Latest Collections of Tamil love kavithai SMS & Tamil Love Quotes.
Tamil Kadhal Kavithai Collections.
தமிழ் காதல் கவிதைகள் sms
- காதல் கவிதை
- காதல் கவிதைகள் தமிழில்
தமிழ் காதலர் தினா ஸ்பெஸில்
- காதலர் தினம் கவிதைகள்
- காதலர் தினம் பாடல் வரிகள்
சிறுசிறு சண்டைகள்
காதலின் அம்சம்
பார்வைகள் சந்தித்தால் ஊடலும் ம(ப)றந்துபோகும் ❤️
தோற்றுத்தான் போகின்றது
என் பிடிவாதம்
உன் அன்பின் முன் 💓
நீயருகிலிருந்தால்
இருளிலும் நான்
பௌர்ணமியே...
கவிதை எழுத காதல் தேவையில்லை.....
பெண்களின் அழகை
ரசிக்க தெரிந்தாலே போதும்.......!!!!
வருடாவருடம் பூ புதிதாகலாம் But
வாங்கும் கொடுக்கும் கை
மாறக்கூடாது........
( காதலர்தினம் )
உன்
அன்பெனும்
எண்ணெய்
வற்றாதவரை
நானுமோர்
சுடர்விட்டெரியும்
விளக்கே
உன்னை பிடித்துவிட்டதால்
இனி உனக்கு பிடிக்காதது
எனக்கும் பிடிக்காது...
இதயமும் ஒரு ரகசிய சுரங்கம்
சின்னச்சின்ன
ஊடல்கள்
உன்னை
பிரிவதற்கல்ல
நம் காதலை
வளர்ப்பதற்கு
நீ
உடனில்லாத போது
உன் நினைவுகளுடன்
பயணிக்கின்றேன்
விடுவிக்க
முயன்றும்
தோற்றுப்
போகிறேன்....உன்
பார்வை
பிடியிலிருந்து
உன் நினைவுகளோடு பேசிப்பேசி
ஊமை மொழியும் கற்றுக்கொண்டேன்
சோகங்கள்
இதயத்தை
துளைக்கும்
போதெல்லாம்
புல்லாங்குழலும்
கண்ணீர்
வடிக்கின்றது
இவள் மறைய அவன் வர அவன்மறைய
இவள் வரவென்று வானிலும் ஓர்
கண்ணாமூச்சி
நடுநடுங்கும் குளிரில்
அணைத்துக்கொண்டே
உளறாமல் பேசு என்றான்
எனக்காக நீ விட்ட
ஒரு சொட்டு
கண்ணீர்....
உனக்காகவே
வாழவேண்டுமென்று
இதயத்தில்...
உறைந்துவிட்டது
நாணத்திற்கு
விடுதலை
கொடுத்தேன்
வளையல்களும்
தலைக் கவிழ்ந்தது
கரைசேர
துடுப்பிருந்தும்
கரையேறும்
எண்ணமில்லை
நிலவொளியில்...உன்
நினைவுகள்
நிறைந்திருப்பதால்
நீ மௌனமாகும் போதெல்லாம்
என் கவிதைகளும்
கண்ணீர் வடிக்கின்றது...
விழிகளுக்குள்
நீயிருக்கும் வரை
என் கனவுகளும் தொடரும்...
படிக்காமலேயே
மனப் பாடமாகிப்போனது
உன் நினைவுகள்
சிறை
வாழ்க்கையும்
பிடிக்கும்
அது உன்
இதயமென்றால்
கவிதை வரியின் சுவை
அர்த்தம் புரியும் வரையிலாம்.....
உன் விழிக்கவிதையின்
அர்த்தம் புரிந்தபின்னே
நான் சுவைக்கவே
ஆரம்பித்தேன்
ஒரு நொடி வந்து போனாலும்
மனதை ரணமாக்கியே
செல்கிறது சில நினைவுகள்...
என்னருகில்
நீயிருந்தால்
தினமும்
பௌர்ணமியே
நினைவென்றாலே...
அது நீயானாய்...
கெஞ்சலும்
கொஞ்சலும்
காதலில்
அழகு
தொலைவேன் என்று
தெரியும் ஆனால்
உனக்குள் இப்படி
மொத்தமாய்
தொலைவேன் என்று
நினைக்கவில்லை
வார்த்தைகள்
ஊமையாக
உன்வசமானேன்
காதல் மழையில்
குடை நனைய....
குடைக்குள் காதலில்
நாம் நனைகிறோம்.....
நிலைக் கண்ணாடி
என் முகத்தை காட்டினாலும்
மனக் கண்ணாடியில்
உன் முகத்தையே
ரசிக்கின்றேன்
கண்களுக்குள் என்னவர்
கனவே கலையாதே
தொலை(ந்த)த்தஒன்று
உனக்காக காத்திருக்கலாம் தொலையாமல்...
என்னவரின்
அன்பில்
எல்லையற்ற
மகிழ்ச்சியில்
நான்.......
