன்பின் மையம் கொண்டது
அன்போடு வாழ்வோம்
அன்பு கொண்டு வாழ்வோம்
எந்த சூழலிலும்
நமக்கானவர்கள் நம்மிடம்
வெளிப்படுத்தும்
நம்மை வாழ்த்தும்
அன்பு கொண்ட
நெஞ்சம் இருக்கும் வரை
இவ்வாழ்வு பேரன்பின்
அழகை சார்ந்தது
விதிகள்
வரையறைகள் யாவும்
பேரன்பை பாதிப்பதில்லை
நேரில் இல்லையென்றாலும்
பேச வில்லை என்றாலும்
நம் அன்பில் துளியும்
குறை ஏதும் இல்லை
மொழியோ முத்தமோ
விரும்பி சுவைக்கணும்
திணிக்கப்படாது
உறவுகள் மனம்
நோககூடாதுனு
எந்த விசயத்த மறைக்கின்றோமோ
அதுதான் நமக்கே ஆப்பு
வைக்குது பிரிவை கொடுத்து
உன்னை இயல்பாக
கவர்ந்து வைத்திருக்க
என்னிடம் சொல்லிக் கொள்ளும்
படி எதுவுமில்லை என்னவனே
உன் மீதான பைத்தியமும்
சில கவிதைகளும் தவிர
சிலரின் மௌனம்
திமிரல்ல
அவர்களுக்குள்
இருக்கும் வலி
சோகத்திலும்
இன்பத்திலும்
பிரியாமல்
பிரியமாக இருக்கும்
உறவே போதும்
வாழ்க்கை
சிறப்பாக இருக்கும்
நாம நேசிச்சவங்க
நம்ம கூடத்தான்
இருக்கனும்னு இல்ல
நல்லா இருந்தாலே
போதும்
பொய்யான உலகில்
நானும் ஒரு
ஏமாளி ஆகிவிட்டேன்
அன்பு என்ற
ஒரு வார்த்தையில்
எதிர்பார்ப்பு
நிஜமாகும் போது
வாழ்க்கையும்
அழகாக மாறுகிறது
அதிகமாக பேசுபவன்
அறிவாளியும் இல்லை
அளந்து பேசுபவன்
முட்டாளும் இல்லை
தெரிந்த சிலரிடம்
கொடுத்த பணமும்
தெரியாத சிலரிடம்
காட்டிய பாசமும்
பல நேரம் திரும்ப
கிடைப்பதே இல்லை
நல்லவர்களாக
இருப்பது தவறில்லை
நல்லது கெட்டது
தெரியாத நல்லவராக
இருப்பது தான்
தவறு
கஷ்டப்படுங்கள்
கவலைகள் தீரும்
கவலையாக இருக்காதீர்கள்
ஒருபோதும்
கஷ்டங்கள் தீராது
நீ போகும் பாதையில்
மட்டுமல்ல
போகாத பாதையிலும்
காத்துக் கிடக்கிறது
உனக்காக என் மனசு
எதையும் சாதிக்க
விரும்பும் மனிதனுக்கு
நிதானம் தான்
அற்புதமான ஆயுதமே
தவிர கோபம் இல்லை
உறக்கம் வந்ததும்
என்னை தொலைவில்
வைக்கும் கனவு நீ
வலிமையற்ற வார்த்தைகளும்
வலியைச் சேர்க்கும்
வேண்டியவர் வேண்டாதவராய்
பேசும் போது
வாழ்க்கையில்
எது கிடைக்காமல்
போனாலும் பரவாயில்லை
நம் மீது
அன்பும் அக்கறையும்
கொண்ட சில உறவுகள்
மட்டும் கிடைத்தால்
போதும்
விதி வரைந்த
பாதையில்
விடை தெரியாத
விண்மீன்களாக விரைந்து
செல்லும் வாழ்க்கை
பயணம்
மனைவியை
தாயை போல
பார்த்து கொள்ளும்
ஆணும்
கணவனை
பிள்ளை போல
பார்த்து கொள்ளும்
மனைவியும்
