Tamil Sad Quotes - Tamil Sad Kavithai & Quotes in Tamil and English.

தமிழ் பீலிங் கவிதை


கடலில் நின்று கலசத்தை கவிழ்த்தான்
சாம்பலாக கரைந்து சென்றார் நீந்த கற்றுக்கொடுத்த தந்தை..
(கேட்டதில் வலித்தது)


நிஜத்தில் பாதி
கனவில் மீதி
என்று வாழ்க்கை கடந்துக்கொண்டிருகின்றது...


பழகிடும் உறவுகள் விலகிடும் பொழுதினில்
இதயங்கள் தா ( தூ) ங்காது


வேடிக்கை பார்ப்பவனுக்கு இழப்பின் மதிப்பு புரியாது


நம் உறவாக இல்லாத போதும்
அவர்களின் மரணம் மனதை பாதிக்கதான் செய்யுது


வழமைபோல் உலகம் அமைதியாகவே இயங்கிக்கொண்டிருக்கு
ஆங்காங்கே உயிர்கள் துடிப்பதை ரசித்தவண்ணம்...


நினைவுகளும் சுமை
மனதுக்கு
தொல்லையாகும் போது


நேசித்தலை விட பிரிதலின் போது
உன் நினைவுகள் இரட்டை சுமை...
மனதின் அழுத்தம் குறைக்க ஒருமுறை கடன்கொடு
உன் இதயத்தை...


ஏற்றுக்கொள்ள தாங்க முடியாத
இழப்புகளிலும்
துயரத்திலும் விதிமேல்
பழிபோட்டு மனதை
தேற்றிக்கொள்வோம்
( மரணத்தை ஜெயித்தவர் யாருமில்லை)


கண்களில் மிதந்த
அழகிய காட்சியெல்லாம்
சில நேரங்களில் தூசியாகி
கண்ணீரை தருகிறது.


உறக்கம் தொலைந்த இரவுகளில்
உறங்கிய நினைவுகள்
விழித்துக்கொ(ல்)ள்கிறது...


தொட்டுச்செல்லும் நினைவுகளைதான்
விடாமல் துரத்துகின்றது மனம்...


சில ரணங்களை
மறக்க ஏதோவொன்றை
மனம் ரசிக்கதான்
வேண்டும்


கலைந்து போன
கனவிலும் வலியான நினைவுகள்


நிஜத்தின் வலியில்
கற்பனை எல்லாம்
இறந்து போனது


சில நேரங்களில் தனிமை கடினம்
சில நேரங்களில் தனிமை
தான் இனிமையான தருணம்...!


பசித்தவருக்கு தெரியும்
உணவின் அருமை...
இழந்தவருக்கு புரியும்
உறவின் அருமை....


சிரித்த நிமிடங்களை விட,
அழுத நிமிடங்களே...
என்றும் மனதை
விட்டு நீங்குவதில்லை....
(ஞாபகங்கள்)


சிலரது வாக்குறுதிகள்
தண்ணீரில் எழுதும்
எழுத்துக்களை போன்றதே....


புகைப்படத்திலும்
புன்னகைப்பதில்லை
புன்னகைப்பதே
மறந்துவிடுகிறது சிலருக்கு...
( விரக்தி )


பிரிவின் வலி
பிரிந்தவர்களுக்கு மட்டுமல்ல
பிடித்தவர் அருகில்
இல்லாதவர்களுக்கும் தான்...


நினைவுகள்
என்னை
துரத்த...
சற்றும்
நிற்காமல்
ஓடிக்கொண்டே
நானும்
முடிவுறா பயணமாக


சில காயங்கள்
ஆறாதிருப்பதே நல்லது
மீண்டும்
காயங்களை ஏற்படுத்திக்கொள்ளாதிருக்க...


எரித்து
கொண்டிருக்கும்
நினைவுகளை
அணைத்து
கொண்டிருக்கின்றேன்
மையில் வரிகளாக...


