Here are the Latest Collections of Tamil Facts - Tamil Random kavithai 🎲 and Quotes.

Tamil Facts 📖 - Tamil Valkai Thathuvam and Quotes.

தமிழ் Facts

  • Tamil Life Quotes
  • Tamil Motivational Quotes
  • Tamil Quotes
  • Tamil Status
  • தமிழ் SMS and Kavithaigal

Tamil Random Facts and kavithai

👇👇👇👇👇👇


மனிதம் இருக்கு
என்று நம்புங்கள்
அதை மற்றவர்களிடம்
இருந்து மட்டும்
எதிர்பார்த்து விடாதீர்கள்


மனபாரங்களால்
வீழ்ந்திடாமல்
தாங்கிக்கொள்ள
செய்கிறதே
இச்சிரிப்பு


எல்லா எதிர்பார்ப்புகளிலும்
ஏமாற்றம் என்ற பரிசும்
எல்லா ஏமாற்றத்திற்கு
பிறகும் பக்குவம்
என்ற பரிசும்
கிடைப்பதற்கு
பெயர் தான் வாழ்க்கை


மற்றவர்களை
தரம் தாழ்த்தி பேசுவதால்
ஒருபோதும் அவர்களின்
தரம் குறையப் போவதில்லை


மற்றவரோடு
நம்மை ஒப்பிட்டால்
ஒன்னு தாழ்வு
மனப்பான்மை ஏற்படும்
இல்லைனா தலைக்கணம் அதிகமாகும்
ரெண்டுமே வாழ்க்கையில
தேவையில்லாத ஆணி தான்


வெற்றி என்பது
ஒவ்வொரு முறையும்
முதல் இடத்தை
பெறுவது என்று
பொருள் அல்ல
இன்று வெற்றி
பெற்றாய் என்றால்
உன் செயல்பாடு
சென்ற முறையை
விட இம்முறை
சிறப்பாக உள்ளது
என்று மட்டுமே பொருள்


முறியாத சோம்பலை
உடைத்தெறிந்து விட்டு
விண்ணை எட்டும்
நம்பிக்கை பலமேற்றி
சாதிக்கும் முயற்சியை
பார்வையில் நிறுத்தி
உலகை வலம் வரும்
அன்பார்ந்த உறவுகளுக்கு இந்நாள்
இனிய நாளாக வாழ்த்துக்கள்


நாம் பிறருக்கு
செய்வதையே
நாமும் அடைவோம்
அன்பை கொடுத்தால்
அன்பு
வம்பை கொடுத்தால்
வம்பு


வான்வெளியில்
மாயம் நிகழ்ந்தது
மழை பெய்தது
மண் மலர்ந்தது
கார்மேகம் கண்ட
மயில் போல
என் மனம் மகிழ்ந்தது
(மழை)


புகழ்ந்தாலும்
இகழ்ந்தாலும்
புன்னகையோடு
கடந்து செல்பவரே
சரித்திரம் படைக்கிறார்


சொல்வதற்கு
ஒன்றுமில்லாத இடங்களில்
வணக்கத்துடன்
புன்னகை மட்டுமே
உதிர்த்து விட்டு
செல்லுங்கள்
உங்கள் மீதான
மதிப்பு உயரும்


நட்புக்களின்
எண்ணிக்கை எப்போதும்
மகிழ்ச்சியை தருவதில்லை
நல்ல எண்ணங்கள் கொண்ட
நட்புக்களே வாழ்வில்
நிலையான மகிழ்ச்சியை
அள்ளித் தர முடியும்
சிறப்பான நண்பர்களை
தேர்ந்தெடுங்கள்
சிறப்பான நண்பர்களாக
மற்றவர்களுக்கு திகழுங்கள்


நீ
எங்கு சென்றாலும்
உன்னை பற்றி
குறை கூறவே
சிலர் காத்துக்
கொண்டிருக்கும்
உலகம் இது
உன்னைப் பற்றி
குறை கூற அவர்கள்
உத்தமர்களும் இல்லை
அவர்கள் கூறியதை
எண்ணி கவலைப்பட
நீ கோழையும் இல்லை