தான் உண்மையான காதலர்கள்
வசந்தம்
ஒரே நாளில்
மலர்ந்து விடுவதில்லை
அதே போல் தான்
வாழ்வில் உயர்வும்
ஒரே நாளில்
கிட்டி விடாது
உயர பறக்க
இறக்கைகள்
தேவையில்லை
ஒரே ஒரு
லட்சியம்
இருந்தால் போதும்
எல்லோருக்கும்
நல்ல வாழ்க்கை
அமையாது
சிலருக்கு அமைஞ்ச
வாழ்க்கையை
ஒழுங்கா வாழத்
தெரியாது
வாழ்த்தினாலும்
தாழ்த்தினாலும்
சிரித்து கொண்டே இரு
காலம் அவர்களுக்கு
பதில் சொல்லும்
அன்பை வெளிப்படுத்த
தேவையில்லை
உணர செய்தால் போதும்
நல்லவர்களாக நடிப்பவர்கள்
மத்தியில் சுயத்தோடு
இருப்பவர்கள்
என்றும் துரோகிகளே
என் அன்பு
எல்லோருக்கும்
கிடைக்கும்
ஆனால் கோபம்
எனக்கு ரொம்ப
பிடித்தவர்களுக்கே
கிடைக்கும்
இப்படி இருக்க
கூடாதுனு
நினைச்சாலும் சூழ்நிலை
இப்படியே
இருக்க வைக்குது
உண்மையாக இருந்து
என்ன பயன்
கிடைப்பது எல்லாம்
தவறான பெயர்கள்
மட்டுமே
நிம்மதிக்கான
இரண்டு வழிகள்
விட்டுக்கொடுங்கள்
இல்லையேல்
விட்டு விடுங்கள்
கொண்டு செல்ல
எதுவும் இல்லாத உலகில்
கொடுத்து செல்வோம்
அன்பையும் பாசத்தையும்
வாழ்க்கையில் நமக்கு
கிடைக்கும்
சிறந்த பரிசு
பிறர் நம்மீது வைக்கும்
நம்பிக்கை தான்
அன்பிற்கு
தெரிந்ததெல்லாம்
உள்ளதை
உள்ளபடி ரசிப்பதே
நம்மை பற்றி
யார் என்ன
நினைத்தால்
நமக்கு என்ன
நம்மை பற்றி
நாம் அறியாததையா
அவர்கள் அறிந்திட
போகிறார்கள்
முற்றுப்புள்ளி இல்லா
உரையாடல் நட்பிற்கு
மட்டுமே சொந்தம்
வலி கொடுக்காத
முதல் காதலும்
இறுதி காதலும்
தாய்க்கும் பிள்ளைக்கும்
இடையிலானது
காலத்தில்
செய்யும் உதவியும்
காலம் தாழ்த்தாமல்
சொல்லும் நன்றியும்
காலங்கள் போனாலும்
நெஞ்சிலே நிலைத்திருக்கும்
புரிந்து
கொள்ளப்படாததை விட
வேதனையானது
தவறாய் புரிந்து
கொள்ளப்படுவது
சிலர் காயப்படுத்தும்
போது வராத வலி
அதை நியாயப்படுத்தும்
போது வந்துவிடுகிறது
உன்னை விட
சிறந்த காதலர்
யாரும் இல்லை
உன்னை நீயே
காதல் செய்யும் வரை
எனக்கே எனக்கென்று
கடவுள் படைத்த
கவிதை நீ
முடியும்வரை
அல்ல நான்
அழியும்வரை படிப்பேன்
விடைகள்
சில தேடுகையில்
வினாக்களே
பல கிடைக்கின்றன
வாழ்க்கையில்
தவமிருந்தேன்
தனிமையை தவிர்பதற்கு
நினைவில் வந்தாய்
என்னை இன்பத்தில்
இணைப்பதற்கு
இதயத்தில்
இருக்கட்டும் துடிப்பு
உன் மனதில்
இருக்கட்டும்
என் நினைப்பு
பொய்யான அன்பு