என் வானம் நீ
தேய்ந்தாலும் மறைந்தாலும்
மீண்டும் வலம்வரும்
நிலவாய் நான்...
காதல் தூறல் போட
சட்டென
வானவில்லாய்
ஆனது மனம்...
மனக்கடலில்
நீ குதிக்க
மூழ்கிப்போனேன் நான்
சூடாக நீ தந்த ஒரு கப் காப்பி
இதமாகவே இருந்தது
உன் அன்பில்
உள்ளத்தின் வண்ணமது தெறிவதில்லை
உடைத்து சொல்லும் வரை புரிவதில்லை
பூ போன்ற மனம் என்றாய் ரசித்தேன்...
இப்படி வாட விடுவாய் என்று தெரியாமல்
குளிர் காலத்தில் நான் வாடினால்
உன் பார்வைதான் என் போர்வையோ
சுத்தமாய் என்னை மறந்து போனேன்
மொத்தமாய் நீ அள்ளும் போது
உன்னுள் உறைந்து
உலகம் மறக்க
ஆசையடா
கண்களில் கைதாக்கி
இதயத்தில் சிறைவைத்து
உயிரில் ஆயுள் கைதியாக்கிவிட்டாய்
உன்னில் தொலைந்த என்னை மீட்டுக்கொடு
இல்லையேல் என்னுள் நீயும் தொலைந்துவிடு
நேற்று வரை எதையோ தேடினேன்
இன்று என்னையே தேடுகின்றேன் உனக்காக
எனக்கு
இன்னொரு தாய்மடி நீயடா...
மறக்க தவிக்கும் நீயும்
மறக்க முடியாமல் நானும்
நீ வெறுக்கும் ஒவ்வொரு முறையும்
இதயம் சிதறிதான் போகிறது
சந்தோஷமாய் பறக்கின்றேன்
சிறகுகளாய் நீ இருப்பதால்
மார்கழி குளிரும்
இதமான வெப்பமானது
உன் நினைவுபுள்ளியில்
கோலத்தை ஆரம்பித்தபோது
இதயம் என்ன போர்க்களமா...
உன் நினைவுகள் இப்படி யுத்தம் செய்யுதே...
என்னவனுக்குள்
தொலைந்த நொடியிலிருந்து
தினமும் எனக்கு காதலர் தினமே
காதல் சிலருக்கு
கண்ணீரின் காவியம்
பலருக்கு அழகிய ஓவியம்
கடலில்
விழுந்த
நீர்துளிப்போல்
உன்னில்
கலந்துவிட்டேன்
கட்டிலறையோடு முடிவதல்ல காதல்
கல்லறைவரை தொடர்வதே காதல்
ஆசை
ஊற்றெடுக்கும்
போதெல்லாம்
அணைபோடுகிறது
நாணம்.......
தழுவிச் செல்லும்
காற்றிலும் உன்
நினைவுகளே
கூந்தலை
கலைத்துச் செல்கையில்...
புரிந்துக்கொள்ளும் வரை
எதையும் ரசிக்கவில்லை
புரிந்துக்கொண்டபின்
உன்னை தவிர எதையும்
ரசிக்கமுடியவில்லை...
அகிம்சையாக உள்ளே நுழையும்
சில நினைவுகள்
வெளியேறும் போது
போர்க்களமாக்கிவிட்டு
செல்கிறது மனதை...
ஆரவாரமின்றி அமைதியாகவே கடந்துச்செல்கிறாய்
என் விழிகள் தான்
ஏனோ உன் வழியை தொடர்கிறது...
மனதிலுள்ள
ஆசையெல்லாம்
நீ பார்க்கும் போது
நாணத்தில்
மறைந்துக்கொ(ல்) ள்கிறது
விழிகளை மூடிக்கொள்
என்னாசைகளை நிறைவேற்ற
அன்பெனும்
மாளிகையில்
அழியாத
பொக்கிஷம்
நம் அழகிய
நிகழ்வுகள்
உன் நெஞ்சத்தின்
பஞ்சணையில்...
என் கவலைகளும்
உறங்கிவிடும்
என்ன மாயம் செய்தாய்
உனக்கெழுதும் வரிகளெல்லாம்
மாயமாக மறைகிறதே
நீயில்லா நேரம்
நினைவுகள் பாரம்
ஆயுளின் காலம்
எதுவரையென்று
தெரியாது ....
ஆனால் உனதன்பிருக்கும்வரை
என் ஆயுளிருக்கும்...
விழி பார்த்து
பேசு என்கிறாய்
உன் விழி நோக்க
மொழிகளும்
மறந்து போகிறது...
காத்திருந்து
களைத்துவிட்டது
கண்கள்
கனவிலாவது
கலந்துக்கொள்
தனிமையை
நேசிக்கின்றேன்
உன் நினைவுகளுக்காக...
நீ வெட்கித்தலை குனிந்து
கொலுசுமாட்டும் அழகில்
நான் சொக்கித்தான்
போகின்றேன்...
