Collection of தமிழ் கவிதைகள் and தமிழ் Quotes From Different category - Tamil Motivational Quotes, Life Quotes in Tamil, Kadhal kavithai and more.
Huge Collections of kavithai and Tamil Quotes for your Social Status, Stories, Reels, Shorts and Status Update.
kavithai
- Tamil Life Quotes
- Tamil Motivational Quotes
- Tamil Whatsapp status
- Kadhal Kavithai
- Attitude Kavithai and Attitude Quotes in Tamil
- Tamil facts
- காலை வணக்கம் கவிதைகள்
- இரவு வணக்கம் கவிதைகள்
- Tamil kavithai Blog Status and One line Kavithai
- வாட்சப் கவிதை
தமிழ் Kavithai Collections
கவிதைகள் தொகுப்பு
👇👇👇👇👇👇👇
வாழ்க்கையில்
நாம் சந்தித்த
நபர்களில்
சிலரால் சிரிக்கவும்
சிலரால் கண்ணீர் சிந்தவும்
சிலரால் சிந்திக்கவும்
செய்திருப்போம்
இவை அனைத்தும்
நம்பிக்கையில்லா
நட்புகளே
ஒரு உயிரின்
பிரிவில் தான்
இன்னொரு
இதயத்தின் வலிகள்
உணரப்படுகிறது
உங்களுக்கும்
சூழ்நிலைகள் மாறும்
என்பதை விட
சூழ்நிலைகள்
உங்களையும் மாற்றும்
என்பதே உண்மை
வலித்தாலும்
அவர்கள் முன்
வலிக்காதது போல
நடிப்பது கலைதான்
ஒரு சில விஷயத்தை
எவ்வளவு தான்
திரும்ப திரும்ப
யோசிச்சாலும்
விடை என்னவோ
ஒன்று தான்
(ஏமாற்றம்)
யாருக்கு என்ன
தீங்கு செய்தோம்
என யோசிப்பதை விட
இனி இந்த தவறு நடக்காமல்
இருக்க நிதனமாய்
செயல்ப்படு
புன்னகைக்கக் கற்றுக் கொள்ளுங்கள்
அனைவரையும் வசீகரிக்கும்
ஆயுதம் அதுவே
அன்பு கிடைக்கவில்லையே
என்று ஏங்காதீர்கள்
அன்பை கொடுக்கப் பழகுங்கள்
அன்பு தானாக கிடைக்கும்
தேடல்கள் எல்லாம்
அருகில் இருந்த போது
தொலைக்கப்பட்டவை
எல்லம் நீயே
அன்பின்
அதிகபட்ச வெளிபாடு
ஒன்று கண்ணீராக இருக்கும்
இன்னொன்று
கோவமாக இருக்கும்
நீ யாருக்காக பாவம்
பரிதாபம் பார்க்கிறாயோ
அவர்களாலேயே நீ
முதலில் அவமான
படுத்த படுவாய்
ஒருவர் தந்த காயங்கள்
மன்னிக்கப்பட்டு விடலாம்
ஆனால் ஒருபோதும்
மறக்க படுவதில்லை
கடப்பது எளிதென்றால்
மறப்பதும் எளிது தானே
சில வலிகளையும்
சில துரோகங்களையும்
அதிகமாக கிடைக்கிறது
என்பதற்காக
அலட்சியப்படுத்தாதீர்கள்
பின்னொரு நாளில்
தேவைக்கு கிடைப்பதே
பெரும்பாடாய் ஆகிவிடும்
கிடைக்காததை எல்லாம்
பிடிக்காது என்று
சொல்ல பழகிக்
கொண்டவர்கள்
பக்குவப்பட்டவர்கள்
சுமப்பதற்கான தெம்பு
அதுவாகவே வந்துவிடும்
