Whatsapp Status 💬


Here are the Latest Collections of Whatsapp Status in Tamil Language.

Tamil SMS, Kavithai and Quotes for Whatsapp & Instagram in Tamil Font.

Tamil Status

👇👇👇👇👇


சந்தோசம் என்பது
மற்றவர்கள் முன்
சிரிப்பது இல்லை
தனிமையில் இருக்கும் போதும்
அழாமல் இருப்பதே...!


உன்னுடைய நிகழ்காலம்
சிறப்பாக இருந்தால்
உன்னுடைய மோசமான
கடந்தகாலத்தை பற்றித்தான்
இந்த உலகமே
விவாதித்துக்கொண்டு இருக்கும்...!


விழும் வேகத்தைவிட
எழும்வேகம் அதிகமாய் இருத்தால்
தோற்கடிக்க அல்ல
உன்னை பார்க்கவே
உன் எதிரி பயப்படுவான்...!


உன் பின்னால்
இருப்பவர்களுக்கு தெரியாது
நீ வகுத்தபாதை எத்தனை
கடுமையானது என்று...!


அதிகபடியான
வேண்டுதல்
என்னயிருக்க போகிறது
நமக்கொரு
நல்வழியை காட்டு
என்பதை தவிர


எப்போது
நம் பேச்சுக்கு
ஒருவர் இடத்தில்
மதிப்பு இல்லை
என்று தெரிகிறதோ
அந்த இடத்தை
விட்டு விலகி விடுங்கள்
அவர்கள் நம்மை தேடும்
அளவிற்கு...!


அன்று ஜாமன்றிபாக்ஸை
திறக்க சிரமபட்ட
அப்பாக்களின் பிள்ளைகள்
இன்று சுலபமாக
செல்போனின் பேட்டர்ன்லாக்கை
திறந்து விடுகிறார்கள்...!


எந்நிலையிலும்
நீ யாருக்கும்
தாழ்ந்தவரில்லை
எப்போதும் உன்னை
நீ உயர்ந்தயிடத்திலேயே
வைத்திரு...!


தற்செயலாய்
கிடைப்பதில்லை வெற்றி
தன் செயலால் கிடைப்பதேவெற்றி


தட்டிகொடுக்க வருவார்கள்
என்று நினைத்திருந்த வேளையிலே
தட்டிவிட்டு செல்பவர்களை
வசைபாட வார்த்தையே இல்லை


நம்மை பற்றி
ஒவ்வொருவருக்கும் தனியான
பார்வை உண்டு
ஆதலால் பிறரிடம்
எமது பிம்பத்தை
அழகாக்கிக்காட்ட
சிரம்ப்பட தேவையில்லை


ஆயுள் குறைவென்றாலும்
அனைவராலும் ரசிக்கபடும்
மாதமாகவே இருக்கின்றது
பெப்ரவரி...!


நம் சிரிப்பில்
மறைந்த வலிகளை
கண்டறிய முடிந்தவர்கள்
தான் நம்சிறந்த
உறவுகளாக இருக்க முடியும்...!


நோக்கம் சரியாஇருந்து
கொஞ்சம்முயற்சி
இருந்தா போதும்
வாழ்க்கை ஜம்முன்னு
இருக்கும்...!


வாழ்க்கையின்
இன்னொரு பகுதியை
காட்டியது தனிமை
அப்போ சிந்தித்து பார்க்கும்
போது தான் புரிந்தது
என் வாழ்க்கையின் நிலைபாடு


எனக்கு எல்லாம் தெரியும்
என்பவனை விட
என்னால் முடியும்
என்பவனே மேலானவன்...!


எவ்வளவு நாளுக்கு
பின் பேசினாலும்
முன்பிருந்த அதே
பாசமும் நேசமும்
மாறாமல் பழகும்
நட்புகளே
நமக்கு கிடைத்த
வரங்கள்...!


காதல்
நேசிக்கபடுவதும்
வெறுக்கபடுவதும்
அவரவரின் அனுபவத்தை
பொறுத்தே...!


நீ ஒதுக்கப்படும் இடங்களில்
நிமிர்ந்து நில்
நீ புகழப்படும் இடங்களில்
அடக்கமாய் நில்
நீ விமர்சிக்கப்படும் இடங்களில்
மௌனமாய் இரு
நீ நேசிக்கப்படும் இடங்களில்
அன்புடன் இரு


பசிக்கு
கூழோ கஞ்சோ
போதும்
ருசிக்கு முடிவேயில்லை
(கேட்டதில் பிடித்தது)


நாம் வாழும் வீட்டில் எத்தனை
வசதி இருக்கிறது என்பதை விட
எவ்வளவுமகிழ்ச்சியாக இருக்கிறோம்
என்பதே முக்கியம்...!