பேசி பயனில்லாத போது
மெளனம் சிறந்தது
பேசியே அர்த்தமில்லாத போது
பிரிவே சிறந்தது


பிறரிடம்
பகிர முடியாத
வேதனையைக் கூட
ஆற்றிட விழிகள்
உளற்றெடுக்கும்
அருவி தான் கண்ணீர்


நேசிப்பவர்கள்
எல்லாம் நம்மோடு
இருந்து விட்டால்
நினைவின் மொழியும்
பிரிவின் வலியும்
உணர முடியாமலே
போய்விடும்


பிரிந்து போவாய் என
தெரியும்
மறந்து போவாய் என்
தெரியாது


மலரும் நினைவுகளிலும்
சில வாடியேதான்
இருக்கின்றது


வானவில்லாய் நினைவுகள்
வந்து மறைந்தாலும்
வண்ணங்கள் மனதில்
பதிந்துவிடுகிறது


நீயுமா இப்படி
என்ற வார்த்தையில்
மிச்சமிருந்த ஒருதுளி
நம்பிக்கையும் உதிர்ந்துபோன
வலியிருக்கும்


மன காயங்கள்
ஆறியபோதும்
நினைவுக்கு
வரும்போதெல்லாம்
வலிகள் மட்டும் ஏனோ
புதிதாககே இருக்கின்றது


சில சமயம்
மீள முடியாதா
தனிமைக்கு தள்ளப்படுகின்றேன்
எனது பேச்சுக்கு
பிறர் இடம் இருந்து
மதிப்பு குறையும் போது


யாரை
பிரிந்த பின்
உன்னால் இயல்பாக
இருக்க முடியவில்லையோ
அவர்கள் தான்
உன் இதயம்
என்று புரிந்துக்கொள்


வார்த்தைகளில்
அன்பை செலுத்துங்கள்
அம்பு துளைப்பதை
போல பேசாதீர்கள்
அம்பை விட
வார்த்தைகளே வலிமையான
காயங்களை உண்டாக்கும்


காயங்கள் உருவாக
கத்திகள் தேவை இல்லை
புரிதலற்ற
வார்த்தைகளே போதும்
வலிக்க வலிக்க
நின்று கொல்லும்


சில சந்தர்ப்பங்களில்
இழப்பதற்கும்
தயராக இருங்கள்
எதுவும் எளிதில்
கிடைப்பதில்லை


அனைவரும்
அருகில் இருந்தும்
அனாதை போல்
உணர வைக்கின்றது
நாம் நேசித்தவரின் பிரிவு


புரிதல் இல்லையெனில்
பிரிதலே மேல்
அது எந்த
உறவாக இருந்தாலும்


தனிமை வேதனை
ஒரு நாள் மீள்வேன்
என்ற நம்பிக்கை
(மனதைரியம்)


தனிமையின் பிடி
ரண வேதனை
கற்றுக் கொடுத்தது
வாழ்க்கையின் மறுபக்கத்தை


மனம் தெளிந்த
நீரை போன்றது
முகவரி இல்லாத
ஒருவர் எறியும்
கல்லால் தான்
அது கலங்கிய
நீராக மாறிவிடுகிறது


என் புன்னகைக்கு
பின்னால் உள்ள வலி
என்னை புரிந்தவர்களுக்கு
மட்டுமே புரியும்
கடந்து செல்கிறேன்
காலம் மாறும்
என்ற நம்பிக்கையில்


எவ்வளவு தூரம்
கடந்து தான் சென்றாலும்
சில நினைவுகள்
நிழலை விட
மோசமாக பின் தொடர்கிறது


அடுத்தவர்
ரசிக்கும் அளவிற்கு
வாய் விட்டு சிந்தும்
புன்னகையில்
சொல்ல முடியாத
சோகங்கள் மறைந்தே
இருக்கிறது


விதியின் கணக்கை
சிலசமயம் புரிந்து கொள்ளமுடியாது
ஒரு மனிதன்
இன்று நம் முன்
சிரித்துக்கொண்டு இருப்பான்
நாளை...!
கண் கலங்க
வைக்கிறது விதி


அலை அலையாய்
சுழல்கிறது
நினைவலைகள்
உதிர்ந்(த்)துவிட்ட
இலையின் ஒருதுளி
கண்ணீர்துளியில்


