Here are the latest Collections of Tamil kadhal kavithaigal in Tamil language.

kadhal kavithaigal in Tamil language 2019

தமிழ் காதல் கவிதைகள்

Love Quotes in Tamil Font

👇👇👇👇👇👇👇


ஜன்னலை
தீண்டும் தென்றலாய்
உன்னன்பும்
மனதை தீண்ட
விழிகளும்
தேடுது உன்னை


இறந்திட
தைரியம் உண்டு
உன்னை இழந்திட
இல்லை


எழுதவே நினைகிறேன்
உன் மேலான
அத்தனை காதலையும்
என்னை நேரில்
பார்க்கும்போது
உன் கண்கள் பேசும்
மொழிதனை பார்க்கவே
என் கண்கள்
தவம் கிடைக்கின்றது கள்வனே


என் விழியில் விழுந்தவனே
உன்னை துளியும் மறந்தால்
என் துடிப்பும் நின்று விடும்
உன்னுடன் கழியும்
சில மணித்துளிகள்
வானில் பறக்கிறேன்
சிறகில்லாமல்


உன்னை மட்டுமே
நேசித்து
உனக்காக வாழும்
சுகம் போதும்
உன்னை எதிர் பார்த்தே
வாழ்ந்திருப்பேன்
என் இறுதி வரையிலும்


கடலலையை
ரசிக்க வந்தால்
நம் நினைவலைகள்
முந்தி கொள்கின்றது


தேடும் மனதை
ஏமாற்றியதில்லை
கண்ணெதிரே
வந்து விடுகின்றாய்


கரையாய்
ஒதுங்கிருந்தேன்
அலையாய்
தொடர்ந்தென்னை
கடலாய் அள்ளி
கொண்டாய்
அன்பில்


உன்
பொய்களையும்
ரசிக்கின்றேன்
நீ என்னை
அழகாய் வர்ணிக்கும்
போது கவிதையாக


தொடர்வது
பிடிக்கும்
உன்னை
நினைவிலும்


உன் பார்வை
பட்டாலே
தென்றலில் தள்ளாடும்
தென்னங் கீற்றாகின்றேன்
நான்


எதிர்பார்பென்று
எதுவும் இருந்ததில்லை
உன்னை காணும்
வரையில் என்னுள்


தொலைவில்
நீ சென்றால்
நினைவில்
இரவும்
நீளமாகின்றது


கதவை
திறக்க மோதும்
காற்றாய்
உன் வாசனை
தீண்ட
கொள்ளை போகுது
மனம்


உன் பாதம்
பட்ட நீரோ
என் பாதம்
தொட சிதறி
சிணுங்குதே
வெள்ளி கொலுசாய்
வெட்கத்தில்


உறக்கத்தை
தொலைப்பதும்
உன்னால்
உறக்கத்தில்
தொலைவதும்
உன்னால்


திறக்குமுன்
கதவை
மன அறைக்குள்
நுழைந்து விட்டாய்
அன்பெனும்
சாவி கொண்டு


இமைக்கா விழிகள்
உனக்காய் காத்திருக்கு
பல கவிதை பேச


விலகிய போதும்
விரட்டி வந்தே
வீழ்த்தி விட்டாய்
மீள முடியா
அன்பு கடலில்


அடைக்கப்பட்ட அறைக்குள்
அகப்பட்ட பறவையாய்
சிக்கி கொண்டாலும்
மனம் சிறகடித்தே
பறக்குது


மறைந்து கொண்டு
தேட சொல்லும்
குறும்பு குழந்தையாய்
உன் தேடலுக்காக
நான்


உன் மூச்சிலும்
உயிரிலும்
யார் வேண்டுமானாலும்
இருக்கலாம்
யாரும் இல்லாத
போது நான் இருப்பேன்
உனக்காக


நினைவுகளால்
கிள்ளி அழ வைத்து
கனவுகளால் தாலாட்டி
மகிழ வைக்க
உன் காதலால்
மட்டுமே முடியும்


முகம் தெரியாத
உன்னை காதலிக்கிறேன்
நீ என் முகவரியாய்
வருவாய் என
உன்னை தேடி தேய்கிறேன்
ஒரு நிலவை போல


என் சோகத்தில்
உன் மனம்
வாடுவதால்
அணிந்து கொள்கின்றேன்
புன்னகையெனும்
கவசத்தை


உனக்காக காத்திருக்கும்
நிமிடங்கள் ஓர் சுகமே
உயிருக்குள் உனை
தினமும் சுமந்திருப்பேன்
ஒரு தாய் போல


உன் அழைப்புக்கு
காத்திருக்கும் ஒவ்வொரு
நொடியும் எனக்கு
அழகான தருணங்கள் தான்
காலங்கள் காத்திருப்பதில்லை
ஆனால் உன்னை
நேசிக்கும் உண்மையான
இதயம் உனக்காக
நிச்சயம் காத்திருக்கும்