உன் தொலைதூர
பயணத்தில் என்னையும்
சுகமாகவே சுமந்துச்சென்றிருகிறாய்
என்று விடாமல் ஒலிக்கும்
உன் தொலைதூர குரல்
சொல்லாமல் சொல்கிறது...
விடிந்தபின்னும் உறங்கிகிடக்குறேன்
விழிமூடாமல் உன் நினைவில்...
எனையறியாமல்
உறங்கிப்போனேன்
உனதன்பில்...
தனிமையின்
இடைவெளியை
நிரப்புகின்றது
உன் .....
நினைவுகள்...
அடிக்கடி நினைக்க வைத்து
கன்னத்தை நனைத்துச்
செல்கிறாய்...
காற்றோடு வந்த காதல் மொழியில்
நான் காத்தாடியானேன்...
வாடிய மனம் வானவில்லானது
உன் வருகையை கேட்டு...
மொழியில்
சொல்லத்தயங்கும்
ஆசைகளையெல்லாம்
விழியில்
கொட்டித்தீர்க்குறேன்...
என்னைவிட நம் காதலை பாதுகாத்தது
நீ நான் தவறவிட்டபோதெல்லாம்
தாங்கி பிடித்தாய்...
இரவும்
கடந்துக்கொண்டிருக்க...
உன் நினைவுகள்
உரசிக்கொண்டிருக்க....
என் உறக்கமும்
தொலைந்துக்கொண்டிருக்கு
நீ பொழியும்
அன்பின்
அருவியைவிடவா
இந்த
மலையருவி என்னை
மகிழ்விக்கபோகிறது...
தயக்கமின்றி மனதுக்குள் நுழைந்து விட்டாய்
வார்த்தைகள் தான் உன்னெதிரே தயங்கி தவிக்கிறது...
உன்
நினைவுத்...
தென்றலில்
நானுமோர்
ஊஞ்சலாகின்றேன்
ஆசைகள் கடலாய்
பொங்க......
வெட்கங்கள் அலையில்
அடித்துச்செல்ல......
அச்சங்கள் கரையொதுங்க
முத்தங்களும் தொடர்ந்தது.....
புயலைவிட
வேகமாக
தாக்குகிறது
உன் பார்வை.....
கொஞ்சம்
தாழ்த்திக்கொள்
நான்
நிலையாக
நிற்க....
தொல்லைகள்
செய்யாமல்
தொலைவாகவே
தொடர்ந்து
என்னை
உன்னில்
தொலைக்க
செய்தாய்.
விழிகள் அடிக்கடி
மோதிக்கொள்ள
இதயங்கள் ஒன்றானது...
நிசப்தமான இரவில்
உன் நினைவுமோர்
அழகிய கவிதை...
விழித்துக்கொண்ட நினைவுகள்
உறங்கும் போது விடியலும் வந்துவிடுகிறது...
பிடிவாதத்தில்
ஜெயிப்பதைவிட
உன் அன்பிடம்
தோற்பதையே
விரும்புகிறேன்.
தனிமையை
இனிமையாக்க
உன்
நினைவுகளால்
மட்டுமே முடியும்...
மேகங்கள் சூழ்ந்த
நிலவாய் நான்
காற்றாகி ஒளித்தந்தாய் நீ
என்னை அழவைத்து அழகு பார்ப்பதும் நீ தான்...
அருகில் வைத்து அரவணைப்பதும் நீயே தான்.....
நேசித்தலை விட பிரிதலின் போது உன் நினைவுகள் இரட்டை சுமை...
மனதின் அழுத்தம் குறைக்க ஒருமுறை கடன்கொடு உன் இதயத்தை..!!
தென்றல் மோதி பூக்களுக்கு வலிப்பதில்லை...
உன் நினைவுகள் மோதி என் உள்ளம் வலிக்கின்றது...
ஏட்டில்
படித்த
எதுவும்...
மன
ஏட்டில்
பதியவில்லை...
உன்
நினைவுகளை
தவிர
வாடிய காதலுக்காக
தினமும் புதிதாய்
பூக்கின்றது கவிதை
நீங்காத இரவொன்று
வேண்டும்....அதில்
நிலையான கனவாக
நீ நிலைக்க வேண்டும்
தாயின்
நினைவில்
தவித்துப்போனான்
நானுமோர்
தாயாகிப்போனேன்
உன் நினைவுகள்
விழித்துக்கொள்ள
உறக்கமும்
கலைந்தது
தோளில்
சுமைகளை
சுமந்த
தோழன்
மார்பில்
சாயும்
வரம்
கொடுத்தான்
கணவனாகி
என்னை தேடியபோதுதான்
உணர்ந்தேன் உன்னில் தொலைந்திருப்பதை.
நீ மௌனமாகும் போது என் கண்ணீர் பேசுகிறது
வெகு நாட்களுக்கு பிறகு
எனக்காக உறங்க போகிறேன் வந்துவிடாதே கனவில்.