தவமிருந்தாலும்
கிடைக்காத வரம்
பெற்ற அன்னையை
குழந்தையின்
வடிவில் பார்ப்பது
பல முறை ரசிக்கவைத்த காட்சி


நிம்மதி வேண்டுமென்று
தேடுகிறார்களே தவிர
ஆசைகளை கைவிட
யாரும் நினைப்பதில்லை
ஆசைகளை துறந்து பாருங்கள்
நிம்மதி என்றும்
உங்கள் வசப்படும்


எத்தனை பேர்
என்ன சொன்னாலும்
நமக்கு பிடித்தது போல்
நாம் வாழ்வதிலே
இருக்கிறது நமக்கென்ற
ஒரு அடையாளம்


இந்த உலகம்
வதந்திகளை நம்பும் அளவிற்கு
நிஜம்
தன்னுடைய உண்மைத்தன்மையை
இழந்து விடுகிறது


முகமூடிகளையே
ரசித்து
பழகி விட்டீர்கள்
இயல்புகளில்
இனி சுவாரஸ்யம்
இருக்காது


இன்றைய நாளை
சிறப்பாக
வாழ கற்றுக் கொள்
ஏனெனில்
நாளை என்பது
விதியின் கைக்குள் இருக்கின்றது


உன்னால் உதிர்க்கப்பட்ட
வார்த்தைகளுக்கு
நீ உண்மையாக
இருக்க போராடினால்
எவ்வளவு
இக்கட்டான நிலையிலும்
அவ்வார்த்தைகளே
உன்னை காப்பாற்றும்


பிள்ளைகள்
வாழும் வாழ்க்கையே
பெற்றோரின் உடலுள்ளத்தின்
நலனை தீர்மானிக்கின்றது


நாம் யாரும்
தானே மாறுவதில்லை
யாரோ ஒருவரால்
மாற்றப் படுகிறோம்
நல்லவராக கெட்டவராக
ஏமாளியாக அப்பாவியாக
அறிவாளியாக முட்டாளாக


பொறுப்பு என்பது
சொல்லி கொடுத்து
வருவதல்ல
அது தானாகவே
நமக்குள் தோன்ற வேண்டிய
ஒரு ஆத்மார்தமான உணர்வு


குழந்தைகளின்
புன்னகையே
நாம் காணும்
சந்தோஷ உலகம்


தினம்
ஒரு பாடத்தை
கற்றுத் தருகிறது
நம் வாழ்க்கை
என்னும் பாடசாலை
அதை புரிந்தவர்கள்
பிழைத்துக் கொள்கிறார்கள்
புரியாதவர்கள்
புதைந்தே விடுகிறார்கள்


எதிர்பார்ப்புகள்
இல்லையென்றால்
ஏமாற்றங்கள் இல்லை
உண்மை தான்
அதேசமயம்
எதிர்பார்ப்புகள் நிறைந்தது
தானே மனித வாழ்க்கை


வேண்டாம் என்று
வீசப்பட்ட எதுவும்
தேவையற்றது இல்லை
நாம் வேண்டாம்
என்று நினைக்கும்
எதுவும் யாருக்காவது
அத்தியாவசியமாக இருக்கலாம்


வானம் அளவிற்கு
நல்ல எண்ணங்கள்
பரந்து விரிந்து இருக்கட்டும்
அதில் தீப்பொறி
அளவிற்கு கூட
தீய எண்ணங்களை விதைக்காதே
ஏனெனில்
இங்கு எல்லோரும்
நிலையில்லாதவர்கள்
நிரந்தரமில்லாதவர்கள்
என்பதால்