பொழுதுபோக்கான பேச்சு
தேவைப்படும் போது தேடல்
இது தான் இங்கே
பலரது வாழ்க்கை
இந்த உலகத்திற்கு
ஒரு பொய் முகம்
போடுவதாக நினைத்து
கொண்டு உனக்கே
ஒரு பொய்
முகம் போட்டு
உன்னை இழந்து விடாதே
உள்ளத்தில்
பார்வை ஊனமானால்
அருகில் இருக்கும்
உண்மையான
அன்பு கூட தெரியாது
சொல்வது யாருக்கும்
எளிதான விஷயம் தான்
சொன்ன வாக்கை
காப்பாற்றுவது தான்
அரிதானது
நமது மனம்
தான் நம்மை
வீழ்த்தக்கூடிய
மிகப்பெரிய ஆயுதம்
அது தெளிவாக
இருந்தால்
நம்மை யாராலும்
வீழ்த்த முடியாது
அளவுக்கு மீறிய சந்தோஷமும்
அளவுக்கு மீறிய கவலையும்
ஒரு மனிதனை நிம்மதி
இல்லாமல் ஆக்கிவிடும்
வாழ்க்கை
என்ற படத்தில்
சிறப்பாக நடிப்பவர்கள்
நல்லவர்களாகவும்
நடிக்கத் தெரியாதவர்கள்
கெட்டவர்களாகவும்
ஆக்கப்படுகின்றனர்
சந்தோஷமா இருக்கறது
கெத்து தான்
ஆனா சந்தோஷமா
இருக்கற மாறி
நடிக்கிறது
அத விட கெத்து
இந்த வாழ்க்கை
உனக்காக
படைக்கப்பட்டது
அதை
மற்றவர்களுக்காக
இழந்து விடாதீர்கள்
நம்மள விட்டுட்டு
போனவங்களுக்கு
நாம கொடுக்குற
பதிலடி அவங்க முன்னாடி
சந்தோஷமா வாழ்ந்து
காட்டுறது தான்
வார்த்தைகள்
பல இருந்தும்
மௌனம் ஆகிறேன்
என்னை பேச விடாமல்
உன் அன்பானது
கட்டி போடுவதில்
வல்லமை பெற்றதால்
உனக்கான உலகத்தில்
உனக்கு பிடித்ததுப்
போல் கெத்தா
வாழ்ந்து பார்
அதுதான் நீ
உறவில் ஒருமுறை
பிரிவு வந்தபின்
மீண்டும் தொடர்ந்தாலும்
முதல் முறை
போல் நம்பிக்கையும் அன்பும்
முழுமையாக இருப்பதில்லை
கடந்து போக
கற்றுக்கொள்
மாயமான இவ்வுலகில்
காயங்களுக்கு நியாயங்கள்
தேடாமல்
வாழ்க்கைல நமக்கு
யாரும் இல்லணு
நினைக்காதீங்க
வாழ்க்கையே நமக்காகத்தான்
இருக்குணு
நினைச்சி வாழுங்க
பழகியதற்கான
பலனை அடைந்தவுடன்
சிலர் விலகுவதற்கான
காரணங்களை
தேடுகின்றனர்
மாற்றம் என்கிற
வார்த்தையை தவிர
அனைத்தும்
மாறிக் கொண்டு தான்
இருக்கிறது மனிதனின்
மனம் உட்பட
சொல்லில்
கூறத் தேவையில்லை
செயல்களே போதும்
நாம் அவர்கள் மனதில்
எந்த இடத்தில்
இருக்கிறோம்
என்பதை உணர
அக்கறை எல்லாம்
அக்கரையில் இருக்கும்
வரை தான்
இக்கரை வந்தால்
அக்கறை காணாமல்
போகும்
எனக்காக
நீயிருக்கின்றாய்
என்ற உணர்வே
வாழ்க்கையை
அழகாக்கி
கொண்டிருக்கின்றது
ஒவ்வொரு நொடியும்
நமக்கு பிடித்தவர்களின்
மாற்றத்திற்காக
நம் வாழ்வினை வெறுக்க