நொடியேனும்
மறக்க முடியாமல்
உன்னையே
நினைக்க வைக்கும்
உன் நினைவுமோர்
எட்டாவது அதிசயமே.
நீ போகுமிடமெல்லாம் என் மனதையும் எடுத்துச்செல்
உன்னை தேடியே என்னை கொல்கிறது.
உன்முன்
உளறிக்கொட்டாமல்
சரளமாய் பேச...
கண்ணாடி
முன்னொரு
ஒத்திகை
மீண்டும் ஒரு பிரிவை தரும் எண்ணமிருந்தால் தொடராதே
யாழிசை
மீட்ட வந்தேன்......
உன்
இதழிசையில்
மூழ்கிப்போனேன்
நினைப்பதை கொஞ்சம் நிறுத்திவை விக்கலில் சிக்கி தவிக்கின்றேன்
என்னையும் மீறி
உன்னை திரும்பி
பார்க்க வைக்கிறது.....
என்னை
கண்டுக்கொள்ளாமல் போகும்
உன் பார்வை
தொலைக்காத போதும் தேடுகிறேன் உன்னை
நிலவின்றி இரவு தொடரலாம்
உன் நினைவின்றி
என் விடியல் தொடராது.
இந்த நொடி
இப்படியே
நீண்டிட
வேண்டும்
முற்றுப்புள்ளி வைக்கும் போதெல்லாம்
அருகிலொரு புள்ளிவைத்து செல்கிறாய்....
பிரிந்திருந்த
நாட்களில் தான்
நம் காதல்......
விருட்சமாக
வளர்ந்திருக்கின்றது
என உணர்ந்தோம்
நாம் சேர்ந்தபோது
தீட்டிய
கத்தியைவிட
தீண்டும் உன்
பார்வை
கூர்மையாகவே
தாக்குகின்றது
கொட்டும் மழை
கொண்டுவந்து
சேர்த்தது.....
மறந்துப்போன
மழைக்கால
நிகழ்வுகளை
கண்ணீரும்
கனமானது
உன்னால்
வந்தபோது
இரவின் பிடியில் சிறைப்பட்டிருக்கும்
நிலவைப்போல் உன் நினைவின் பிடியில் நான்...
பாசம் காட்ட
பல உறவுகள்
இருந்தாலும்.....
மனம்
களைப்பாகும் போது
இளைப்பாற தேடுவது
உன்னையே
தேய்பிறை நிலவுக்கு தான்
உன் நினைவுக்கு அல்ல...
உனக்காகவே என் வாழ்க்கை என்று
நீ சொன்னபோது தான்
என்னை எனக்கே பிடித்தது...
உனக்காக
காத்திருக்கும்
ஒவ்வொரு
நிமிடமும்
உணர்த்துகிறது
நீயில்லாத வாழ்க்கை
வெறுமை என்று...
உன்னருகில்
மௌனமும்
ஓர் அழகிய கவிதை தான்...
உன்
விரலிட்ட
பொட்டு
வட்ட
நிலவாக
நானுமோர்
பௌர்ணமியானேன்...
மனதுக்குள்
ரசித்தாலும்
மயங்கிப்போகிறேன்
விழிகளுக்குள்
உன்....
பிம்பம்
வந்துநிற்க
ரசிக்க
காத்திருந்தபோது...நீ
இசைக்கவில்லை....
இன்று இசைக்க
காத்திருக்கின்றாய்
ரசிக்கும்
மனநிலையில்
நானில்லை
உன் பார்வையென்ன
மருதாணியா பட்டதும் சிவக்கின்றதே முகம்
கவிதைக்கு
வரிகள் கேட்டேன்........
உன்னிதழின்
வரிகளைவிட
அழகிய
வரிகளில்லை
என்றான்
மனமின்றி
விடைகொடுத்தாய்
மரணித்தே
விடைபெற்றேன்
புகையும்
உன்
நினைவில்
புதைந்து
கொண்டிருக்கின்றேன்
உணர்வற்ற கவிதைக்கும்
உயிர் வருகிறது
நீ ரசிக்கும் போது
பூ
தலைசாய்ந்தால்
தாங்கிக்கொள்ளும்
கிளையைபோல்
நான்
தலைசாய
நீ வேண்டும்
தாங்கிக்கொள்ள
சொல்லாமல் கொள்ளாமல் தழுவிச்செல்லும்
தென்றலைப்போல்
மனதை வருடிச்செல்கிறது
உன் நினைவுகள்
மறையும் வரை
திரும்பிவிடாதே
என்னுயிர்
வந்துவிடும்
உன்னுடன்
எழுதவில்லை
செதுக்குகிறேன்
உனக்கான கவிதையை
என் இதயத்தில்
மரணத்தை கொடுத்துவிடு
ஒரு நொடி வலி
மௌனத்தை கொடுக்காதே
ஒவ்வொரு நொடியும் மரண வலி
பார்வையில் மனதை
பறித்துச்சென்றாய் நான் சிறகிழந்த பறவையானேன்...