பாதை எப்படி போகின்றது
என பார்க்காதீர்கள்
போகிறபாதை சரியானதா
என பாருங்கள் போகும்
இடத்தை அடைந்திடலாம்...!


காலம் யாருக்காகவும்
காத்திருப்பது இல்லை
ஆனால்
உன்னை நேசிக்கும்
உண்மையான இதயம்
நிச்சயம் உனக்காக
காத்திருக்கும் என்றும்


கிடைக்குமா என கேட்காதே
கிடைக்கும் என நம்பு
நடக்குமா என கேட்காதே
நடக்கும் என நம்பு
முடியுமா என கேட்காதே
முடியும் என நம்பு


தயங்கி
நிற்காதே
தன்னடக்கம் கூட
தவறாக தெரியும்
சிலரின் கண்களுக்கு


பணம் கொடுக்காத
மகிழ்வை
பாசம் கொடுக்கின்றது
(சிலநேரங்களில்)


வாழ்க்கை
மகிழ்ச்சியாக நகரும்
என்ற நம்பிக்கை
இருக்கும் நிலையில்
பணம் ஆம் பணத்தேவை
இந்த சூழல் சிலசமயம்
மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கையை
இழக்கவைக்கின்றது


நம்மை வெறுப்பதற்க்கும்
ஆளுங்க வேணும்
அப்போ தான்
நல்லா வாழ்றதுக்கான
வைராக்கியம் இருக்கும்


சொத்து இருக்குதுனு
சொல்லுறதுக்கும்
சொந்த உழைப்பு இருக்குதுனு
சொல்லுறதுக்கும்
நிறையா வித்தியாசம்
உண்டு...!


நாம் அழிவதை
பலர் வரவேற்றாலும்
நம் முன்னேற்றத்தை
விரும்பும் சில
உண்மையான நல் உள்ளங்களை
வாழ்வில் சம்பாதித்து
வைத்துக் கொள்ள வேண்டும்
சில உண்மை உறவின் தேடல்


சந்தர்ப்பமும்
சூழ்நிலைகள்
மட்டுமே
மனிதனின் குணத்தை
எடுத்துக்காட்டும் கண்ணாடி


நாளை
இந்நேரம் வரும்
ஆனால் போனது
போனது தான்


வேடம் போட்டால் நல்லவன்
காசு இருந்தால் கடவுள்
உண்மை பேசினால் பைத்தியக்காரன்
அன்பு காட்டினால் ஏமாளி
எடுத்து சொன்னால் கோமாளி
நவீன உலகில் மாறி
வரும் மாற்றங்கள்...!


இரக்கப்படுபவன்
ஏமாந்து போகலாம்
ஆனால்
தாழ்ந்து போவதில்லை
ஏமாற்றுபவர்கள்
வெற்றி பெறலாம்
ஆனால்
கடைசிவரை சாதிக்க போவதில்லை


பாவங்களுக்கு
எப்படியோ
மன்னிப்பு கிடைத்துவிடுகின்றது
நியாயங்கள்
தான் நிலுவையில்
நின்றுக் கொண்டிருக்கின்றன


தானாக உயரும்
வயது
விடாமல் துரத்தும்
காலம்
தடுக்க முடியாத
நேரம்
கடக்கத் துடிக்கும்
இளமை
காலைத் தடுக்கும்
சமூகம்
தொட வேண்டிய
இலக்கு
இத்தனை போராட்டம்
தான் வாழ்க்கை


எதிரியை ஜெயிக்கணும்னு
முடிவு செய்துவிட்டால்
நீ ஏந்த வேண்டிய
ஒற்றை ஆயுதம்
புன்னகை மட்டுமே
எவ்வளவு தொல்லைகள் கொடுத்தாலும்
எப்போதும் சந்தோஷமாய்
இருக்கிறானே என்கிற
நினைவே அவனை
கொன்றுவிடும்
(மகிழ்ந்திரு)


சிலரின் விருப்பங்கள்
வெளிப்படையானவை
எளிதாக அனைவருக்கும்
தெரிந்துவிடும்
சிலரின் விருப்பங்கள்
மறைமுகமானவை
அவ்வளவு எளிதில்
யாருக்கும் தெரியாது


கவலைகள்
வந்து கொண்டு தான் இருக்கும்
அதனை நிரந்தரமாக்குவதும்
தற்காலிகமாக்குவதும்
நம்மிடம் தான் உள்ளது
நிரந்தரமாக்கினால்
நீ நோயாளி
தற்காலிகமாக்கினால்
நீ புத்திசாலி


நெருங்கவும் முடியாமல்
விலகவும் முடியாமல்
சில உறவுகள்
சொல்லவும் முடியாமல்
சில ஆசைகள்
மறக்கவும் முடியாமல்
வெறுக்கவும் முடியாமல்
சில நினைவுகள்