தொடங்கிவிட்டால்
வாழ்கின்ற ஒவ்வொரு
நொடியும் நரகமே
என் விழிகளுக்குள்
நீ இருக்கும் வரை
என் கனவுகளும் தொடரும்
சந்தோஷம்
என்பது பிரச்சனை
இல்லாத வாழ்க்கையை
வாழ்றது இல்ல
எவ்வளவோ பிரச்சனை
வந்தாலும்
சமாளிச்சு வாழ்றது
எவை எல்லாம்
மகிழ்ச்சியை தருமோ
அவை அனைத்தும்
உங்களுக்கு கிடைக்கும்
ஒரு புதிய வாரமாக
அமைய வாழ்த்துக்கள்
உங்களிடம்
எப்படி மற்றவர்
நடந்து கொள்ள
வேண்டுமென
நீங்களே தான்
கற்றுக் கொடுக்கிறீர்கள்
உள்ளுக்குள்
ஆயிரம் வலிகள்
இருந்தாலும் வெளியே
சிரிச்சு பேசுற
இந்த மனசு தான்
மனித பிறவிக்கு
கிடைச்ச வரம்
நினைவிலும் கனவிலும்
நெருங்கியும் விலகியும்
நீ போதும்
என் இந்த பிறவிக்கு
பொய்யை
உண்மை போல்
பேசி வாழ்பவர்
ஒரு நாள்
அந்த பொய்யாலே
தங்கள் வாழ்க்கையை
இழப்பர்
தெரிந்ததை பகிர்ந்து கொள்
தெரியாததை அறிந்து கொள்
மற்றவர்கள் சரியில்லை
என்பது மட்டும்
குறை இல்லை
நாமும் சில விஷயங்களில்
சரியாக இருந்து
விட போவதில்லை
இன்று நீ நாளை நான்
கற்பனை
நிஜம் இல்லை
என்று தெரிந்தாலும்
மனம் என்னவோ
கற்பனையை தான்
நேசிக்கிறது
உண்மையான அன்புக்கு
பிரிவு என்பது
ஒரு தொடக்கம் தான்
நிஐங்களில் தொலைத்து
கொண்டாலும்
நினைவுகளில் தொலைக்க
வில்லை உன் நட்பை
எளிதில் மேலே போக
எஸ்கலேட்டர் உதவினாலும்
முதல் படியிலும்
கடைசி படியிலும்
கவனமும் நிதானமும் தேவை
வாழ்க்கையில்
மேலே போகவிரும்புபவர்களுக்கும்
இதே கவனமும்
நிதானமும் தேவை
உன்னை உயிராக
மதிக்கும் உயிரை
நீ மதிக்காமல் இருந்தால்
நீ உயிராக மதிக்கும்
எந்த உயிரும்
உன்னிடம் இருக்காது
அன்பு
குறைந்து விட்டால்
குறைகள் பெரிதாகிவிடும்
கனவுகள் கலைந்தாலும்
நினைவுகள் அழகு
கற்பனைகள் தீர்ந்தாலும்
காதல் அழகு
உப்பு இருந்தால் தான்
உணவு சுவைக்கும்
அதுபோல
நட்பு இருந்தால் தான்
வாழ்க்கை இனிக்கும்
நினைக்கிறது எல்லாம்
நடக்குறதேயில்லை
நடந்துருமோன்னு பயப்படுறது
மட்டும் கரெக்டா நடக்குது
அன்பாயிருங்க
அதுக்குனு அடிமையாயிடாதீங்க
இரக்கம் காட்டுங்க
ஆனால் ஏமாந்திடாதீங்க
அன்பும் பண்பும்
எண்ணங்களில்
இருந்தாலே போதும்
செயல்கள் அனைத்தும்
ரசிக்கும்படி அமையும்
எதிர்பார்ப்பில்லாம
வாழ கற்றுக்கொள்கிறேன்
ஏமாற்றங்களை சந்தித்தபின்
பிறரை மதிப்பதில்
இருக்கிறது
உனக்கான மதிப்பு
ஒவ்வொரு நாளும்