பெற்றோரை
மறவாதே
வருடத்துக்கு ஒருமுறை
கொண்டாட
அவர்கள் பண்டிகை அல்ல


கஷ்ட்டத்தில் இருக்கும்போது
கண்ணுக்கு தெரிபவர்களை
கடவுள் என்பதை
நம்ப மறுத்துவிட்டு
என் கண்களுக்கு
கடவுள் தெரிவதே
இல்லை என்று
குற்றம் சொல்லிக்கொண்டே
இருக்கிறோம்


எவ்வளவு கெட்டவர்களாக
இருந்தாலும் அவர்களிடம்
நாம் கற்றுக்கொள்ள ஏதாவது
ஒரு நல்ல பழக்கம்
கண்டிப்பாக இருக்கும்


எதை தொலைத்தாலும்
தேடி கண்டுபிடித்து விடலாம்
ஆனால்
தொலைத்த வாழ்நாளை
மீட்டெடுக்கவே முடியாது


செய்த தவற்றை
சரி செய்யவோ
ஒப்புக்கொள்ளவோ
தைரியம் இல்லாதவர்கள்
அதன் பழியை அடுத்தவர்
மேல் போட்டு
நிரந்தர கோழைகளாகி
விடுகின்றனர்


பிறரை குறைத்து பேசி
உன் மதிப்பைக்கூட்ட
நினைக்காதே
அப்படி செய்வதால் கூடுவது
உன் தலைக்கணமே தவிர
மதிப்பல்ல
உணர்ந்தவன் உயர்வான்


நம்மை
ஒருவர் மதிக்கவில்லை
என்று நினைப்பது
முட்டாள்தனம்
அவங்களுக்கு
நம் மதிப்பு தெரியவில்லை
என்பதே உண்மை
அதற்கு நாம் பொறுப்பல்ல


ஒருத்தவங்கள பிடிக்கலன்னா
அவங்களப்பத்தி யாரென்ன
தப்பா சொன்னாலும்
நம்பத்தோணுதுல்ல
அதுக்கு பேர்தான்
(வன்மம்)


அதிகமான நண்பர்களை
கொண்டிருப்பது
முக்கியமானது அல்ல
உண்மையான நண்பர்களை
கொண்டிருப்பதே முக்கியமானது


உன் முன்னால்
புகழப்படும் பொன்னான
வார்த்தைகளைவிட
உன் பின்னால்
புகழப்படும் சாதாரண
வார்த்தைகள் தான்
உனக்கான மதிப்புமிக்க
சான்று ஆகும்


அவசரமாய் வாழ்வது
வாழ்க்கை அல்ல
அனுபவித்து வாழ்வது
தான் வாழ்க்கை
(அவசர உலகம்)


வாழ்க்கையும்
கிரிக்கெட் தான்
எதுவும் நடக்கலாம்
எதையும் ஏற்றுக்கொள்ளும்
மனவலிமை வேண்டும்


பல சந்தர்ப்பங்களில்
பல பெரிய தவறுகளை
செய்து தப்பித்த ஒருவன்
ஒரு சிறு தவறுக்கு
மாட்டிக்கொள்கிறான்
(அலட்சியம்)


வெளிச்சம் இல்லையென்றால்
நிழல் கூட உங்களை
மதித்து பின்னால் வராது
முடிந்தவரை முடியாதவர்களுக்கு
வெளிச்சமாய் இருப்போம்


சாதிப்பவர்கள் யாரும்
பெருமை பேசுவதில்லை
பெருமை பேசுபவர்கள்
யாரும் சாதிப்பதில்லை


வெற்றியின் கனியை
பறித்தவர்களே விடாமுயற்சியின்
பயனை முழுவதும்
உணர்ந்தவர்கள் எனலாம்


அது ஒரு அழகிய
காலம் என்று
சொல்லுமளவு ஏதேனும்
ஒரு நிகழ்வு
எல்லோர் வாழ்விலும்
இருக்கத்தான் செய்கிறது


