Tamil SMS - Here are the Latest Collections of Tamil Kavithaigal 2020.

Tamil Kavithai and Quotes

கவிதை SMS

இந்த பதிவில் அனைத்து விதமான கவிதை வகைகாலும் உள்ளன

👇👇👇👇👇👇👇

Tamil Status


தனிமையும்
சில நேரங்களில்
தவம்தான்
ஆனால் தவமும்
பல நாட்கள்
தொடர்ந்தால் சாபமாகும்


சொல்ல முடியாத
சோகங்களும்
நினைவுகளும்
ஒவ்வொருவர்
மனதிலும் உண்டு
யாரும் மறந்து வாழவில்லை
மறைத்து தான் வாழ்கிறோம்


உலகமே நினைத்தாலும்
ஒரு உண்மையான
அன்பைத் தரமுடியாது
ஆனால்
ஒரு உண்மையான அன்பு
நினைத்தால்
ஒரு உலகத்தையே தர முடியும்


பலம் இருக்குன்னு
எதிரியையும்
பணம் இருக்குன்னு
செலவையும்
சம்பாதிக்க கூடாது


எண்ணங்கள் பிழையானால்
சிறகு அடிக்கும்
பட்டாம் பூச்சியும்
சிலந்தி வலைக்குள்
சிக்கிக்கொள்ளும்


ஏமாற்றி
விட்டதாய் நினைத்து
ஏமாந்து விடுகின்ற
வாழ்க்கையில் தான்
சொல்ல முடியா
சோகங்களும் காயங்களும்
நிரம்பி கிடக்கின்றன


தவறு நம்மிடம் இருந்தால்
நம்மை விட
பெரிய வழக்கறிஞர் யாருமில்லை
தவறு அடுத்தவரிடம் இருந்தால்
நம்மை விட
பெரிய நீதிபதி யாருமில்லை


மனசாட்சிக்கு
பதில் சொல்ல முடியாம
தவிக்கிறத விட
பெரிய தண்டனை
வாழ்க்கையில
வேற எதாகவும்
இருந்திட முடியாது


தந்தைக்கும்
கடவுளுக்கும்
சிறு வித்தியாசம் தான்
எப்பவுமே கண்ணுக்கு
தெரியாதவர் கடவுள்
இருக்கும் வரை
தெரியாதவர் தந்தை


என்னதான் நமக்கு
நீச்சல் தெரிந்திருந்தாலும்
சாக்கடையில்
விழுந்து விட்டால்
எழுந்து வரவேண்டுமே
தவிர அங்கும்
நீச்சல் அடிக்கக் கூடாது


உரசிக்கொண்டே இருக்கும்
காதலை விட
உள்ளத்தில் உள்ளதை
உரையாடும்
காதல் வலிமையானது


அன்று வயதைப் பார்த்து
வந்த மரியாதை
இன்று வசதியை பார்த்து
மட்டுமே வருகிறது


நாலு பேர்
நம்மை கவனிக்கிறார்கள்
என்கிற எண்ணம்
எழாதவரை
நாம் நாமாகத்தான்
இருக்கிறோம்


சில சமயங்களில்
நம் தலைகனத்திற்கும்
முக்கியத்துவம்
கொடுக்க வேண்டும்
இல்யென்றால்
நம் சுயமரியாதை
என்ற ஓன்றை
இழக்க நேரிடும்


எல்லாம்
எனதாகவேண்டும்
என்பதை விட
எனதானது எல்லாம்
நிலையானதாக வேண்டும்
என்று வாழ்வதே இன்பம்


வட்டம் போட்டு
வாழ்வதில் தவறு இல்லை
ஆனால்
அந்த வட்டம் மட்டுமே
வாழ்க்கை என்று
நினைப்பது தான் தவறு


பிறருக்காக
இரக்கப்படுவதில் தவறில்லை
ஆனால் நாம் ஆடாய்
இருக்கும் பட்சத்தில்
ஓநாய்க்காக வருந்துவது
என்பது முட்டாள்தனமே


வ(ழி)லியில்
வாழ்க்கையை தேடாதீர்கள்
வாழ்க்கையிலும்
வ(லி)ழிகள் உண்டென
கடந்துவிடுங்கள்


ஒலிக்கு முன்
ஒளி வருகிறது
இது ஒரு அறிவியல்
உண்மை அதனால் தான்
பேசுவதற்கு முன்
புன்னகைப்பவர்கள்
நம் மனதில் முதலில்
இடம்பிடித்து விடுகிறார்கள்


அன்பு
நீரை போன்றது
இறுக்கிப் பிடிக்க
நினைத்தால்
இறுதியில்
எதுவும் மிஞ்சாது


தூண்டிலுக்கு
தப்பிய மீன்
துண்டாவதில்
இருந்தும்
தப்பி விடும்


அருகில் இருப்பவர்களின்
பாசத்தை உணராமல்
தொலைவில் இருப்பவர்களின்
அன்பை தேடிக்கொண்டு
இருக்கிறோம் தொலைபேசியில்


அவமானங்களை
தேடித் தேடிக்
கொடுக்கும் பொழுது
அவர்களின் முகவரிகளை
சேகரித்து வையுங்கள்
வெற்றி மேடைக்கான
பத்திரிக்கைகளை
அனுப்புவதற்காக


மதிப்பவர்களை
மனதில் நிறுத்து
உன்னை மிதிக்க
நினைப்பவர்களை
காலடியில் கிடத்து


வாழ்க்கையில்
வந்துட்டு போற
ஓவ்வொரு உறவும்
மறக்க முடியாத
ஏதோ ஒரு நினைவுகளை
பொக்கிஷமாக
தந்து விட்டு தான்
செல்கிறார்கள்


நம்ம பண்ணுரது
சிலருக்கு
கடுப்பு ஏறுதுனா
அப்போ
நமக்கு பிடிச்சத
நம்ம சரியா
பண்ணுறோம்னு அர்த்தம்


வானிலைய கூட
ஓரளவுக்கு
அறிய முடியுது
சிலரின் மன நிலைய
புரிந்துக்கொள்ள
முடியிதே இல்ல


கத்துக்க ஆயிரம்
விஷயம் இருக்கலாம்
ஆனால்
அத கத்துக்குற
நிலமையில
நாம இருக்கனும்
அப்படி இல்லைனா
வாழ்க்கை
நமக்கு நல்லா
கத்துக்குடுத்துட்டு போயிரும்


துன்பம் துன்புற
செய்தாலும்
சிலர் முகத்திரை
அவிழ்த்து காட்டி
மீண்டும் யாரையும்
நம்பாதே எனும்
அறிவுரை வழங்கியே
செல்கிறது


நலம் விசாரிப்பதோடு
வார்த்தைகளை
முடித்துக்கொண்டால்
உறவுகள் நீடிக்கும்


சோர்வடைந்து விடாதே
வாழ்க்கை நீ
எதிர்பாக்காத
நேரத்தில் தான்
பல ஆச்சரியங்களை
கொண்டுவரும்


எங்க போறீங்க இதோ உங்களுக்காக