விடியும் போது
ஒரு எதிர்பார்ப்பு
ஒவ்வொரு நாளும்
முடியும் போது
ஒரு அனுபவம்
நீயென்ற சொல்லில்
வாழ்கிறேன் நான்
நானென்ற சொல்லில்
ஆள்கிறாய் நீ
பிடித்தவர்களிடம்
பேசி கொண்டே
இருக்க வேண்டும்
என நினைக்காதீர்கள்
அந்த எண்ணமே அவர்களை
நம்மிடமிருந்து பிரித்து
வைத்து விடும்
நன்றாக பேசிக்கொண்டே
இருப்பது
மட்டும் திறமையல்ல
சில நேரங்களில் பேசாமல்
இருப்பதும் திறமையே
வாசிக்க முடியாத
கவிதை நீ
வாசிக்க ஆசை
உன் மனம்
என்ற புத்தகத்தை
எதும் தவறில்லை
என்ற போக்கு
உருவானால்
எல்லாமே தவறாகிப்
போகும் வாழ்வில்
எதையும் எதக்காகவும்
தூக்கி எறிந்து விடாதே
அன்பாக விட்டுக்கொடு
எல்லாவற்றையும்
கனவில் மட்டுமே
என் வாழ்க்கை
நான் விரும்புவதை
போல் அமைகிறது
நிஜத்தில் அல்ல
உண்மையான
வெற்றி என்பது
நம் அன்பிற்கு
உரியவர்களிடம்
தோற்பதில்
தான் இருக்கிறது
எல்லா பயணமும்
நாம் நினைத்த
இடத்தில் முடிவதில்லை
வழி தவறிப்போகும்
சில பயணங்கள் தான்
வாழ்கையில் பல பாடங்களை
நமக்கு கற்றுத் தருகின்றது
ஒரு தோழனிடம் உணரும்
தாயின் அன்பு
ஒரு தோழிக்கு
விலை மதிக்க
முடியாத பொக்கிஷம்
சில சமயங்களில்
இழப்புதான் பெரிய
ஆதாயமாக இருக்கும்
பிடிவாதம் கொண்ட
எந்த பெண்ணின் கர்வமும்
உடைந்து போகும் தனக்கு
பிடித்த ஆணுக்காக
வாழ்க்கை நம்மல
சந்தோஷமா வாழ விடாது
நம்மல நாம சந்தோஷமா
வச்சிக்கிறது தான்
நம் திறமையே
ஆசைப்படுவது எல்லாம்
அனுபவமாக கிடைக்கிறது
உதட்டில் புன்னகை
மட்டும் மாறாமல்
உடலின் தோற்றத்தை மட்டுமே
உலகம் ஏற்றுக்கொள்கிறது
உள் மனதின் தோற்றம்
யாருக்கும் தெரிவதில்லை
முற்றுப்புள்ளியாய்
முடிந்துவிடுவாயோயென
நினைத்தேன்
காற்புள்ளியாய் தொடந்துகொண்டே
இருக்கிறாய்
கண்ணீர்
சிந்த வைக்கும்
உறவை கண்களில் வை
கண்ணீர்
வராமல்
பார்த்துக்கொள்ளளும்
உறவை இதயத்தில் வை
பாசம் தேடி
அலைவதில்
பாதி வாழ்க்கை
முடிந்து விடுகிறது
பாசம் வைத்து
அழுவதில்
மீதி வாழ்க்கையும்
தொலைகின்றது
ஒரு அடி எடுத்து
வைப்பதற்கு
ஓராயிரம் முறை
யோசிக்கலாம் ஆனால்
எடுத்து வைத்துவிட்டால்
ஒரு நொடி கூட
யோசிக்கக்கூடாது
வாழ்க்கையில்
சிலர் எதற்கு வருகிறார்கள்
என்றும் தெரியாது
சிலர் எதற்கு போகிறார்கள்
என்றும் தெரியாது
அமைதியாக விலகுவதே
ஆயிரம் வார்த்தைக்கு
சமம்
அமைதி கூட
ஒரு ஆயுதம் தான்