கவலைப்படாதே
என்பதை விட
நான் பார்த்துக்கிறேன்
என்பது தான்
மிகச்சிறந்த ஆறுதல்


எல்லா தேடல்களிலும்
ஏதோ ஒன்று
கிடைத்து கொண்டு
தான் இருக்கிறது ஆனால்
நாம் தேடிய
ஒன்றை தவிர


இரக்கமும்
உறக்கமும்
அளவோடு தான்
இருக்க வேண்டும்
உறக்கம் அதிகரித்தால்
சோம்பேறி என்பர்
இரக்கம் அதிகரித்தால்
ஏமாளி என்பர்


நம்ம மனசுல
நினைச்சவங்க தற்செயலா
நம்ம முன்னாடி
வந்து நிற்குறதல்லாம்
கடவுள் நமக்கு
கேட்காமலே கொடுக்குற
வரம்தான்


வெற்றி என்பது
வளர்ந்த மரம் போல்
விதையை தூவிய
மறுகணமே
மரத்தை எதிர்பார்க்காதே


நேசிப்பவர்களை பாராட்டு
தேவைப்படுபவர்களுக்கு உதவு
காயப்படுத்துபவர்களை மன்னித்து விடு
விலகியவர்களை மறந்தே விடு


நேரத்தை சரியாக
பயன்படுத்த கற்றுக் கொண்டவர்கள்
தனக்கு நேரம் சரியில்லை
என்று புலம்ப மாட்டார்கள்
நேரங்களில் இல்லை முன்னேற்றம்
சரியான திட்டமிடுதலில் தான்
வெற்றி அமைந்திருக்கிறது


புகழ்வதை காட்டிலும்
ஊக்கப்படுத்துதல் சிறந்தது
வாழ்வதை காட்டிலும்
வாழ வைப்பது சிறந்தது


இன்பம்
துன்பம்
இரண்டும்
நிரந்தரமில்லா
நீர்குமிழிகளே


நம்மால் ஒருவருக்கு
பிரச்சனைகள் வருதென்றால்
அந்த இடத்தவிட்டு
விலகிரணும்
அது உறவானாலும் சரி
உயிர் நட்பென்றாலும் சரி


நமக்கான வேலை
முடிவடையும் போது
நாம் தூக்கி எறியப்படும்
பொருள் தான்


நேரத்தை சேமிப்பது
எளிதாய் இருக்குமானால்
உனக்கு அழகான எதிர்காலம்
காத்துக் கொண்டிருக்கும்


மனவலிமையை விட
மன உறுதியே பெரிது
எவை வேண்டும்
எவை வேண்டாமென
முடிவெடுப்பதில்


எதிர்பார்ப்பின்றி
ஏமாற்றங்களின்றி
வாழ்க்கை துவங்குவதுமில்லை
முடிவதுமில்லை
ஏற்றுக்கொள்வதிலும்
எதிர்கொள்வதிலும்
தான் அனைத்தும்
அடங்கியுள்ளது


சில சமயம்
வெற்றி பெறுவது
கூட எளிது தான்
ஆனால் அதை
தக்க வைப்பது தான்
மிகக் கடினம்


எதிலும் நம்பிக்கையற்றவர்
எங்கேயும் சாய்ந்தும்
நிக்க மாட்டாங்க
சார்ந்தும் இருக்க மாட்டாங்க


எங்கேயும்
நம்மை விட்டுக் கொடுக்காத
உறவை தான் நாம் தேடுகிறோம்
ஆனால் அமைவதென்னவோ
நம்மை உதறிவிட்டு
செல்லும் உறவுகளே


தேர்வுநடக்கும் போது
வாத்தியார் அமைதியாக இருப்பதும்
பிரச்சனைகள் நடக்கும்போது
கடவுள் உதவாமல் இருப்பதும்
உன்னுடைய உண்மையான தகுதியை
இந்த உலகிற்க்கு
நீயே எப்படி
நிரூபித்து காட்டுகிறாய்
என்று காட்டத்தான்