சுழற்றியடிக்கும்
காற்றையும் எதிர்த்து
சுடர்விட்டெரிகிறது
அகல்விளக்கு....
பல ஆசைகளுடன்
என்னைப்போலவே
உன்னை வரவேற்க
அன்பு காட்டுவதில்
ஜெயிப்பது நீயென்றால்
உன்னிடம் தோற்பதும்
எனக்கு வெற்றியே...
இளகாத
உன் மனதால்
மெழுகாக
நானுருகி
வரிகள் பல
வடிக்கின்றேன்
கற்பனையில்
காதல் செய்து
உன் தேடல் நானென்றால்
தொலைவதும்
ஒரு சுகமே
மயக்கும்
மல்லிகையை
கையில்கொடுத்து
மனதில்.....
அணையா
ஆசையை
மூட்டிச்சென்றான்
விழிகளை
திறந்தால்
நாணம்
தடைபோடுமென்று
விழிமூடி கொள்கிறேன்
உன் இதழோடு பேச
உன்
விழிகளை நோக்கும் போது
கண்களுக்குள் என்னை
காண்பதைபோல்.....உன்
மனதிலும் நானேயிருப்பேன்
என்ற எண்ணமே
நம் வாழ்க்கையை
அழகாக்குகின்றது
மரக்கிளையில்
சாய்ந்தேன்
உன்
நினைவுகள்
துளிர்விட்டது
வரிகளில்லா
அழகிய கவிதை
உன் விழிகளில் ரசித்தேன்...
அங்கே உன்
நிலையென்ன....என்ற
நினைப்பிலேயே
என் நிமிடங்கள்
நகர்ந்துக்கொண்டிருக்கு
உன்
தொடரலே
என்
உலகத்தை
அழகாக்குகின்றது
பூவுக்குள்ளும்
பூத்திருக்கின்றது
உன்
காதல்
வாசனை
வேள்வியின்றி
எரிகின்றேன்
உன் விழித்
தீயில்
நம்
வாழ்க்கையை
வண்ணமாக்க....
உன்
கையை
தூரிகையாக்கினாய்
ஒற்றை
விழியில்
நோக்கினாலும்
எங்கும் நீயே
என்
இருவிழிகளாய்
நீ
தாமதிக்கும்
ஒவ்வொரு
நொடியும்
கடிகாரமுள்ளைவிட
அதிவேகமாகவே
துடிக்கின்றது
என்
இதயம்
நீ
பொய்யாக
வர்ணிக்கும்
போதெல்லாம்.....
நாணம்
என்னை
மெய்யாகவே
அழகாக்குகின்றது
என்னைப்பற்றிய
கவலைகள்
எனக்கில்லை
அக்கறைக்கொள்ள
நீயிருப்பதால்......
கடற்கரையில்
கால் பதித்தேன்
உன் நினைவுகளும்
ஒட்டிக்கொண்டது...
தனிமையில்
பயணங்கள்
களைத்ததில்லை
துணையாக
உன்
நிழல்
இருப்பதால்...
சிந்திக்க
பலயிருந்தாலும்
முந்திக்கொள்கின்றாய்..நீ
காவலன்
நீயானாய்
கைதி
நானானேன்
தள்ளாடிப்
போகின்றேன்.....
தென்றலில்
தள்ளாடும்
கூந்தலைப்போல்
உன்
கரம்
கன்னத்தில்பட
விரும்பியே
தொலைகின்றேன்
விலகிவிடாதே...
காதலின்
பிடியில்
சிக்கித் தவித்த
மலருக்கும்
ஆசை வந்தது
மரணிக்காமல்
வாழ......
சிறு ஊடல்
ஒரு காத்திருப்பில்
வளர்கிறது காதல்
மனதை
மயக்குகின்றாய்
மருதாணி
வாசனையாய்.....
என்னை
மௌனமாக்கி
நீ
விழியில்
பேசியே
வென்றுவிடுகிறாய்
மின்னலாய்
நீ வர
மழைச்சாரல்
மனதுக்குள்
உன்
மொழியில்லா
ஆறுதலில்
எனை
மறந்துப்போனேன்
முழுதாய்
மறைவதற்குள்
நிலவு விழித்துக்கொள்வதென்ன
உன் நினைவு
நீ
ரசிக்க
நானும் ஒரு
சிலையானேன்
முடியாத பயணம்
நான் தொடர வேண்டும்
உன் கரம் பிடித்து...
வெறுமையான
வாழ்க்கையும்
வசந்தகாலமானது
உன்னால்....
கடவுளை
அழைத்தேன்
காட்சித் தரவில்லை
என்னவரை
நினைத்தேன்
கண்ணெதிரே
தோன்றினார்
மொத்தமாய்
உன்
அன்பு
என்னை
ஆதிக்கம் செய்ய
சுத்தமாய்
மாறிப்போனேன்
நானும்
என் பிழைகளை
திருத்தும்
பிழையில்லா
கவிதை ... நீ
இதயக்கதவை
உன் நினைவுகள்
தட்ட........