கண்ணாடியில்
ஒரு பெண்
தன்னை ரசித்து கொள்ளும்
அழகை விட
காதலோடு தனக்கு
பிடித்தமான ஒருவர்
அவளை ரசித்து சொல்லும்
அழகு பேரழகு


காத்திருத்தல்
காதலில் சுகம் தான்
அதற்காக
அடுத்த ஜென்மம் வரை
காத்திருக்க வைத்துவிட்டாயே


கோடை காலத்தில்
திடீர் மழை போல்
நீயும் வர
நனைகின்றேன்
நானும் சந்தோஷ
சாரல்களில்


கண்ணால் பேசாதே
வார்த்தைகளும்
மறைந்து
கொள்கிறது
வெட்கத்தில்


இரவுக்கு
நிலவழகு போல்
என் நினைவுக்கு
அழகு நீ


சுவை இருந்தும்
பருக முடியாத
ஆறிய தேநீராய்
மனம் அருகில்
நீ இல்லாததால்


என்
எண்ணம்
நீயாகிப்போக
எழுதுகோலும்
கிறுக்குகின்றது
ஓய்வின்றி
மையலை மையில்
கலந்து கவிதையாக


உன் அன்பின்
முன் சற்று
பிரகாசம்
குறைவுதான்
இவ் விளக்கின்
ஒளியும்


நிறமாலையாய்
நிழலாடுகிறாய்
மனமும் நிலைத்து
விடுகின்றது
உன் நினைவுக்குள்


காணாத போது
காண தவித்த
கண்கள்
உனை கண்டபின்
ஏனோ விழி
காண தயங்குது


கவிதைக்கு பொய்யழகு
என்பதும் பொய்பாகி
போகின்றது
நம் மெய்
காதல் கவிதையாகும்
போது


உன் நினைவின்றி
என் நொடிகள்
நகர்வதில்லை


தொலைதூரம்
போனாலும்
மனதோரம்
ஆடுகின்றாய்
ஊஞ்சலாய்


மௌனமும்
பேசும்
என்றுணர்ந்தேன்
காதல் மொழி
உன்னருகில்


மொழியறியா
காற்றும்
கவி பேசுது
உன் வருகை
அறிந்து


காயத்தின் வலிகூட
சுகமான காதலாகும்
காயப்படுத்துவது
நீயென்றால்


கொட்டும் மழையிலும்
சுட்டெரிக்கிறது
உன் சுவாசக்காற்று
அணைத்துவிடு
கொஞ்சம் நனைத்து
முத்த மழையில்


நீ சேயாகும்
போதெல்லாம்
நானும் தாயாகின்றேன்
உன் உறக்கத்தை
ரசித்தபடி


மழை
நின்ற பின்னும்
இலையில்
ஒட்டியிருக்கும்
நீர் துளிகளாய்
நீ சென்ற
பின்னும்
மனதை நனைக்கின்றது
நினைவு துளிகள்


கண்களில்
கலந்தாய்
காதலில்
கரைந்தேன்


கூட்டத்தில்
இருந்தாலும்
கூண்டு கிளியாய்
அடைபட்டு
விடுகிறேன் உன்னுள்


மலராய் மலர்ந்தாய்
மனதில் மகிழ்வானது
மண வாழ்க்கையும்


அசைப்போடும்
நினைவுகளோடு
அசையாது காத்திருக்கு
விழிகளும்
பல ஆசைகள் கொண்டு
ஆவலோடு உனக்காக


யாரோ இருவர்
கரங்களை கோர்த்தபடி
எனை கடக்கயில்
நாமிணைந்து
பயணித்த பயணங்கள்
தொடர்கிறது
என் மனதிலும்


உன்னோடு உரையாட
சேர்த்து வைத்த
வார்த்தைகளை
எல்லாம் உளறி
நிலவோடு
ஒரு ஒத்திகை
நீ வரும்
வரை


சுகமான
உன் நினைவு
தான் சுமையாகி
கனக்கின்றது
உனை காணாத
போது


உன் தாமதத்தில்
திட்டி தீர்க்கிறேன்
கடிகார முட்களை
மெதுவாக நகர்வதாய்
உனை திட்ட
மனமின்றி


கடத்துகிறாய்
காந்த கண்களால்
நழுவுகிறது
இதயமும்
உன் பக்கம்


உறங்காமல்
ஒரு கனவு
உன் அன்பின்
துளிகளை
பஞ்சணையாக்கி


உனை ரசித்தே
என் விழிகளும்
அழகானது


எங்க போறீங்க இதோ உங்களுக்காக