நழுவ விட்ட
அனைத்தையும்
திரும்பி பெற இயலாது
என்று தெரிந்தும்
ஏங்கி கொண்டிருக்கிறோம்
குழந்தையாய்


மற்றவர்களை
மகிழ வைத்த
தருணங்கள் மட்டுமே
நாம் மனிதராக
வாழ்ந்ததற்கான நேரங்கள்


மதிப்பும்
மரியாதையையும்
பிறர் கொடுக்கும் போது
தற்பெருமையையும்
அகங்காரத்தையும்
அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்
இல்லையென்றால்
எல்லாமே பூஜ்யமாகிவிடும்


அனைத்திலும்
விளையாட்டுதனமாய் இருந்தால்
வாழ்க்கை நம்மை
வைத்து விளையாடிவிடும்


எல்லோர் வாழ்விலும்
நாம் வேராக இருக்க முடியாது
சிலர் வாழ்வில்
உதிரும் இலையாகவும்
சிலர் வாழ்வில்
வெட்டப்படும் கிளையாகவும்
இருந்துதான் ஆக வேண்டும்
அது தான் எதார்த்தம்


வெற்றிக்கான பாதையில்
படிக்கற்களை விட
தடைக் கற்களே
அதிகம் நிரம்பியிருக்கும்
தடைகளை சவாலாக நினைத்து
கடந்து செல்வதில்
வெற்றி அமைந்திருக்கும்


நீங்கள் நினைத்த செயலை
தொடங்கும் போதே
இனி எப்போதும்
வெற்றி தான்
என்ற எண்ணத்தை
மனதில் பதியுங்கள்
உங்கள் எண்ணமே
உங்களை வெற்றிக்கான பாதையில்
அழைத்துச் செல்லும்


தொடர்பு கொள்ள
பல வழிகள் இருந்தும்
தொலைந்து போகிறது
பல நட்புகள்


லாபத்தினால் மட்டும்
ஒருவன் பணக்காரனாவதில்லை
சேமிப்பதால் மட்டுமே ஆக முடியும்
உழைக்கும்போது
எதிர்காலத்தை நோக்கி
சென்ற நினைவுகள்
ஓய்ந்தபிறகு கடந்தகாலத்தை
நோக்கி செல்லும்


எந்த உறவுகளும்
தூறலாய் இருக்கும் வரையே
ரசனைக்குரியது
அடைமழையாய் பிடித்துகொண்டால்
வெறுப்புக்குள்ளாகி விடும்


வசதியாக வாழ்வதை விட
மன நிம்மதியோட
மகிழ்ச்சியாக
வாழ்வதே சிறந்தது


வாழ்க்கையில
என்ன வேணா மாறலாம்
எப்ப வேணா மாறலாம்
ஆனா எந்த சூழ்நிலையிலும்
நாம மாறக்கூடாது


எத்தனை கோபத்திலும்
வார்த்தைகளை விட்டு விடாதீர்கள்
அடிகளை விட
அது தரும் வலிகள் அதிகம்
பின் எத்தனை மன்னிப்புகள்
கேட்டாலும் மாறாது மறையாது


அனைத்தையும் மறந்துவிட்டு
புதிதாக ஒன்றை தேடி
அதையும் மறந்துவிட்டு
மீண்டும் புதிதாக ஒன்றை
தேடும் உலகத்தில்
தான் வாழ்கிறோம்


கோபத்திலோ வருத்ததிலோ
முகம் சுருங்கும் போது
அதை சுருங்க விடாமல்
சமாதானம் செய்யும்
உறவுகள் கிடைப்பதெல்லாம் வரம்


மற்றவர்களை
காயப்படுத்தாத
அனைவரையும்
சந்தோஷப்படுத்தும்
புன்னகை என்றுமே
சிறந்தது


அனைத்தும் மாயை
சில ஆசைகள்
விசித்திரமானது
அதனை உணரும் போதுதான்
புரிகிறது
ஆசையே மாயை


எங்க போறீங்க இதோ உங்களுக்காக