எட்டிப்பார்கின்றது
விழிகளும்
நீ வரும்
வழியை நோக்கி.......
எரிக்கும் உன்
பார்வைத்தீயில்
உருகும்
மெழுகாய் நான்....
நான் இரவில்
தூங்கிய நேரத்தை
விட உனக்காக
ஏங்கிய நேரமே
அதிகம்
உன் புன்னகை
என் உலகத்தைக் கவர்ந்தது
உன் மௌனம்
என் இதயத்தை
உன்னிடம் கட்டுப்படுத்தியது
உன் சிரிப்பில்
நான் காணும் சந்தோஷம்
என் வாழ்வின் ஒளியாகும்
உன்னில்
நான் காணும் அழகு
என் வாழ்வின்
ஒவ்வொரு நாளையும்
சிறப்பாக்குகிறது
தூரம் எவ்வளவு இருந்தாலும்
என் காதல் உன்னுடன்
எப்போதும் இணைந்திருக்கிறது
உன் காதல்
எனக்கு ஒரு
அழகான கனவின்
தொடக்கம்
காதலில் அடையாளங்கள்
தேவையில்லை
உன் வருகை போதும்
என் வாழ்வில்
அது முழுநிறைவாய்
மலர்ந்துவிட்டது
என் உலகமே
நீயாகிவிட்ட பிறகு
என் கால்களும்
உன் பாதையில்
தான் திசைமாறுகிறது
நீ எனது வாழ்க்கையின்
அழகான அத்தியாயம்
எப்போது என்றும்
உன்னை நினைக்கும்போது
என் இதயம் மகிழ்கின்றது
எப்போது நீ அருகிலிருப்பாய்
எனது உலகம்
ஒரே நொடியிலேயே
அழகானதாக மாறிவிடுகிறது
உன் தோளில் சாய்ந்த
ஒரு நொடி
என் வாழ்க்கை
முழுவதும் தேவை
என் இதயத்தின்
காதல் வலைகளில்
நீ தான் என் அடையாளம்
உன் அழகான இதயம்
என் வாழ்வின்
சிறந்த பாதையை ஒளிர்த்துவிடும்
கண்கள் பேசும் உணர்வுகள்
வார்த்தைகளால்
விளக்க முடியாத
காதலின் வர்ணங்கள்
உன் கைபிடித்த நொடியில்
என் வாழ்க்கை
முழுமையாகி விட்டது
காதலான உறவு
இரு இதயங்களும்
நேரம் என்ற அச்சில்
ஒன்றாக செதுக்கப்படுவது போன்றது
என் கவலைகளை
கேட்க வேண்டாம்
உன் பார்வை
மட்டும் போதும் ஆறுதலுக்கு
விடியலின் வெளிச்சம் போல்
உன் நேசம்
என் வாழ்வை பிரகாசமாக்குகிறது
உன்னுடன்
காலத்தை கழிப்பது என்பது
ஓர் அழகான கவிதையை
எழுதுவது போல
என் இதயத்தில் எப்போதும்
உன் பெயர் உள்ளது
அது எனக்கு அதிக
அன்பையும் பளிச்சிடும்
உன் கண்களின் ஆழத்தில்
இழந்தேன் என்னை
அதை மீண்டும்
காண நினைத்தேன்
ஆனால் நீயே
என் உலகம்
என்பதை உணர்ந்தேன்
நீ நடக்கும்போது
பூக்கள் மலர்கிறதே
அது என் இதயத்தின் உவமை
நேசிப்பது காற்று போன்றது
அதை தெளிவாக
காண முடியாது
ஆனால் உணர முடியும்
உன்னுடைய கண்ணீர் கூட
என் இதயத்தில்
ஒரு அன்பின் துளியாய்
புகுந்து போகும்
உயிரை தாண்டி
நினைவில்
நிற்கும் நினைவுகள்
காதலின் அடையாளம்
நீயில்லை என்றால்
என் இதயம்
இசையற்ற வீணை
உன் சுவாசம்
என் உயிரில்
அவசியமான பாடல்
போல இருக்கிறது
உன் இதயத் துடிப்பில்
சிக்கிய என் காதல்
எனது மூச்சாக மாறிவிட்டது
என் கண்களை பார்த்தால்
உனக்கே தெரியும்
உன் அன்பே என் சாந்தி
தென்றல் தழுவும்
தீண்டலின் உணர்வாய்
காதல் பிறக்கிறது
நீயின்றி என் உலகம்
வெறும் வெள்ளை
தாளாகவே உள்ளது
என் இதயத்தின் இசை நீ
ஒவ்வொரு நொடியும் உன் பாடல்
நான் உன்னை காதலிக்கும்போது
என் இதயம் அந்த நொடியில் பூக்கும்
உன் நினைவுகள்
கனவாக மாறினால்
என் வாழ்க்கை வரலாறு ஆகும்
என் கனவுகளின்
எல்லைகளிலும்
நீயே இருப்பது
காதலின் மாயம்
