Here are the latest Collections of Best Tamil Kavithaigal and Tamil Quotes in தமிழ் Language.

Best Tamil Kavithaigal and Tamil SMS

Tamil Kavithai

Get the Latest Collections of Tamil SMS, Kavithai and Quotes in Tamil Font - Specially for Social Status and Stories.

தமிழ் SMS and Status

👇👇👇👇👇👇👇


எவரொருவரும்
உங்கள் வாழ்க்கைப் பயணத்தை
புரிந்து கொள்ளப் போவதில்லை
நீங்கள் இங்கு வாழ்வது
உங்களது வாழ்க்கையை
வாழத்தானே தவிர
ஒவ்வொருவரும் உங்களை
புரிந்து கொள்ள அல்ல
என்பதை மறவாதீர்கள்


சிறந்த பக்குவம் என்பது
சொல்வதற்கு நம்மிடையே
பதில்கள் நிறைய இருந்தும்
புரிதல் இல்லாதவர்கள்
முன் மௌனத்தை
தேர்ந்தெடுப்பது ஆகும்


மாற்றங்கள் யாவும்
காயத்தின் முடிவிலே
தொடக்கம் பெறுகின்றது


வாழ்க்கையும்
ஒருவகை கனவுதான்
உண்மை தெரிவதற்குள்
உன்னை ரசித்து கொள்


சொற்களின்
அர்த்தங்களை விட
மௌனத்தின்
அர்த்தங்களே அதிகம்


ரசிப்பதை எல்லாம்
அடைய நினைக்கிறோம்
அடைந்ததை எல்லாம்
ரசிக்க மறக்கிறோம்


நாளைய வாழ்க்கையை
வாழ்ந்து விட
இன்றைய வாழ்க்கையை
சரியாக வாழ வேண்டும்


விடாமுயற்சியில் நடைபயின்று
தன்னம்பிக்கையை விதையாக்கு
இலக்கினை குறிவைத்து
பயிற்சியைப் பாடமாக்கு
துணிவை முன்னிருத்தி
துதிப்பாடாமல் முன்னேறு
தோல்வியில் வினாயெழுப்பி
வாழ்வியலை அடிப்படையாக்கு
சோதனையை மூலதனமாக்கி
வெற்றிக்கொடி கட்டு


நம்முடைய
எண்ணமும்
சிந்தனையும்
செயலும்
தெளிவாக இருந்தால்
யாராலும் நம்மை
மாற்றிட முடியாது


பூக்கள் நிறைந்த
சோலையல்ல
என் வாழ்க்கை
மாற்ற தான்
நினைக்கிறேன்
அதில் மாறியது
நான் மட்டுமே


காலங்கள் கடந்தும்
காலாவதி ஆகிவிடாத
மருந்து
அன்பானவர்களின்
நினைவுகள் மட்டுமே


சாதிக்க முடியாத
இலக்கை
வாழ்க்கை கொடுக்கும்போது
அழிக்கவே முடியாத
தடயத்தை
அந்த வாழ்க்கையில்
பதியவைத்துவிட்டு
செல்வது தான்
திறமையின் சிறப்பு


ஓவ்வொருவர் வாழ்க்கையும்
அழகு தான்
வெவ்வொரு கோணத்தில்
பார்க்கையில்


நாம் கவனிக்கப் படுகிறோம்
என்ற உணர்வே
நம் செயல்களை
மாற்றியமைக்கவும் வல்லது
ஆனால் தொடந்து
கவனிக்கப்படுகிறோம்
எனும் போது
நம் இயல்பு கெடவும்
வாய்ப்புண்டு


சிலருக்காக சிலரை
பிடிப்பது போல் நடிப்பதும்
சிலருக்காக சிலரை பிடிக்காதது
போல நடிப்பதும் தான்
இன்றைய உறவுகள்


நம்ம யாருக்கும்
மேலவும் இல்ல
நம்ம யாருக்கும்
கீழவும் இல்ல
யாருக்கும்
ஈக்வழும் இல்ல
நம்ம தனி தான்


உரிமைகள்
ஊமையாகின்ற போது
உறவுகள்
உணர்வுகளற்று போகிறது


பெண்களுக்குள்
இருக்கும் குழந்தைதனத்தை
தெரிந்தவர்களிடத்தில் எல்லாம்
வெளிப்படுத்தமாட்டார்கள்
மனதிற்கு நெருங்கியவர்களிடம்
மட்டுமே வெளிப்படுத்துவார்கள்


