Here are the Latest Collections of one line kavithai tamil language.

தமிழ் ஒன் லைன் கவிதை

  • கவிதைகள் 2018
  • தமிழ் கவிதைகள் 2018
  • தமிழ் கவிதை வரிகள்

👇👇👇👇👇👇👇


அழகென்பது மனதுதானே தவிர முகமல்ல...!


தேடலின் மதிப்பு கிடைக்கும்வரைக்கும் தான்...


அறியாத வயசு அறிய வைத்தது பசி


எதையும் விட்டு விடாதே கற்றுக் கொள்...!


ஆசை இல்லா மனம் வேண்டும், நிம்மதியான வாழ்க்கைவாழ...


பொம்மையும் உயிர் பெற்றதே குழந்தைகளிடம் மட்டும்


கடவுள் எழுதி முடித்துவிட்ட நாடகத்துக்கு தினமும் போடுகின்றோம் வேஷம்


வாழ்க்கை சொர்கமாவதும் நரகமாவதும் நம் எண்ணங்களை பொறுத்தே


அழுகை கூட அழகு தான் குழந்தைகளிடம் மட்டும்


நம்மீது நம்பிக்கை நமக்கிருக்கும் வரை வாழ்க்கை நம்வசம்


நாம் அழுதால் மற்றவர்களும் அழவேண்டுமென்று நினைப்பது சுயநலத்தின் உச்சம்


கணத்தில் உதித்த புன்னகையால் மனத்தின் கனம் குறைந்தது (மழலைகள்)


போராடி தோற்பதும் வாழ்வின் ஒரு அங்கம் என்பதை மறந்துவிடாதீர்கள்...!


எப்போதும் தன்னம்பிக்கை மட்டும் இழக்கக்கூடாது


அடுத்தவர்களுக்கு கெடுதல் நினைக்காத எல்லா நேரமும் நல்ல நேரமே


கவிதையும் ஒரு போதை எதையாவது கிறுக்கத்தான் சொல்லுது


மனம் பணம் அதிகம் நேசித்தால் நிம்மதிபோயிரும்...!


எதையும் எதிர்கொள்வேன் என்ற மனநிலை மட்டுமே நம்பிக்கையை கொடுக்கும்...!


பிடிக்கவில்லையா விட்டுவிலகிவிடு கூடயிருந்து குழிபறிக்காம


வாய்ப்புகளை தேடி அலையாதே வாய்ப்புகளை உருவாக்கு...!


கடந்தவை கசப்பான நிகழ்வுகளென்றால் அதை மீண்டும் ருசிக்க நினைக்காதே


ஊடலில்லையெனில் காதலும் கசக்கும்


ஒருவரையொருவர் சரியாய் புரிந்திருந்தால் எந்த உறவும் அழகே...!


இரவு காட்டில் இரைதேடும் சிறகில்லா பறவை (நினைவு)


பிடிவாதத்தை எரித்துவிடுவோம் இல்லம் மற்றும் உள்ளம் மகிழ்சியாயிருக்க...!


அப்பாவின் அமைதி மொத்த தைரியத்தையும் உடைத்தெறிந்து விடுகிறது


சேமிப்பு இல்லையென்றால் உழைப்பும் வீணே


தலைக்கனம் இருப்பதால் தான் என்னவோ தட்டி இருக்கப் படுகின்றன ஆணிகள்


நாட்டமிடுகிறது குழந்தையின் அழகை கண்டு நாற்று...!


எந்த சூழ்நிலையிலும் நமக்கு ஆறுதல் நம் நம்பிக்கை மட்டுமே


கற்றுத்தெளிவது கல்வி அறிந்து தெளிவது அறிவு


வறுமைக்கு பிறகு வரும் செல்வமே வாழ்க்கையில் இறுதிவரை நிலைக்கும்


கலப்படம் இல்லாத புன்னகை குழந்தைகளிடம் மட்டுமே


யோசித்துப்பார் நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கை வரமெனப் புரியும்


தேடலில் தொடங்கி எதையோ தேடித் தேடியே முடிகின்றது வாழ்க்கை


வாழ்க்கை முடியும் வரையிலும் ஒரு புதிராகவே இருக்கிறது...!


மழலையாய் மனதை வைத்திரு கவலைகளும் தீண்டாது


நினைப்பதை சரியாக நினைத்தால் நடப்பதும் சரியாகவே நடக்கும்


வாழ்வின் ரகசியங்களை கற்றுத்தரும் வகுப்பறை தனிமை


எவ்வளவு பெரிய பிரச்சனைக்கும் கையளவு மனதிடம் தான் தீர்வுண்டு


மனதிற்கு பிடித்தமானவர்கள் செய்யும் அனைத்துமே அழகானவை தான்


நமக்கும் சேர்த்தே வேண்டிக்குற அந்த மனசுதான் கடவுள்


ஒரு சாதாரண வாழ்க்கை வாழவே எவ்ளோ போராட வேண்டியிருக்கு


கொடுப்பதை வாங்கிக்கொள் முடிவை தெளிவாக எடு


ஒரு குழந்தையைப் போல இந்த பிரபஞ்சத்தைக் காண்பது இன்னும் பேரின்பம்


சிறு புன்னகை நம் கஷ்டத்தை மற்றவர்களின் பார்வைக்கு மறைத்து காட்டுகிறது


ஒருவருக்கு திரும்ப கொடுக்கவே முடியாதது அவர் நமக்கு செலவிட்ட நேரம்


ஆர்வமும் அரவணைப்பும் இருந்து விட்டால் உலகமே நம் கையில்


வலிகளை ஏற்றுக்கொண்டால் தான் வாழ்க்கை அழகாகும்


குழந்தைகளின் அறியாமை மிக அழகு


நேசிப்பதைவிட சுகமானது நேசிக்கப்படுவது


ஏழ்மையிலும் நேர்மை இறைவனுக்கு பிடித்தமான செயல்


சூழல்கள் மாற்றத்தால் சூழ்நிலை மாறும்


எந்த வித எதிர்பார்ப்புகளிற்க்கும் அப்பாற்ப்பட்டது அன்பு மட்டுமே


கண்ணீரில் கரைப்பதைவிட புன்னகையில் கலைத்து விடுவோம் கவலைகளை


பிடித்ததை செய்வோம் இந்த வாழ்வை ரசித்து வாழ்வோம்


சில சமயங்களில் முடிவுகளை விட முயற்சிகள் அழகானவை


நேரமின்மை என்பது நாகரீகமான புறகணிப்பு


நேசங்கள் மெய்யானபின் வேசங்களுக்கு வேலையேயில்லை


சில உறவுகள் வாழ்வில் என்றுமே எதிர்பார்ப்பில்லா வரம் தான்


வார்த்தைகள் ஏதுமின்றி அன்பை வெளிப்படுத்தும் ஓர் அழகான மொழி புன்னகை


பாசம் கூடினாலும் பாரம் குறைந்தாலும் பாரம்


லட்சியங்களின் அடிப்படை அலட்சியங்களே


சரினு பட்டா விட்டுக்கொடு தப்புனு பட்டா தள்ளி நில்லு


வாழ்க்கையில் பொறுமை உள்ளவனே பெரும் பாக்கியசாலி


எங்க போறீங்க இதோ உங்களுக்காக