உன் மௌனத்திலும் எனக்கு காதல் தெரிகிறது
நீயிருக்கும் இடம்
வெப்பமான நிலம்
அங்கே என் உயிர்
ஒவ்வொரு முறை புதிதாக பூக்கும்
ஒரு பார்வையில் உனது காதல் என் சுவாசம் ஆகி விடுகிறது
உன் அன்பு
எனது இதயத்தின்
வேதியியலை மாற்றும் மந்திரம்
உன்னைக் காணாத ஒரு நாள்
என் கண்களுக்கு இரவாகிறது
ஒரு முறை
பார்த்தால் மட்டும் போதும்
உன் கண்களில்
என் வாழ்வை கண்டேன்
என் இதயம்
உன்னுடன் எழுதப்பட்ட
ஒரு காதல் கவிதை
காதல் கண்களால்
தொடும் முத்தம்
இதயத்தில் எப்போதும் அழியாது
காலம் நம்மை பிரித்தாலும்
என் உள்ளத்தில்
நீ எழுதிய
காதல் கதையை
அழிக்க முடியாது
உன் ஒரு முத்தம்
எனது இதயத்தை
நேராக கனவுகளின் வெளிச்சத்திற்கு
அழைத்துச் செல்கிறது
மழையில் நனைவது
என்னவோ அழகு
ஆனால் உன் முத்தத்தில்
நனைவது மயக்கமே
உன் மூச்சின் சூடில் என் இதயம் புதிதாய் உயிர் கொள்கிறது
மூச்சின் சூடில்
வார்த்தைகள் உறங்க
இரவுகள் எரிகின்றன
நெருப்பை தொடுவதுபோல் ஒரு பார்வை
ஆனாலும் மீண்டும் மீண்டும்
அதில் கரைய விரும்பும் மனது
உன் கண்கள்
ஒரு கிணறாக இருந்தால்
அதில் மூழ்கி என்னை
மறக்க தயாராக இருக்கிறேன்
விரல்களின் உறையாடலில்
தீப்பிழம்பாய் மூள்கும் நம் ராகம்
உன்னை நேசிக்க கற்றுக்கொள்ளவில்லை
உன்னுடன் இருக்கும்
ஒவ்வொரு நொடியும்
காதலாக மாறியது
நீயில்லா ஒரு உலகத்தை
நினைத்தாலே அந்த உலகம்
வெறும் காகிதக் கவிதை
போல தோன்றுகிறது
உன் உடலில்
ஓர் இலக்கை தேடுகிறேன்
அது என்னிடமே முடிகிறது
என் கை உன் உடலில்
தடவி செல்லும்போது
அது சத்தமில்லாமல்
எழுதும் காதல் கவிதை
நீ என்னை பார்த்தால்
கண்கள் சிரிக்கிறது
நீ பேசினால்
என் இதயம் நடனமாடுகிறது
இரண்டு இதயங்கள்
ஒன்றாய் துடிக்கும்போது
நேரம் கூட
அதன் சப்தத்தில் தொலைந்துவிடும்
சில நேரங்களில்
உன் பெயரை சொல்லாமலே
மனதில் கேட்டுக்கொள்வதே
உண்மையான காதல்
காதல் என்பது
இரண்டு இதயங்கள்
ஒன்றாக துடிப்பதல்ல
ஒரு இதயம்
அடுத்த இதயத்திற்காக துடிப்பதே
உண்மையான காதல்
எந்த வார்த்தையும் தேவையில்லை
உன் கண்கள் பேசும் மொழியைத்தான்
என் இதயம் உணர்ந்து விடும்
நான் உன்னை காதலிக்கவில்லை
நான் உனக்குள்
மூழ்கிக்கொண்டே இருக்கிறேன்
கண்ணில் பார்க்க முடியாத
ஒன்றுதான் உண்மையான காதல்
ஆனால் அதை
மனம் மட்டும் உணர முடியும்
நினைவுகளில் வாழும் காதல்
என்றும் அழியாது
அது உயிரின் ஓரமாக நிலைக்கும்
நீ எனக்காக கொடுத்த
ஒரு சிறிய நினைவுப் பரிசு கூட
என் உலகத்தையே மாற்றிவிடும்
உன் வாசனை
என் சரீரத்தை பற்றிக்கொள்ளும் போது
உணர்வுகளின் நட்சத்திரங்கள்
இரவில் மட்டுமல்ல
என் கண்களில் ஒளிர்கின்றன
இதயம் துடிக்கிறது
ஏனோ தெரியவில்லை
ஆனால் ஒரு பார்வையில்
முழுவதுமாக உருகிவிடுகிறது
காதல் என்பது
கண்கள் பார்க்கும் அழகு அல்ல
இதயம் உணரும் உண்மை
காதல் மெல்லிய
தீயாக இருக்கலாம்
ஆனால் காமம் அதில்
பிரம்மாண்டமான
வெப்பத்தை சேர்க்கும்
உன் அணைப்பு
எனக்கு ஒரு கவிதை
போல இருக்கிறது
