Latest Collections of Tamil SMS, Kavithai, Tamil Quotes, Tamil Love Kavithai Images, and More.
கவிதைகள் 2018-2024
Bookmark this Link :-) we will update this Page regularly.
தமிழ் கவிதைகள்
- காதல் காவிதைகள்
- காதல் கவிதைகள் தமிழில்
- தமிழ் கவிதை images
- தமிழ் காதல் கவிதை images
- Kavithai Blog - Tamil SMS Kavithai Collections
- Tamil Kavithai images
- Tamil Kavithai Database and Kavithai index
- Random Tamil Kavithai Collections
Tamil SMS Kavithai Images
இது தான் எதார்த்தம்னு
ஏத்துக்க மாட்டோம்
பல ரணங்கள்
கஷ்டங்களுக்கு
அப்புறம் இது தான்
எதார்த்தம்னு ஏத்துக்கிறோம்
மறக்க முடியாத இடத்தில்
நீயும்வெறுக்க முடியாத
இடத்தில் நானும்
இருக்கும் வரை
எதோ ஒரு ஓரத்தில்
வாழ்த்துக் கொண்டே
இருக்கும் நாம் காதல்
வாய்ப்புகள்
கிடைக்கும்போதே
அதை சரியாக
பயன்படுத்திக் கொள்
ஏனென்றால் வாய்ப்புக்கு
மறு பெயர் தான் வாழ்க்கை
பதட்டமான மன நிலையில்
வேகமாக செல்வதை விட
தெளிவான மன நிலையில்
மெதுவாக செல்வதே சிறந்தது
வலி இன்றி சிரிக்கும்
சிரிப்புக்கும்
விழியின்றி
சிரிக்கும் சிரிப்புக்கும்
ஆயிரம் அர்த்தம் உண்டு
அடைய வேண்டிய இலக்கு
அவசியம் என்றால்
பாதை கடினமானலும்
பயணிக்க தான் வேண்டும்
பலமில்லாத போது
பகை கொள்ளக்கூடாது
பலம் வந்த பின்
திமிர் கொள்ளக்கூடாது
மனிதர்கள் எதை
வேகமாக விரும்பி
ஏற்கிறார்களோ
அதே வேகத்தோடு
அதை வீசியும்
எறிகிறார்கள்
ஆயிரம் இரவுகள்
காத்துக் களைத்து
போனது என் இதழ்கள்
உன் இதழ் முத்தம்
இல்லாமல்
எவ்வளவு முயன்றும்
மாற்ற முடியாத
விஷயங்களை அதன்
இயல்பான ஏற்றுக்
கொண்டு கடந்து
செல்வதற்கு பெயர்
தான் பக்குவம்
நடக்க வாய்ப்பில்லை
என்று தெரிந்தாலும்
சில ஆசைகள் எப்பொழுதும்
அழகானவை தான்
உடைந்து போக ஆயிரம்
காரணங்கள் உண்டு
உயர்ந்துவர ஒரே வழி
தன்னம்பிக்கை
முடியும் என்றால்
நிச்சயமாக ஒரு நாள்
விடியும்
குறைகளை தன்னிடம்
தேடுபவன் தெளிவடைகிறான்
குறைகளை பிறரிடம் தேடுபவன்
களங்கப்படுகிறான்
வாழ்க்கை ஒரு
விசித்திரமான புத்தகம்
நேற்றைய பக்கத்தை
திரும்பிப் பார்க்கலாம்
ஆனால் நாளைய பக்கத்தை
புரட்டிப் பார்க்க முடியாது
சில இடங்களில்
சில சூழ்நிலைகளில்
நம்மை பற்றி
கருத்து வேறுபாடு
கிண்டல்கள் அல்லது
குறைகளை
முன்வைத்தால் அமைதியாக
ஒரு சிரிப்புடன் விலகிவிட்டால்
சாலச் சிறந்தது
யாரையும் கவர
வேண்டும் என்று
எண்ணம் இல்லாதவர்கள்
எல்லோரையும் கவர்ந்து
விடுகிறார்கள்
சிரிக்கும் பொது
வாழ்க்கையை
ரசிக்க முடியும்
ஆனால்
துன்பத்தின்போது தான்
வாழ்க்கையை புரிந்து
கொள்ள முடியும்
நமக்கு நடந்த
ஏமாற்றங்களில் இருந்து
என்ன பாடம்
கத்துகிட்டோமுனு தான்
யோசிச்சு பார்க்கணுமே