சில விஷயம்
புரிந்தால் தான் பிடிக்கும்
சில விஷயம்
பிடித்தால் தான் புரியும்


அதிகமாக சிரிக்கும்
ஒவ்வொரு மனிதனும்
தன் மனதில்
மிகப்பெரிய
காயத்தை வைத்திருப்பான்
எனவே மனதில்
எவ்வளவு காயமிருந்தாலும்
எல்லோரிடமும்
சிரித்து பழகுங்கள்
காயங்கள் காணாமற் போகட்டும்


உன் சந்தோசம்
உன்னை வாழ்க்கையின்
மீதான அன்பை
பெற வைக்கும்
உன் கவலை
வாழ்க்கையின் மீதான
நம்பிக்கையை
இழக்க வைக்கும்


ஒருவன்
தன் நிலையிலிருந்து
உயர்ந்தால்
அவன் தன் உறவுகளை
மறந்து விடுகிறான்
அதே ஒருவன்
தன் நிலையில்
இருந்து வீழ்ந்தால்
அவனை அவனது
உறவுகள் மறந்து
விடுகின்றனர்


வரம்பு மீறிய
வலியை கொடுப்பவர்கள்
முன்னே ஒருபோதும்
கதறி அழுதுவிடாதே
கலகலவென சிரித்துக்கொண்டே
அங்கிருந்து நகர்ந்துவிடு
குழம்பிப்போகட்டும்


உன்னை வலுப்படுத்த
தெரிந்தவர்களிடம் மட்டும
உங்கள் குறைகளை சொல்லுங்கள்
உன்னை பின்பற்றி
வருபவர்களிடம் மட்டும்
வழியை சொல்லுங்கள்
நேசிக்க தெரிந்தவர்களிடம் மட்டும்
அன்பை சொல்லுங்கள்
ஓடத்தெரிந்தவர்களிடம் மட்டும்
தூரத்தை சொல்லுங்கள்


சிறிய செயல்களில் கூட
உண்மையாய் இருங்கள்
ஏனெனில் அதில் தான்
நம்பலமே அடங்கியிருக்கிறது


எனது தேவை
என்பது அவசியம்
எனக்கு மட்டுமே
தேவையென்பது சுயநலம்
இன்னும் தேவையென்பது
பேராசை
எதுவும் தேவையில்லை
என்பதே மனிதாபிமானம்


எவ்வளவு தான்
பெரியவெற்றி அடைந்தாலும்
சிறு வயதில் கிடைத்த
சந்தோசத்திற்கு ஈடுகட்டியதில்லை


நாணயத்தின்
இரு பக்கங்கள்
போன்றது வாழ்க்கை
மென்மையாகப்
பேசும்போது இனிமையாகவும்
வன்மையாகப்
பேசும் போது
கசப்பாகவும் இருக்கும்
புரிந்து கொண்டால்
வாழ்க்கை உன்கையில்
வளமே உன் வாழ்க்கையில்


வாழ்க்கையில்
ஒன்றை விட
இன்னொன்று சிறந்தது
என்று எண்ணுவதை விட
ஒவ்வொன்றுக்கும்
ஒரு தனித்துவம் இருக்கும்
என்று புரிந்து கொண்டு
இயல்பாக ஏற்றுக்கொண்டால்
வாழ்க்கை சிறக்கும்


வார்த்தைகளை சிதறவிடாதே
பிறகு
நீ வள்ளுவராகவே
ஆனாலும்
யாரும் உன்னை
கவனிக்க மாட்டார்கள்


தோல்வி ஏற்ப்படின்
தோற்று விட்டோமே
என்று எண்ணாதே
நீ ஒரு நாள்
வென்று விடுவாய்
ஆனால் நேரத்தை
வீணாக்காதே
அது உன் தோல்வியை
பல மடங்கு
அதிகரித்து விடும்


வறுமை இல்லாமல்
வாழ வேண்டும்
என்று கடவுளை
வேண்டுவதை விட
வறுமையைக் கொடுத்தாலும்
அதனை தாங்கும் சக்தியையும்
சமாளிக்கக் கூடிய திறமையையும்
கொடு என்று
வேண்டுவதே சிறந்தது


எப்பவும்
எந்த சூழ்நிலையிலும்
என்ன நடந்தாலும்
நாம நாமளாவே
மாறாம
உறுதியா இருக்கனும்


யாரையும்
சார்ந்து வாழாதே
உன் சுயத்தை
தொலைத்திடுவாய்
சுயமாய் வாழப்பழகு
உன்னையே நீ நேசிப்பாய்


எங்க போறீங்க இதோ உங்களுக்காக