இழிவாக நினைத்தவர் முன்
இமயமாக நிற்க வேண்டும்
ஊதி என்னைத் தள்ளியவர் முன்
உயர்ந்து எழ வேண்டும்


சில பிரச்சனைகளுக்கு
தற்காலிக தீர்வு தூக்கம்
பல பிரச்சனைகளுக்கு
நிரந்தர தீர்வு மௌனம்


வாழ்ந்து கொண்டிருப்பதென்னவோ
நாம்தான் ஆனால்
நமக்கான வாழ்க்கையை
ஒரு நாளாவது வாழ்ந்தோமா
என வாழ்க்கையை
திரும்பிப் பார்த்தால்
பெரும்பாலும் மிகப்பெரிய
வெறுமையே மிஞ்சும்


என்னை நீ
புரிந்துக்கொள்வாய்
பிடித்தவர்கள் சொல்லும்
போது இதை மீறி எதயும்
கேட்க தோனாது


ஏதோ ஒரு விஷயத்தை
மனதில் நினைத்து ஏங்கி
மற்ற எல்லா விஷயங்களையும்
இழந்து விடுகிறோம்


தன் வார்த்தைக்கு
கட்டுப்பட்டு
நடப்பவர்களையே
நல்லவர்கள் என
புகழும் இந்த உலகம்


நாம் விலகினாலும்
தேடி வந்து பேசும்
சில அன்பான உள்ளங்களுக்கு
தேவைக்காக பழகும்
சுயநலம் ஒருபோதும்
இருக்க வாய்ப்பில்லை
அன்பு ஒன்றே இலக்காக


ஒரு விஷயத்தை பற்றி
நாம் யோசிக்க
வேண்டுமென்றால்
அதற்கு மதிப்பு
இருக்க வேண்டும்
தகுதி இல்லாத
ஒன்றை பற்றி
யோசித்து
நம் நிம்மதியை
இழந்து விடக்கூடாது


ஆறுதல் ஏதுமின்றி
அழுது முடித்த பின்பு
வரும் நம்பிக்கைக்கு
பலம் சற்று அதிகம் தான்


விடையறியாத கேள்விகளும்
புரிந்து கொள்ள முடியாத
சில புரிதல்களும் தான்
வாழ்க்கை இன்னும்
இருக்கிறது
காத்திரு என்கிறது


வாழ்க்கையும்
வரலாறுமாதிரி
ரொம்ப ஆராஞ்சமுனா
கொழம்பி போயிருவோம்


நம்ம மனசுக்கு
புடிச்ச மாதிரி
பேசுறவங்க எல்லாம்
நல்லவங்களும் இல்ல
பிடிக்காத மாதிரி பேசுறவங்க
எல்லாம் கெட்டவங்களும் இல்ல


பொய்யும்
சில நேரம்
புன்னகையை
பூசிக் கொள்ளும்
புன்னகையும்
சில நேரம்
பொய்யை பூசிக்கொள்ளும்


அடுத்தவர்களுக்கு
பிடிக்கவில்லை
என்பதற்காக
என் சுயத்தை
நான் இழக்க முடியாது


நாம் நிராகரிக்க படும்
இடத்தில்
அல்லது
நம் மீது நம்பிக்கையின்றி
பழகும் வட்டத்தில்
இருந்து
விலகிச் சென்று விடுங்கள்
நமது அருமையை
காலம் ஒருநாள்
எடுத்துக்காட்டும்


பல கெஞ்சல்கள் கூட
பிடித்தவர்களின்
கோபத்தை கட்டுப்படுத்தும்
மருந்து தான்
சிலரிடம் மட்டும்


எது நடந்தாலும்
சிரித்து விட்டு
கடந்து செல்
வாழ்க்கை வசமே


என் வாழ்வின்
ஓவ்வொரு தேடலிலும்
ஏதோ ஒன்று கிடைக்கிறது
நான் தேடியதை தவிர


வாழ்க்கையில்
அதிகம்
ஆசை படாதீர்கள்
ஆசை வளர்க்காதீர்
இறுதியில் என்னவோ
ஏமாற்றமே


பிடித்தவர்களிடம்
பிடிவாதமாக
வம்பு இழுத்து
செல்லமாக
சண்டையிடுவதில்
அலாதி ஆனந்தமே


சிரித்து பேசினால் தான்
அன்பானவர் என்று
அர்த்தம் இல்லை
ஏனென்றால்
அன்பு சிரிப்பில் இல்லை