தவிர அதையே நினச்சு
வருத்தப்பட்டுக்கிட்டு
இருந்தோம்னா நம்ம நிம்மதி
தான் போகும்
அன்பு காட்டி சிலரும்
காயப்படுத்தியே சிலரும்
மனதில் நீங்கா இடம்
பிடித்து விடுகிறார்கள்
இரு வித மனிதர்களை
மறக்கவே முடிவதில்லை
நெடுங்காலம்
புகைந்து
கொண்டிருப்பதை
விட ஒரு கணமே எனும்
பற்றி எரிவதே மேல்
நமக்கான தேடல்
முடியும் வரை
பயணித்துக் கொண்டு தான்
இருக்கிறோம்
வாழ்க்கை எனும் பாதையில்
நான் தனியாகவே
நடக்கிறேன் நடுவழியில்
விட்டு விலகும்
மனிதர்களோடு
பயணிப்பதற்கு
தனிமையில்
நடப்பதே நல்லது
கவலை இல்லையெனில்
மனிதனும் இல்லை
சூழ்நிலைகள் மாறும் போது
சிலரது வார்த்தைகள் மாறும்
சிலரது வாழ்க்கையும் மாறும்
மூச்சு விடாமல்
பேசும்
உன் விழிகளால்
படபடக்கிறது
என் இதயம்
நம்மை தவிர்க்க
நினைப்பவர்களுக்கு
விலகி வழி விட்டு
ஒதுங்கி செல்லுதல் கூட
ஒரு வித நாகரிகம் தான்
வாழ்க்கையில் யாரு
எப்போ நமக்கு முக்கியம்
ஆவாங்க யாரு எப்போ
நமக்கு விரோதி ஆவாங்க
என்பது யாருக்கும்
தெரியாது
சில திருத்தங்கள்
கடுமையானவை தான்
ஆனால் பாதையை
தொடர்வதற்கு
கடந்து தான் ஆக வேண்டும்
வாழ்க்கை என்பது
ஒரே ஒரு முறை
கிடைக்கும் சலுகை
அதை கவனமாக
செலவழி
எல்லாத்தையும் கடந்து
செல்வதை விட
அங்கங்கே மறந்து
சொல்லுங்கள்
உடலும் மனதும்
ஆரோக்கியமாக
இருக்கும்
மொழிகள் ஆயிரம்
இருப்பினும் மௌனம்
மட்டுமே அழகாய்
பேசுகிறது யாரையும்
புண்படுத்தாமல்
உணர்வுகளை
புரிந்து கொள்ள
முடிந்தவர்களால் மட்டுமே
தன் உறவுகளை
காப்பாற்ற முடியும்
தன் உணர்வுகளை
முழுமையாய் உணர்ந்தவர்கள்
மற்றவர் உணர்வுகளை
கொல்ல முயல்வதில்லை
அடுத்த நிலையை
அடைய முயற்சி செய்
அடுத்தவன் நிலையை
அடைய முயற்சி செய்யாதே
முடிவுரைக்கு வந்த
பிறகுதான் முன்னுரையே
புரியுது
திரும்ப வாசிக்கதான்
எந்த வாய்ப்பும்
அளிக்கப்படுவதில்லை
வாழ்க்கை எனும்
புத்தகத்தில்
உணர்வுகள் புரிந்து
கொள்ள முடிந்தவர்களால்
மட்டுமே தன் உறவுகளை
காப்பாற்ற முடியும்
வலியோ
காயமோ
அனைவர்க்கும்
அது பொதுவானது
தெரியாமல் கூட
யாருக்கும் அதை
கொடுத்து விடாதீர்கள்
பணிவு என்பது
நாம் தாழ்மையுடன்
இருப்பது அது
தாழ்வு இல்லை
நமக்கான உயர்ந்த
குணம்
கண்டுகொள்ளாத
ஒருவரிடம் தான்
அன்பையும்
அக்கறையையும்
சற்று அதிகமாகவே
காட்டுகிறது இந்த
மானங்கெட்ட மனது
முடிக்க முடியும்
என்ற தன்னம்பிக்கையும்
முடிக்க வேண்டும்
என்ற கட்டாயமும்
முடியாத காரியத்தை
முடித்து வைக்கும்
தவறாகி விடுமோ
என்ற எண்ணம் தான்
பல வாய்ப்புகளைத்
தவற விட வைக்கிறது
நம் முன்னால்
சொல்லப்படும் பொய்யும்
நமக்கு பின்னால்
பேசப்படும் உண்மையும்
ஒன்றை மட்டுமே குறிக்கும்
துரோகம்
நிம்மதிக்கான
இரண்டு வழிகள்
விட்டுக் கொடுங்கள்
இல்லை
விட்டு விடுங்கள்