Tamil Kavithai blog - Here are the Latest Collections of Tamil கவிதை, Tamil Status Kavithai, and Tamil Quotes for Social Status, Stories, and Reels.

Tamil Kavithai for Reels and Shorts Video

Kavithai

  • Get Kavithai for Social Profile Stories and Videos
  • Random Kavithai Collections and Copied Kavithai
  • Twitter Kavithai Collections

Kavithai collected from Twitter Tamil kavithai author Profiles

Tamil Status

👇👇👇👇👇


கோபங்கள் எல்லாம்
திமிராக தான்
பார்க்கப்படுகிறதே
அன்றி யாருக்கும்
புரிவதில்லை
அது வேதனையின்
வெளிப்பாடு என்று


வாழ்கையில் நிகழ்ந்த
கசப்பான நிகழ்வுகளும்
கடந்துப்போன காலங்களூம்
மாற்றங்களும் ஏமாற்றமும்
வதைக்கும் நினைவுகளும்
மனதில் ஒருவருக்கு
இறப்பின் வலியை
உயிரோடு உணர்த்திவிடுகிறது


வேடிக்கை பார்க்கின்ற
கூட்டத்திற்கு
பாதிக்கப்பட்டவர்களின்
வலிகள் புரியாது


ஆழமான
பல சிந்தனைகளை
கடந்திடவும்
அழுத்தமான
பல முடிவுகளையும்
எடுத்திடவும்
மன உறுதியை வளர்த்திட
முனைகிறேன் நான்


உலகில்
மிக எளிமையானது
பிறரிடம் குறை காண்பது
உலகிலேயே
மிக கடிமையானது
தன் குறையை
தானே உணர்வது


அளவில்லா
சோகங்கள் இருந்தாலும்
இறக்கி வைக்க
கண்ணீரைத் தவிர
வேறு எந்த வழியும்
தெரியவில்லை


வாழ்க்கையில் ஏற்ப்படும்
சில வலிகள் தான்
வரிகளாகிறது


சில மனிதர்கள்
வாழ்க்கையில் அழுவது
யாரும் விட்டு
சென்றதற்காக அல்ல
தவறான மனிதரை
தேர்ந்தெடுத்ததற்காக


கனவுகள் அளவிற்கு
நிஜங்கள் சுவாரசியம்
தருவதில்லை


இயல்பு என்ற
வேரை வெட்டிவிட்டால்
வாழ்க்கையில்
வளர மட்டுமல்ல
வாழவும் முடியாது


தன்னம்பிக்கை என்னும்
செல்வம் உன்னிடம் இருந்தால்
வெற்றி எனும்
படிகளில் ஏறி
மரியாதை என்னும்
மணிமகுடத்தை
மகிழ்ச்சியுடன் அணியலாம்


சில நொடிகளில்
எடுக்கும் முடிவுகள்
வாழ்க்கையையே
புரட்டி போட்டு
விட்டு செல்கிறது


சில உறவுகள் தருவது பாசம்
சில உறவுகள் தருவது பாடம்
பாசத்தை கொடுத்தால்
பெற்று கொள்வோம்
பாடத்தை கற்பித்தால்
கற்று கொள்வோம்


வாழ்க்கையில்
சின்ன சின்ன
விஷயங்களில் மகிழ்ச்சியடைய
கற்றுக் கொள்ளுங்கள்
வாழ்க்கை இனிமையாகும்


ஒவ்வொருவரின்
வாழ்க்கை பயணமும்
வித்தியாசமானது
நம் வாழ்வில்
எது நடக்க வேண்டும்
என்று இருக்கிறதோ
அது யார் தடுத்தாலும்
நடந்தே தீரும்


பூட்டிய கதவுகளின் பின்னே
சில ரகசியங்கள் இருக்க கூடும்
திறக்கப்படாத மனங்களின்
உள்ளேதான்
பல வலிகள் மறைந்திருக்கும்


உதிர்வோம் என தெரிந்தும் பூக்கள் மலர மறுப்பதில்லை


வாழ்க்கை
எப்படி போகின்றது
என்று என்னிடம்
கேட்க்கும் கேள்விக்கு
என் பெருமூச்சு தான்
சரியான பதிலாய்
அமையும்


தான் படும் கஸ்டங்களை
வெளியே சொல்லாத
ஒரே ஜீவன் அப்பா


விடை தெரியாத
வாழ்க்கையில்
வரும் வினாக்களுக்கு
விடை தேடியே
அலுத்துப் போகிறது


மனிதன் தோற்று போக
ஆயிரம் விஷயங்கள்
இருந்தாலும்
துரோகத்தால் விழ்த்தப்படும்
போது தான்
உடைந்து போகிறான்


பெண்ணின் உணர்வுகளுக்கு
மதிப்பளித்து
பெண்ணாக மதிக்கும்
ஆண் கிடைப்பது வரம்


முரட்டு பிடிவாதங்களுக்குள்
சிக்கி மூர்ச்சையாகிவிடுகின்றன
இன்றைய உறவுகள்


நமக்கு
பின்னால் பேசுபவன்
புகழ்ந்தால் என்ன
இகழ்ந்தால் என்ன


நாம் எல்லோருமே
விடைகளை தேடுகிறோம்
நாமே புதிர்கள்
என்பதை மறந்து


நாம் அனைவரும்
யாரோ ஒருவரின்
கதையில்
மோசமானவர்களாகவும்
கெட்டவர்களாகவும்
தான் இருக்கிறோம்


ஒரு ஆணின்
அன்பை நம்புவது கடினம்
நம்பிவிட்டால்
அந்த அன்பை
விட்டு கொடுப்பதும்
விட்டு விலகுவதும்
அதை விட கடினம்
ஒரு பெண்ணுக்கு


நம்மை நாமே
வெறுக்கும் நிலைக்கு
ஆளாக்கி விடுகிறது
சிலர் மேல்
நாம் கொண்ட அன்பு


சிரிப்பதற்கு மட்டும் நாம்
கற்று கொள்ள வேண்டும்
அழுவதற்கு நம்மை
சுற்றி இருக்கும் பலரும்
நமக்கு கற்று தருவார்கள்
எனவே
புன்னகையுடன் இருப்போம்


சிதைந்துபோன
உறவுக்காக
கண்ணீர் சிந்துவது
அர்த்தமற்றது


அன்பை விட கனமானது மௌனம்


சிதைந்துபோன
உறவுக்காக
கண்ணீர் சிந்துவது
அர்த்தமற்றது


மாறுவேடம் கச்சிதமாய்
போட்டாலும்
காலமும் சூழ்நிலையும்
அவர்களது இயல்பான
குணத்தை
வெளிக் கொண்டு வந்து
காட்டிக் கொடுத்து விடுகிறது


வெறுக்கும் கண்கள் நம்மை வேடிக்கை பார்க்கட்டும்


ஒரு உறவில்
எமோஷனலா கனெக்ட்
ஆகியிருந்தா
அந்த உறவோட தாக்கம்
நமக்கு அதிகமா இருக்கும்
அவர்களின்
ஒரு சின்ன மாற்றம் கூட
அதிகம் வலிக்கும்


எங்க போறீங்க இதோ உங்களுக்காக