அது விரிந்துகொண்டு
போகவேண்டும் முடிவில்லாமல்
உன் உதடுகள்
பேசும் கவிதையை விட
அதனை நான் உணர்வதே
எனக்கு பிடித்த கவிதை
அரவணைப்பில் நான்
உலகத்தை மறந்தாலும்
உன் நேசத்தில் நான்
என்னை மறக்க மாட்டேன்
இதழ்களின் அமைதியில்
என் ஆசையின்
சூறாவளி உறங்குகிறது
நம் காதல்
ஒரு மழை போல
தொடும்போது இன்பம்
இல்லாத போது ஏக்கம்
உன் இதயம்
என் மார்பில் சாய்ந்த கணம்
காலம் நின்று போனது போல் உணர்கிறேன்
மூச்சின் சூடான தென்றல்
என் இதயத்தை வருடும் போது
காதல் என்பது
நம் உடலில் ஓடும்
ஒரு மின்சாரம் போல தோன்றுகிறது
காதல் என்பது
உரையாடல் அல்ல
இருவரும் புரிந்துகொள்ளும்
அமைதியான மெளனம்
உன்னைக் காதலிக்க
ஆரம்பித்த நாளிலிருந்து
என் உலகமே புதிதாக மாறிவிட்டது
உன் உதடுகளின் தேன்
எனை முழுவதும் மீட்டெடுக்கிறது
கண்கள் பேசும்
மொழியைக் கேட்க
என் இதயம்
ஆர்வமாக துடிக்கிறது
நீ அருகில் வந்தாலே
என் உடல்
ஒரு கனலில்
கரைய தொடங்கும்
நீ என்னை ஒருமுறையாவது
தீவிரமாக பார்த்தால்
என் உயிரே உன்னுள் மூழ்கி விடும்
காதல் என்பது
உடலால் தொட முடியாத ஒன்று
ஆனாலும் இதயத்தைக் கொள்ளை கொள்கிறது
ஒருவரை உண்மையாக நேசித்தால்
அவர்கள் அருகிலிருப்பதற்கு மேலாக
அவர்கள் உள்ளத்தில் நீ வாழ வேண்டும்
நீ தொட்டதை நான் உணரும்போது
என் உடல் காதலாகவும்
ஆசையாகவும் உருக்கப்படுகிறது
காதலிக்கும் இருவருக்குள்
சொல்லப்படாத வார்த்தைகள் அதிகம்
ஆனால் அந்த மௌனமே
அவர்களின் உண்மையான மொழி
காதல் என்பது
கண்ணில் தொடங்கும் கனாக்கள்
இதயத்தில் எழுதப்படும் கவிதைகள்
காதலின் ஆழம்
கடலாக இருந்தாலும்
உன் ஒரு முத்தம்
அந்த கரையை தொடுகிறது
காதல் என்பது
மனதில் பூக்கும் ஒரு மலர்
ஆனால் அதன் மணம்
வாழ்நாளெல்லாம்
காற்றில் நிறைந்திருக்கும்
உதடுகளின் அருகே
வார்த்தைகள் முடங்கி விடும்
காதல் மட்டும் பேசும்
காதலான கண்கள்
பார்வையில் மட்டும் இல்லை
ஒவ்வொரு நினைவிலும் வெளிப்படும்
மௌனமான கண்களால்
சொல்லப்படும் காதல்
ஆயிரம் வார்த்தைகளை விட
ஆழமாக இருக்கும்
நினைவுகளில் நிறைந்திருப்பதை விட
நெஞ்சில் ஒளிந்திருப்பதே
உண்மையான காதல்
காதலின் வலிமை
கைகளால் அளவிட முடியாது
ஆனால் மனதால் உணரலாம்
வார்த்தைகள்
இல்லாத காதல்
கண்களால் மட்டுமே பேசும்
முடிவில்லா பாதையில் கூட
காதல் ஒருவரை விடாமல் சேர்த்துவிடும்
காதல் வார்த்தைகளில் இல்லை
அது பார்வையின்
மௌனத்தில் மட்டுமே உணரலாம்
இதயம்
தவிக்கும்போது மட்டுமே
காதல் உணர முடியும்
முடிந்த வரை காதல் செய்
ஆனால் காதலிக்க
ஒரு காரணம் தேடாதே
முகத்தில் இல்லாத புன்னகை
மனதின் உள்மூச்சில் மட்டும்
பிரதிபலிக்கிறது
எத்தனை பேர் வந்தாலும்
ஒருவரின் அன்பு மட்டும்
வாழ்நாளில் அழியாத
இடம் பிடிக்கிறது
இரண்டு இதயங்கள்
ஒன்றாக துடித்தால்
வார்த்தைகள் தேவையில்லை
கண்கள் பேசிக்கொண்டே
இருக்கும் போது
வார்த்தைகளின் தேவையே இருக்காது
Latest Post
Tamil SMS Facebook Group and Telegram Channel
Join Now