பேச நிறைய
இருக்கும் போது
பேசுவதற்கு பிடித்தவர்கள்
அருகில் இருப்பதில்லை


நிஜம்
ஒரு நொடி வலி
நினைவு
ஒவ்வொரு நொடியும் வலி


தேவைக்கு அதிகமான
நினைவுகளும் கடனும்
தூக்கத்தை
பறித்துக்கொள்ளும்


சூழ்நிலைனு மனதை
ஆறுதல்
படுத்திக் கொண்டாலும்
சில வலிகளை மட்டும்
தவிர்க்க முடிவதேயில்ல
சில விசயங்களில்


என் தலையணைக்கு
தாகம் போல
தினமும் கண்ணீரை
கடனாக கேட்கிறதே


எழுதப்படாமல்
விட்ட எண்ணற்ற
காவியங்களை விட
வாசிக்கப்படாமல்
வைக்கப்பட்ட
காவியங்களுக்கே
வலி அதிகம்


வார்த்தைகளால்
சிதைவது
மனம் மட்டுமல்ல
அந்த உறவும் தான்


புகைவண்டி என்னதான்
வேகமாகச் சென்றாலும்
அதைவிட வேகமாக
பின்நோக்கியே
செல்கிறது மனது


நினைவுகள்
நிறைந்து கொண்டே
செல்கிறது ஆனால்
நிலையாய் நிஜத்தில்
பாதி பேர் கூட இல்லை


மனதின் வலிகளை
மறைத்து
போலி வேடமிட்டு
புன்னகைக்கிறது
பல முகங்கள்


சிலரின் அன்பு
அழகான நினைவுகளை
கொடுத்து செல்கிறது
சிலரின் அன்பு
ஆழமான காயத்தை மட்டும்
கொடுத்து செல்கிறது


உள்ளத்தின் உளறல்கள்
பலருக்கு புரிவதில்லை
அது உடைந்து கிடந்தாலும்
கவனிக்க யாருமில்லை


வலிகள் பொதுவானவைதான்
என்றாலும்
எல்லா வலிகளையுமே
வெளிப்படுத்தனும்னு
அவசியம் இல்லை
சில வலிகள்
நமக்கே நமக்கானது
அதை வெளிப்படுத்தாமல்
இருப்பதே
அந்த வலிக்கு மதிப்பு


நல்லவர்களை
காயப்படுத்தினால்
சரிக்கு சரியாக நின்று
சண்டையிட மாட்டார்கள்
ஆனால் அமைதியாக
அவர்களை விட்டு
வெகு தூரம்
விலகி சென்று விடுவார்கள்


அன்பு பாசம்
எல்லாம்
பொய்னு நிருபிக்க
வாழ்க்கை முழுக்க
யாராது ஒருத்தர் நம்மோட
இருப்பாங்க போல


சோகங்களை மறச்சிகிட்டு
எதுவுமே இல்லாத மாரி
சிரிச்சு பேசுறதுக்கும்
தனி திறமை வேணும்


அதிக உரிமையுடன்
பழகாதீர்கள்
அவர்கள் செய்யும்
சில செயல்
உங்கள் மனதை
காயப்படுத்தும்
என்பதைக் கூட
உணரமாட்டார்கள்


புரிந்த பின்
விலகி விடுங்கள்
இல்லையெனில்
வார்த்தையாய்
அல்லது
மௌனமாய் இருந்து
நம்மை காயப்படுத்துவார்கள்


அனைத்தும் நிழலாகி
மறையும் வலிகளை
மட்டும் நிரந்திரமாக்கிவிட்டு


காலங்கள் கடந்து போகும்
காயங்கள் ஆறி விடும்
இப்படி சொல்லிக் கொண்டு
தனக்குத் தானே
ஆற்றிக் கொண்ட
காயங்கள் பல


ஒருவரின் சின்ன சின்ன
மாற்றங்கள் மனக்கசப்பை
தந்தாலும் அவர்களை
புரிந்து கொள்ள
ஒரு வாய்பினை தந்துவிடுகிறது


