{2019} - Latest Collections of Tamil Kavithai and Quotes Collections - தமிழ் கவிதை SMS.

Tamil SMS in Tamil Font

தமிழ் கவிதைகள் 2019


Random Category Post Collections

😌 Tamil Life Quotes
🙂 Tamil Motivational Quotes
😍 தமிழ் அன்பு கவிதை
💁 தமிழ் தத்துவம்


Tamil Kavithai SMS

👇👇👇👇👇


பல வருடம் வாழும் மனிதன்
அழுது கொண்டேபிறக்கிறான்
ஒரு நாள் மட்டுமேவாழும் பூக்கள்
சிரித்து கொண்டே பூக்கிறது...!


கஷ்டங்களை
காதலித்து பார்
அதை நினைத்து
வேதனைப்படுவதைவிட
உனக்கென
வாழ்க்கை வெளிச்சத்தை
அது காட்டும்...!


வாழும் காலம்
சிரிது என்பதால்
நேரத்தை விரயம்
செய்யாதே வெற்றியின்
தொலைவு தூரம் என்பதால்
முயற்றியை கைவிடாதே


வாழ்க்கையைப்
பற்றி யோசிப்பவன்
காதலிப்பதில்லை
காதலிப்பவன்
வாழ்க்கையை பற்றி
யோசிப்பதில்லை
இதை புரிந்தவன்
இரண்டிலும்
தோற்பதில்லை...!


என்னை
பிடிக்க முடியாது
என்று சிரித்துகொண்டே
ஓடும் குழந்தையின்
அழகு ஓர் அபூர்வம்...!


நமக்கான
உயர்ந்த உணர்வு
நம் சுயமதிப்பு மட்டுமே...!


நீ விரும்புவதை செய்வதில்
உன்சுதந்திரம் அடங்கியுள்ளது
நீ செய்வதை விரும்புவதில்
உன்மகிழ்ச்சி அடங்கியுள்ளது


காதலித்தால்
தான் கவிதை வருமாம்
நானும் காதலிக்கின்றேன்
கவிதையெழுத தாய்மொழியை


குழந்தைகள் செய்யும்
குறும்புகளும் சுகமே
தாயின் பார்வையில்


தனக்கு
திறமை இருக்கிறது
என்பதை ஆணவத்தால்
வெளிப்படுத்துவதை விட
ஆசானாய் இருந்து
வெளிப்படுத்த முயல்வதே
ஆகச் சிறந்தது


ஒருவருக்கொருவர்
விட்டுக் கொடுத்து சென்றால்
காதல் வாழ்க்கை சுகமாகும்
ஒருவரை ஒருவர்
விட்டுக் கொடுக்காமல் தொடர்ந்தால்
நட்பு வாழ்க்கை இனிதாகும்


காயங்களோடு சிரிப்பது
அவ்வளவு எளிதல்ல
அப்படி சிரிக்க பழகிக்கொண்டால்
எந்த காயமும் பெரிதல்ல


எவ்வளவு
தூரம் போனாலும்
இன்னும் கொஞ்சம்
தூரம் இருக்கு
என்ற ஆர்வத்தை
கொடுப்பது தான்
வாழ்க்கையின் அழகியல்


நாம் செய்த தவறுக்கு
கிடைக்காத தண்டனை
செய்யாத தவறுக்கு
கிடைக்கும் போது தான்
வாழ்க்கையே புரிய
ஆரம்பிக்கிறது


கஷ்டங்களை தாங்கும் இதயம்
காயங்களை தாங்காது
வலிகளை தாங்கும் இதயம்
கடுமையான வார்த்தைகளை தாங்காது
ஏமாற்றத்தை தாங்கும் இதயம்
துரோகத்தை தாங்காது


ஒருவரின்
அன்பு உங்களை
பெருமை படுத்தினால்
அதன் கரம் பற்றி
முன்னேறுங்கள்
சிறுமை படுத்தினால்
அதை கை கழுவி
விட்டு முன்னேறுங்கள்


நீ எதை
வேண்டுமானாலும் இழக்கலாம்
வலி கொடியது
தன்னம்பிக்கையை
மட்டும் இழக்காதே
வாழ்க்கை பெரியது


உலகில் எத்தனை
வர்ணங்கள் இருந்தாலும்
அத்தனையும்
தோற்றுதான் போகின்றது
உந்தன் கரங்கள் முன்


வாழ்வில்
நதிபோல் ஓடிக்கொண்டே
இருங்கள்
அன்பினால்
குளம்போல் தேங்கி
வற்றிவிடாதீர்கள்


லட்ச நட்சத்திரங்கள்
கண்ணுக்கு தென்பட்டாலும்
ஒற்றை நிலவே
மனதில் நிலைத்து நிற்கிறது


இனிமேல்
இழக்க ஒன்றுமில்லை
என்ற நிலைக்கு
வந்து விட்டால்
புன்னகை செய் அதன்
அடுத்த நிலை தான் வெற்றி