நம்பிக்கையிருந்தால்
உலகத்தில்
மகிழ்ச்சியைத் தரக்கூடிய
மிகச் சிறந்த சொல்
அன்பு
ஒளி கிளம்புமுன் நீ
வேகமெடு
உன் உடலும்
நன்றாக இருக்கும்
உன் வாழ்க்கையும்
நன்றாக இருக்கும்
உங்களைப் புரிந்து
கொள்ளாத உறவுகளை
நெருங்காதீர்கள்
உங்களோடு நெருங்கி
வாழும் உறவுகளை
புரிந்துகொள்ளாமல் விலகாதீர்கள்
முகவரி இன்றி
முடிந்து போன
உறவுகளிடம் தான்
முடங்கி விடுகிறது
நம் நினைவுகள்
எல்லாம் நன்மைக்கே
என்று கடந்து செல்லும்
மணப் பக்குவம்
இருந்துவிட்டால் வாழ்வில்
நிம்மதி நித்தியம் உண்டு
பிடித்தவைகளுக்கு
நினைவுகள் மட்டுமே
போதுமானதாய் இருக்கிறது
யாரோடும் பேசாத
என் மௌனத்தை
எனக்கே பிடித்திருக்கிறது
இந்த தனிமையில்
ஏனென்றால்
யாருக்கும் விளக்கப்
படுத்த தேவையில்லை
என்பதால்
விடை தெரியாத
வாழ்கையில்
எத்தன கேள்விகளுக்கு
பதிலை தேடுகிறோம்
அவரவர் இடத்தில்
அவரவர் நிலையில்
அவரவர் பார்வையில்
அவரவர் கருத்து
அவரவருக்கு சரியே
அனைத்து திறமைகளும்
இருந்தாலும்
அதிர்ஷ்டம் இல்லனா
வெற்றி பெற முடியாது
பிரியத் தான் போகிறோம்
என்பது முன்பே
தெரிந்திருந்தால்
ஒருவர் மீது ஒருவர்
பிரியப்படாமல் இருந்திருக்கலாமே
நம்மை முழுவதும்
புரிந்து கொண்ட ஒருவர்
நம் வாழ்வில் கிடைத்த
மிகப்பெரிய வரம்
நினைப்பது
நடக்கின்ற வரையிலே
நிம்மதி ஏது வாழ்விலே
நினைத்தது நடந்துவிட்டால்
மகிழ்ச்சிக்கு எல்லைகளேது
மனதிலே
எதையும்
சொல்ல தயங்காத மனமும்
எதையும் ஏற்கும் பக்குவமும்
இருந்திட்டா
இந்த வாழ்வை
இனிதா கடந்திடலாம்
மனதுக்கு நிம்மதியை
தரக்கூடிய எந்த இடமாக
இருந்தாலும் அது
உனக்கு நந்தவனமே
புத்தகங்களை
காட்சி பொருளாக
வைத்திருப்பது
பெருமை அல்ல
அதை பயன்படுத்தி
கொள்வது
தான் பெருமையே
வாழ்வின் முன்னேற்றங்களுக்கு
நினைவாற்றல் எவ்வளவு
அவசியமோ அதே போல்
வாழ்வின் மகிழ்ச்சிக்கு
ஞாபகமறதி அவசியம்
கிடைக்காத ஒன்றுக்காக
நமக்கு கிடைத்த
பொக்கிஷங்களை
ஒருபோதும் தொலைத்து
விடாதீர்கள்
ஆறுதல் என்பது
உன் காயத்திற்கு
தற்காலிக தீர்வு
மாறுதல் என்பது
உன் காயத்திற்கு
நிரந்திர தீர்வு
எப்பொழுதும்
ஆறுதல் தேடாதே
மாறுதல் தேடு
அடுத்தவர்கள்
திரும்பி பார்க்கவேண்டும்
என்று வாழ ஆரம்பித்துவிட்டால்
நீ திரும்பி பார்க்கும்போது
உனக்கான வாழ்க்கையை
வாழ்ந்திருக்க மாட்டாய்
உனக்காகவும் வாழு
பட்டுப்போன மரத்திலும்
ஓர் இலை உயிர்த்திருக்கும்