அடுத்த நொடி
மறைத்து வைத்திருக்கும்
ஆச்சரியங்களே
இந்த வாழ்க்கை
எந்த நிமிடமும்
முடிந்து போகும்
அது வரை
அன்பை விதைத்து
அறுவடை செய்


நம் வாழ்க்கையில்
இருந்து யாரை
விலக்கி வைக்க
வேண்டும் என்பதை
சிலரின் நடத்தையே
தீர்மானிக்கிறது


எதையும்
நினைக்காம இருக்கிறது
ரொம்ப நல்லது
நம் மனசுக்கு


புரியாதவர்களுக்கு
புரிய வைக்க
நினைப்பதை விட
புரியாத விஷயம்
புரியாதவர்களுக்கு
புரியாமல் இருப்பதே மேல்


என் வாழ்க்கையில்
புரியா வினாக்களுக்கும்
புரிந்த வினாக்களுக்கும்
மத்தியில்
வினாவாகவும்
விடையாகவும் நான்


அனுபவம் இல்லாத
வாழ்க்கை இல்லை
அனுபவிக்கலைனா அது
வாழ்க்கையே இல்ல


ஒவ்வொரு விடியலும்
உனக்காக
இல்லையென்றாலும்
விடியலுக்கான ஏதோவொன்றை
உனக்காக தந்துவிட்டுத்தான்
செல்கிறது


சில உறவுகள்
நிலைத்திருக்க
வேண்டுமென்றால்
புரிதலுடன் பொறுமையும்
அவசியமானது


இந்த உலகில்
எதை எதையோ
தேடி அலையும்
மனதிற்கு
இறுதியில் தேவைப்படுவது
அமைதி மட்டுமே


என்னை வேண்டாமென்று
விட்டு விலகியவர்கள்
மீண்டும் தேடி
வரும் போது
திரும்பி கூட
பார்க்காமல் செல்லும்
அளவிற்கு திமிருண்டு எனக்கு


தேடும் போதெல்லாம்
நாம் கிடைக்கிறோம்
என்பதால்
ஏனோ
நம்மை அடிக்கடி
தொலைக்கிறார்கள்


இல்லாததை மட்டும்
அழகு என்று நினைத்து
கொண்டிருந்தால்
இருப்பது எதுவும்
அழகாய் தெரிவதில்லை


நடக்குறது எல்லாமே
நல்லதுக்கு தான்
நடிக்கிற எதையுமே
கண்டுக்காத வரைக்கும்


நம்ப வாழ்க்கையில
சில பேர் எப்படி
உள்ள வராங்க எதுக்கு
வெளியே போறாங்கனு
ஒன்னுமே புரிய மாட்டிங்குது


உண்மை மடிந்து
கொண்டிருக்கையில்
உறவுகள் பொய்யோ
தேடல் நிறைந்த வாழ்க்கையில்


காலத்திற்கு தகுந்த மாதிரி
மாறுனாதான் நாகரிகம் என்ற
காலம் போய்
ஆளுங்களுக்கு தகுந்த மாறி
மாறுனாதான் நாகரிகம் என்ற
காலக்கொடும வந்துருச்சு


அன்பு என்பது பொது
நீங்கள் எதிர்பார்க்கும் நபரிடம்
கிடைக்கவில்லை என்பதால்
அன்பிற்கு ஏன்
இந்த அனாதை பட்டம்


எல்லோரும்
நல்லவர்கள் தான்
ஆனால்
எல்லா நேரங்களிலும்
நல்லவராக இருப்பார்கள்
என நினைப்பது
தான் தவறு


இகழ்ச்சியை கண்டு
மனம் தளராமல்
புகழ்ச்சியை கண்டு
மனம் மயங்காமல்
எந்நிலையிலும்
தன்னிலை மாறாமல்
இருப்பதே சிறப்பு


யாருக்கு எப்போது
என்ன நடக்கும்
என்றே தெரியாது
இருக்கும் வரை
வன்மம் இல்லாமல்
அன்பை மட்டுமே
விதைப்போம்


உனது கவலைகளை
ஒரு போதும் மற்றவர்களின்
அனுதாபத்திற்காக
பயன்படுத்தாதே


நாம் எப்படி
இருக்க வேண்டும்
என்பதை
நம் எதிரே
நிற்பவர்களின்
குணங்களும் செயல்களுமே
தீர்மானிக்கிறது
நாம் அன்பாக இருப்பதும்
திமிராக இருப்பதும்


எங்க போறீங்க இதோ உங்களுக்காக