பிரியமுள்ள உறவுடன்
பிரிய மனமில்லாமல்
பிரியமுடன் வாழும்
வாழ்க்கையே
ஒரு தனி
அழகு தான்


ஒரு மனிதனின்
அழகு என்பது
அவன் முகத்தில்
இல்லை
அவன் பேசும்
நாவின்
இனிமையில் இருக்கிறது


எல்லா பயணங்களும்
நாம் நினைத்த இடத்தில்
சென்று முடிவதில்லை
வழி தவறிச் செல்லும்
சில பயணங்கள் தான்
நமக்கு வாழ்க்கையில்
பல பாடங்களைக்
கற்றுத் தருகிறது


நாட்கள் கடக்கிறது
தினம் பல
அனுபவங்கள் கிடைக்கிறது
ஆனால் போகும் தூரமும்
போகிற பாதையும்
சூழ்நிலை தான் வகுக்கிறது


சில கேள்விகளுக்கு
புன்னகை பதில்
என்றாலும் அந்த
புன்னகைக்குள் எத்தனை
ரணமென்று அவர்கள்
மனம் மட்டுமே அறியும்


நல்ல எண்ணங்களுக்கு
கமா போட்டிடுங்கள்
தீய எண்ணங்களுக்கு
முற்றுப்புள்ளி வைத்திடுங்கள்
வாழ்க்கை வாழ்வதற்கே


எவ்ளோ கஷ்டங்கள்
வந்தாலும் அதுல
இருந்து மீண்டு
மறுபடியும் அடுத்த
சந்தோசத்த தேடி போற
குழந்தை போல
மனசு வேணும்


உலகிலே மிக எளிமையானது
பிறர் குறை காண்பது
மிக மிக கடினமானது
தன் குறை உணர்வது


எப்பொழுதும்
மனதை மகிழ்ச்சி
பொங்க வைத்திருங்கள்
சிறு கவலையும் பாதிக்காது
பெரும் துன்பமும்
கடந்து விடும்


வாழ்க்கையின்
வேகத்தைக் கண்டு
முறிந்து போய் விடாதே
பிரச்சனைகளுக்கு ஏற்ப வளைந்து
கொடுத்து செல்ல
பழகிக் கொள்


சின்ன சின்ன
ஆசைகள் தான்
எதிர்பார்ப்பு தான்
ஆனால் அவை
நடந்தேரினால்
வாழ்க்கை மகிழ்ச்சி


சில விசயங்களை
எளிதில் மறந்துவிடும்
பாக்கியம் எல்லோருக்கும்
எளிதில் கிடைப்பதில்லை


தொலை தூரத்தில்
இருந்தாலும்
நமது நினைவுகளை
தொலைக்காமல் இருப்பவர்களே
உண்மையான உறவுகள்


இழந்து நிற்பது கூட
முட்டாள்தனம் அல்ல
இழந்ததை எண்ணி
இருப்பதையும்
இழப்பது தான்
பெரிய முட்டாள்தனம்


நம்மை
மாற்றத் துடிப்பவர்களிடம்
கொஞ்சம் அன்பாக
பழகிப் பாருங்கள்
தங்களை மறந்து
அவர்கள் உங்களுக்காக
மாறி இருப்பார்கள்
ஏனெனில் மாற்றம்
ஒன்றே மாறாதது


நாம் வெற்றி
பெற வேண்டும்
என்று உழையுங்கள்
அடுத்தவர்களை
தோற்கடிக்க வேண்டும்
என்று நினையாதீர்கள்


முட்டாள்
பழி வாங்க துடிப்பான்
புத்திசாலி
மன்னித்துவிடுவான்
அதி புத்திசாலி
அந்த இடத்திலிருந்து
விழகி விடுவான்


நீங்கள் தேடுவது
நீங்கள் தொலைத்தவைகள்
மட்டுமல்ல உங்களுக்கு
கிடைக்காதவைகளும் தான்


சில வார்த்தைகளை
சொல்லாமல்
மறைப்பதும் சுகம்
சில வார்த்தைகளை
சொல்வதும் சுகம்


எல்லோருக்குள்ளும்
இருக்கிறது
ஏதோவொரு தேடலும்
முடியா காத்திருப்பும்


அவமானங்கள் என்றும்
பிறரால் ஏற்படுவதில்லை
தமக்கு தம்மால் ஏற்படுத்தி
கொள்ளப்படுகிறது


விழுவதற்கு
உன்கால்கள் முடிவு செய்யட்டும்
எழுந்து ஓடுவதற்கு
உன் மனதை தயார்
படுத்தி வைத்துக்கொள்ளுங்கள்
விழுவது உங்கள் கால்களாக இருந்தால்
எழுந்து ஓடுவது
உங்கள் மனமாக இருக்கட்டும்


தன்னம்பிக்கையோடு துவங்கப்படும்
எல்லா வேலைகளுக்கும்
நல்ல நேரங்கள்
தேவைப்படுவது இல்லை