மீண்டும் மரம்
துளிர்விடும் என்ற
கடைசி நம்பிக்கையின்
வாசத்தில்
மரத்தின் வாழ்க்கையும்
மனிதனின் வாழ்க்கையும்
ஓர் வகையில் ஒன்று தான்
எல்லா சூழ்நிலைக்கும்
பொருந்தக்கூடிய ஒன்று
அமைதி 🧘
எல்லா சூழ்நிலைக்கும்
பொருந்தாத ஒன்று
கோபம் 😤
புயலும் கோபமும்
ஒன்றே வீசும்போதும்
பேசும்போதும்
ஒன்றும் தெரியாது
அடங்கிய பிறகுதான்
தெரியும்
அதன் பாதிப்புக்கள்
என்ன வென்று
அறிவாளிகளுக்கு
அறிவுதான் அதிகம்
முட்டாளுக்குதான்
அனுபவம் அதிகம்
துரோகத்தின் தீயில்
எரிந்த நம்பிக்கை
மீண்டும் உயிர்ப்பிக்க முடியாது
அது சாம்பலாகி
காற்றில் கரைந்துவிடும்
மனது மரத்துப் போவதற்கு
நோய் மட்டும்
தேவை இல்லை
ஏமாற்றங்களும்
சில துரோகங்களும் போதும்
சோகத்தை தாண்டி
எழுந்து நின்றால்
வாழ்வின்
புதிய படிகள் தெரியும்
ஒவ்வொரு விழுதும்
அனுபவம் என்ற
கண்ணாடியை
பளபளப்பாகச் செய்யும்
வாழ்க்கையில் முன்னோட்டம்
பெற வேண்டும்
முற்பகல் வரை
எதிர்பார்க்கும் போர்க்களத்தை
வெல்ல வேண்டும்
Strive to succeed in life and overcome challenges until dawn
நம் முன்னேற
அடுத்தவரை விழுங்கி
முன்னேற நினைக்காத
உன் வாழ்நாளில்
துன்பத்தை தந்து
தூக்கத்தை இழக்க
நேரிடும் பிற்காலத்தில்
சிலருக்கு அன்பு காட்ட
தெரியவில்லை
சிலருக்கு நம் காட்டும்
அன்பே தெரியவில்லை
வாழ்க்கை சவால்களை
தாண்டும் பயணம்
ஒவ்வொரு அடியிலும்
நம்பிக்கையை
உறுதியாகத் தாங்கி
கடைசி வரை
பயணிக்கத் தவறாதீர்கள்
சிறிய குறைவுகளையும்
சமாளிக்க முடியாதவனுக்கு
பெரிய வெற்றிகளை
அடைய முடியாது
வாழ்க்கையில்
வெற்றியை அடைய
முன்னேற்றம் முக்கியம்
அல்லாமல் விரைவாக ஓடுவதில்லை
உங்கள் வாழ்க்கையின்
முயற்சிகரமான பயணம்
மிகவும் முக்கியமானது
ஒவ்வொரு படியும்
உங்கள் இலக்கை நோக்கி
ஒரு முன்னேற்றமாகும்
உங்கள் கனவுகளை அடைய
உங்கள் மனதில் உறுதியான
நம்பிக்கையை வளர்க்கவும்
அது உங்கள் வெற்றியின்
அடித்தளமாக மாறும்
ஆரோக்கியம் என்பது செல்வம்
உடல் ஆரோக்கியம் இல்லாமல்
வாழ்க்கை முழுமையாக இல்லை
ஆரோக்கியமான உடல்
ஆரோக்கியமான மனதை உருவாக்கும்
இதுவே வாழ்க்கையின்
உண்மையான மகிழ்ச்சி மற்றும்
வெற்றியின் அடிப்படையாகும்
Tamil kavithai images
Tamil kavithai Whatsapp Channel
Get Free Kavithai Updates on your Whatsapp Channel
Tamil SMS Blog and Kavthai Blog Quotes and kavithai Collections.