பேசிய அர்த்தமற்ற
வார்த்தைகளில்
இருப்பது அன்பு மட்டுமே
என்பதை உணர்ந்தால்
அன்பு நிலைக்கும் அதிலிலும்
அர்த்தம் தேடினால்
பிரிதலே தீர்வாகும்


வாழ்க்கையில் எதையாவது
சாதிச்சிட்டு நிம்மதியா
இருக்கலாம்
என்று நினைத்தால்
இப்போ இருக்கும் சூழ்நிலையில்
நிம்மதியா இருக்கிறதே
பெரிய சாதனைதான்
என்ற எண்ணம் வந்துருச்சு


மறந்து விட நினைக்கிறேன்
உதாசினப்படுத்தும்
பேச்சுக்களையும்
வெறுப்பாய் பார்க்கும்
உறவுகளையும்


நாம் நேசித்தவர்களும்
நம்மை நேசித்தவர்களும்
நம்மை விட்டு
நிரந்தரமாக விலகுவதில்லை
சிலர் நிஜத்தில்
பலர் நினைவில்


அதிகம் பேசி
திகட்டி விடாதீர்கள்
சிலரால்
ஒதுக்கப்படுவீர்கள்
சிலரால்
மட்டம் தட்டப படுவீர்கள்


சில சமயங்களில்
கலங்கி போகிறது மனம்
சிலர் நாம் தோற்றத்தை வைத்து
நாம் யார் என்று
முடிவெடுத்து விடுகிறார்கள்


விலகிட நினைக்கும்
அந்த கனம் தான்
நாம் இருப்பது
நினைவிற்க்கு வரும்
சிலருக்கு


சில இடங்கள்
நாம் உணராமலே
நம் மனதிற்கு
அமைதியை கொடுக்கும்
அளவில்லா வலிகளினால்


கடந்து போன நிமிடங்கள்
ஏனோ கலைக்க முடியாத
நினைவுகளை மட்டும்
விட்டு செல்கின்றன


புரிந்தவர்களை விட
பிரச்சனை வேண்டாம்
என்பவர்களே
அமைதி காக்கிறார்கள்


உறவுகளை தவிக்க விட்டு
தனிமையில்
போன காலம் மாறி
தனிமையில் உறவுகளைத்
தேடித் தவிக்கும்
காலமாகிவிட்டது


புரிந்து கொண்டால்
தனிமையும் பேரழகு தான்
ஏனென்றால்
நம்மை காயப்படுத்த
அங்கு ஒருவரும்
இல்லை என்பதால்


பிரிந்து செல்லும்
ஒவ்வொரு உறவுகளும்
ஏதோ ஒரு வகையில்
எதையாகினும்
கற்று கொடுத்து
செல்கின்றனர்


அன்பின் கரம் பற்றி
அவஸ்தைகளோடு
நகர்கிறது வாழ்க்கை


தாய் மடிக்குப் பிறகு
நம் கவலைகளுக்கும்
கண்ணீருக்கும்
கனவுகளுக்கும்
ஆறுதலாய் மடி கொடுப்பது
தலையணை மட்டுமே


நிஜங்களை
நினைவுகளாக்கி
பாதுகாக்கின்றது
இமைகள்
கண்ணீரில்
கரைவதேயில்லை
வலிகள்


தேவைப்படும் தருணங்களில்
தேடுகின்றனர்
பின்னர் எளிதாய் மறக்கவும்
செய்கின்றனர்


ஏதாவது பேசிக்கொண்டே
இருந்தபோது
இனித்த நட்பூ
மௌனங்களை
சுவைக்கும் போது
மட்டும் கசந்துவிடுகிறது


மன்னிப்பு கேட்டால்
பேசி விடுவார்கள் என்ற
தைரியத்தில் தான் பலரும்
நேசிப்பவர்களின் மனதை
நோகடிக்கின்றனர்