நான்கு பேர்
உன்னை தலை நிமிர்ந்து
பார்க்க வேண்டுமெனில்
யாரையும் திரும்பி பார்க்காமல்
உன் செயல்களில் மட்டும்
கவனத்தைச் செலுத்து
மற்றவர் வழியில்
நீ உட்புகாத வரையில்
உன்னைப் பிரச்சனைகள்
பின் தொடராது


ஒருவரின்
தேவை அறிந்து
அவர் கேட்காமலே
உதவி செய்வாயின்
நீங்களும் கடவுளே


சிலரிடம்
சில விஷயங்களை
புரிய வைக்க
கஷ்டபடுவதை விட
சிரித்துவிட்டு
கடந்து செல்வது
நல்லது


நற்குணங்களை
தகுதியாக்கிக் கொண்டு
நான் இப்படி தான்
என்று நிலைத்து நில்லுங்கள்
புரிபவர்கள் புரிந்து வருவார்கள்
புரியாதவர்கள் விலகி செல்வார்கள்
எதுவாகினும் நட்டம் நமக்கில்லை


நேற்றைய இழப்பை
மறந்து
நாளைய வெற்றியை
நோக்கி
இன்றைய பொழுதை
தொடங்குவோம்


அன்பாக இரு அனைவரிடமும்
அடிமையாக இருக்காதே யாரிடமும்


ஏமாற்றுபவர்கள்
கொண்டாடுவதும்
ஏமாறுபவர்கள்
திண்டாடுவதும்
மாறாது
உண்மையான அன்புக்கு
பஞ்சம் இருக்கும் வரை


ஒரு மனிதனுக்கு
பலமும் பலவினமும்
அவருடைய மனச
பொருத்து தான் இருக்கு


புதிய பாதையில்
பயணிக்க ஆசை
என் கனவுகளுடன்
மட்டும்


நாம் தடுமாறும்
போதெல்லாம்
தோள் கொடுக்கும்
உறவே இறுதிவரை
நிலைத்திருக்கும்


நீ மற்றவர்களை
நேசிக்கும் முன்
உன்னையே நீ
நேசித்து பார் வாழ்க்கை
அழகாக தெரியும்


கனவின் மிச்சத்தை
உயிர்ப்பிக்க முடியாமல்
உணர்வின்றியே
உதித்துக்கொண்டுதானிருக்கிறது
ஒவ்வொரு விடியலும்


காலம் உன்னை மாற்றிட
பல முயற்சிகள் எடுக்கும்
தோற்று விடாதே
காலமே ஒரு நாள் மாறிவிடும்


ஏமாற்றங்கள் பழகிவிட்டது
என்பதற்காக
ஏமாந்து கொண்டே இருப்பது
முட்டாள்தனம்


எல்லா விசயங்களிலும்
நேருக்கு நேர்
போய் தான்
ஜெயிக்க வேண்டுமென்றல்ல
சில விசயங்களில்
விலகி நின்றாலே
ஜெயிச்ச மாதிரி தாங்க
பலருக்கும் நிம்மதி
கொடுத்த திருப்தி


எதையும் மறக்க முயற்சித்து
நிம்மதிய இழக்காதிங்க
அதை அதை அப்படியே
விட்டுவிடுங்கள்
காலம் மாற்றிவிடும்


உன் வாழ்வில்
வரும் சிக்கல்களை
கடக்கும் போது
சிரித்துக் கொண்ட
கடக்க முடிந்தால்
உலகில் உன்னை விட
வலிமையானவர் யாருமில்லை


அளவோட இருந்தால்
மட்டுமே அதுக்கு மதிப்பு
அன்பா இருந்தாலும்


இவ்வாழ்வு எப்போதும்
அழுது தீர்ப்பதற்காக
அல்ல கொண்டாடி
மகிழ்வதற்காகவும் தான்


எல்லைமீறிய கோபத்திலும்
கையிலிருக்கும் செல்போனை
விட்டெறிய கூடாது
என்றிருக்கும் நிதானம்
வார்த்தைகளில்
இருப்பதில்லை நம்பலருக்கும்


உன் சொற்கள் எப்படி
இருக்கிறதோ அந்த
அளவுக்கு தான்
உனக்கான மதிப்பும் இருக்கும்


துணிச்சல் என்பது
ஒருவரை பேச விடாமல்
செய்வது அல்ல
அனைவரையும்
நம்மை பற்றி
பேச செய்வது


சில தருணங்களில்
பலமாகவும்
சில தருணங்களில்
பலவீனமாகவும்
அமைந்து விடுகிறது
பிறர் மேல்
நாம் வைக்கும் நம்பிக்கை


உன்னை செதுக்கி
கொண்டே இரு
சிலையாகவில்லையானாலும் சரி
கல்லாய் இருக்காதே


பலர் விரும்பியும்
கிடைக்காத வரம்
நிம்மதியான உறக்கம்


நமக்கான
ஆறுதல் என்பது
நம்மிடம் தான் உள்ளது
மறந்து போவதும்
கடந்து செல்வதும்


காதலர் தினம் Special