காரணம்
அது கூட
சில நேரங்களில்
மரணத்தை பரிசளிக்கும்
உறவுகள் எல்லாம்
வெறும் வார்த்தைகள்
மட்டுமே வாழ்க்கையில்
இல்லை
கொஞ்சி பேசி தான்
அன்பை சொல்லணும்னு
அவசியம் இல்லை
சின்ன புன்னகை போதும்
மனிதனின்
தேவைகளும்
தேடல்களும்
ஒரு போதும்
நிலையானதாக
இருப்பதில்லை
உற்றுப் பார்த்தால்
ஒன்றுமே இல்லை
ஆனாலும்
ஏனோ விட்டு விலக
மனம் வருவதே இல்லை
இயற்கையின் அழகை
சொன்னேனாக்கும்
வெறுப்பை
சொல்வதற்குத்தான்
வார்த்தைகள் வேண்டும்
அன்பை சொல்வதற்கு
கண்களே போதும்
அன்பு உன் மனதில்
இருந்தால்
அழகு உன் முகத்தில்
இருக்கும்
வலி தந்தவர்களையும்
வாழ்த்தவே செய்கிறது
உண்மையாய் நேசித்த நெஞ்சம்
எதையும்
பொறுமையோடு தேடு
பொறாமையோடு தேடாதே
வாசித்த கவிதைகளில்
யோசிக்க வைத்த வரிகள் நீ
நேசித்த இதயத்தில்
சுவாசிக்க வைத்த இதயம் நீ
அவர்களெல்லாம்
அப்படி கிடையாது என
நினைக்க வைக்கும் சிலர்தான்
அப்படியாகவே இருக்கிறார்கள்
எனக்குள் இருக்கும்
சில கவலைகளும்
கரைந்து போவதே
உன்னால் தான்
பொய்யை அப்படியே
ஏற்றுக் கொள்கின்ற உலகம்
உண்மையை மட்டும்
எப்போதுமே எளிதில்
ஏற்றுக் கொண்டதில்லை
நாம யாருக்கும் அட்வைஸ்
பண்ணவும் கூடாது
நமக்கும் யாரும் அட்வைஸ்
பண்ணவும் கூடாது
இது நம்ம லைவ் நமக்கு
எப்பவும் கெத்து தான்
முக்கியம்
பழி சொல்லத் தெரிந்த யாரும்
உனக்கு வழி சொல்ல
போவதில்லை
உன் வாழ்க்கை
உன் கையில்
புன்னகை மட்டுமே
கடினமான செயலைக்கூட
எளிமையாக்கும்
கேக்க முடியாத
கேள்விகளும்
சொல்ல முடியாத
பதில்களும்
என்றுமே சுவாரசியமினவை
இறைவன் வேண்டுவதைத் தருபவரல்ல
வாழ்க்கைக்குத் தேவையானதைத் தருபவர்
வார்த்தைகளில் கவனம்
உங்களை ஒவ்வொரு
கணமும் உயர்த்தும்
மாறும் உலகிற்கு
மாற்றங்கள்
தேவை தான்
மனதிற்கு அல்ல
விலகாத உறவுகள்
வேண்டுமென்று
நினைக்கிறோம்
என்ன செய்ய
சில உறவுகள்
விலகி இருந்தால்
தான் நீடிக்கிறது
சாதனை என்ற வார்த்தையாய்
நெருங்கும் போது
சோதனை என்ற வார்த்தையாய்
கடக்கவேண்டும்
வலியும் வேதனையும்
இல்லையெனில்
வெற்றிக்கு இடமில்லை
எல்லோருமே
நாம் நாமாய்
இருப்பதாய் நினைக்கிறோம்
உண்மையில் எல்லோருமே
நம்மை நாமாக
காட்டவே நடித்து
கொண்டிருக்கிறோம்
எல்லாம் கடந்து
போனாலும்
எதுவும் மறந்து
போகாமல்
நினைவுகளின் ஆக்கிரமிப்பில்
நம் வாழ்க்கை
பயணம் நகருகிறது