நினைவுகள் அழிவதில்லை
அவை ஏற்படுத்திய
காயங்கள் மறைவதில்லை


பேசிய புரிதலை விட
பேசாத மவுனங்கள்
உணர்த்தி செல்கின்றன
காதலின் வலி இன்னதென்று


விரும்பிய போது
விரும்பினேன்
என்பதைவிட
வெறுத்த போதும்
விரும்பினேன்


நாம் நேசிக்கும்
ஒருவரின் சிறு
மாற்றங்கள்
கூட நம்மை
அழ வைக்கும்


தவறவிட்ட தருணங்களை
உணரும் நேரத்தில்
உனக்காய் இருப்பதில்லை
சில நேரங்களும்
சில உறவுகளும்


இருப்பதை தொலைப்பதும்
தொலைத்ததை நினைப்பதும்
நிம்மதியை தேடுவதும்
பலர் வாழ்வில்
வாடிக்கையானதே


தனிமையில் இருப்பது
வலி அல்ல
தனிமையில் வெறுமையை
உணர்வதே வலி நிறைந்தது


ஏதோ ஒரு வலி
ஏதோ ஒரு சோகம்
ஏதோ ஒரு தனிமை
தொடர்கிறது நம்மில்
பலரை


கிடைத்தது தொலைந்தது
காரணம் ஒன்றுமில்லை
கண்களை திறந்து விட்டேன்
கனவும் கலைந்து விட்டது


ஏங்கிக் கிடத்தலில்
ஏதும் நடக்கப் போவதில்லை
என்றான பின்
அதை கடத்தல் என்பது
வலி நிறைந்த போராட்டமே


விட்டுக்கொடுத்து
பழகிவிட்டால்
கடைசியில் நமக்கென்று
எதுவுமே மிஞ்சாது


தனிமை ஆரம்பத்தில்
சற்று கொடுமை
ஆனால் பழகிவிட்டால்
அதை போல நிம்மதி
எதிலும் இல்லை
நமக்கே நாம்
துணையாக இருக்கும்
போது தான்
வாழ்க்கையின் ரகசியங்கள் புரியும்


மனதின் வேதனைகளுக்கு
யாரோ ஒருவர் காரணமாக
இருக்கவேண்டிய
அவசியம் இல்லை
சில நேரங்களில்
ஏதோ நினைவுகள்
கூட காரணமாக இருக்கலாம்


பாதி வாழ்க்கை வலிக்கிறது
மீதி வாழ்க்கை வெறுக்கிறது


உயிராகவும்
உணர்வாகவும்
இருந்தவர்கள்
வெறும் நினைவாக
மாறுவது
மிகப்பெரிய வலி


வலிகள்
அழுகையில் மட்டும் தான்
இருக்க வேண்டும் என்பதில்லை
சில நேரங்களில்
அது போலி
சிரிப்பின் பின்னாலும்
மறைந்து இருக்கும்


உணர்வுகள் கொல்லப்பட்ட
நடைபிணமாய் வாழ்ந்து
கொண்டிருக்கின்றனர் பலர்


மீள முடியாத சோகம்
என்றெல்லாம் ஒன்றுமில்லை
அதைவிட பெரிய கனமான
சோகம் வரும் வரையே


எதையும் ஏற்றுக்கொள்ளும்
பக்குவம் வரும் போது தான்
மனம் இலகுவாகிறது


அளவில்லா ஆனந்தம்
தருவதும் அளவில்லா
சோகம் தருவதும் நம்
மனதிற்கு பிடித்தவர்கள்
மட்டும்தான்


பொய் காரணம்
சொல்லிக் கூட
ஒருவரை
வெறுத்து விடுங்கள்
ஆனால்
பொய்யான அன்பு காட்டி
யாரையும் ஏமாற்றாதீர்கள்


சகிப்புத் தன்மையின்
அளவை பொறுத்தே
இங்கு உறவுகளின்
ஆயுள் காலம்


இப்போலாம்
பெருசா யாரும்
என்ன விட்டு
நீ முழுசா போய்டுனுலாம்
சொல்லிக்கிறது இல்ல
நமக்கான முக்கியத்துவம்
குறையும்போதே
புரிஞ்சு விலகிக்கனும்
அவ்வளவுதான்



எங்க போறீங்க இதோ உங்களுக்காக