Here are the Latest Collection Motivational Quotes in Tamil.Motivation in Tamil for Social Posts, Social Status and Tamil Kavithai images.
Tamil Motivational quotes in tamil font
- தமிழ் Quotes
- Motivational Quotes in Tamil
- Motivaltional Status in Tamil
- Motivation Kavithai in Tamil
- தமிழ் மோட்டிவேஷனல் கவிதைகள்
தன்னம்பிக்கை கவிதைகள் - Tamil Quotes and Tamil Status - வெற்றி தன்னம்பிக்கை வரிகள்
Tamil Motivational quotes
எல்லோரும் பயணிக்கிறார்கள் என்று
நீயும் பின்தொடராதே
உனக்கான பாதையை
நீயே தேர்ந்தெடு...
எத்தனை கைகள்
என்னை தள்ளிவிட்டாலும்
என் நம்பிக்கை
என்னை கை விடாது
இருளான வாழ்க்கை என்று
கவலை கொள்ளாதே
கனவுகள் 💭 முளைப்பது இருளில் தான்
சந்தேகத்தை எரித்துவிடு நம்பிக்கையை
விதைத்துவிடு
மகிழ்ச்சி தானாகவே
மலரும்...
ஒளியாக நீயிருப்பதால்
இருளைபற்றிய கவலை எனக்கில்லை...
பறப்பதற்கு வசதிகள் இருந்தாலும்
தரையில் இருக்கவும் கற்றுக்கொள்...
சிறகுகளை இழந்தாலும் வருந்தமாட்டாய்...
நம்மை அவமானப்படுத்தும் போது
அந்த நொடியில் வாழ்க்கை வெறுத்தாலும்
அடுத்த நொடியில் இருந்துதான்
நம் வாழ்க்கையே ஆரம்பமாகுது...
துன்பம் நம்மை சூழ்ந்த போதும்
மேகம் கலைந்த வானமாய் தெளிவாகவே இருப்போம்...
தனித்து போராடி கரைசேர்ந்த பின்
திமிராய் இருப்பதில் தப்பில்லையே
எப்போதும் என்
அடையாளத்தை
யாருக்காகவும் விட்டு
கொடுக்க மாட்டேன்
முட்களையும் ரசிக்க கற்றுக்கொள்
வலிகளும் பழகிப்போகும்...
அடுத்தவரோடு ஒப்பிட்டு
உன்னை நீயே தாழ்த்திக்கொள்ளாதே
உலகத்தில் பெஸ்ட் உனக்கு நீயே...
பல முறை முயற்சித்தும்
உனக்கு தோல்வி என்றால்
உன் இலக்கு தவறு
சரியான இலக்கை தேர்ந்தெடு..
வேதனைகளை ஜெயித்துவிட்டால்
அதுவே ஒரு சாதனைதான்...
உன்னால் முடியும்
என்று நம்பு...
முயற்சிக்கும் அனைத்திலும்
வெற்றியே...
எந்த சூழ்நிலையையும்
எதிர்த்து நிற்கலாம்
தன்னம்பிக்கையும் துணிச்சலும்
இருந்தால்......
குறி தவறினாலும்
உன் முயற்சி
அடுத்த வெற்றிக்கான
பயிற்சி......
ஒரு நாள்
விடிவுகாலம் வரும்
என்றநம்பிக்கையில் தான்
அனைவரின் வாழ்க்கையும்
நகர்ந்துக்கொண்டிருக்கு...
தோல்வி உன்னை துரத்தினால்
நீ வெற்றியை
நோக்கி ஓடு
உறவுகள்
தூக்கியெறிந்தால்
வருந்தாதே
வாழ்ந்துக்காட்டு
உன்னை தேடிவருமளவுக்கு...
எல்லாம் தெரியும் என்பவர்களை விட
என்னால் முடியும் என்று முயற்சிப்பவரே
வாழ்வில் ஜெயிக்கின்றார்...
நமக்கு நாமே
ஆறுதல் கூறும்
மன தைரியம்
இருந்தால்
அனைத்தையும் கடந்து போகலாம்...
முடியும் வரை முயற்சி செய்
உன்னால் முடியும் வரை அல்ல
நீ நினைத்ததை
முடிக்கும் வரை...
புகழை மறந்தாலும்
நீ பட்ட அவமானங்களை மறக்காதே
அது இன்னொரு முறை
நீ அவமானப்படாமல் காப்பாற்றும்
தன்னம்பிக்கையை இழந்துவிடாதீர்கள்
இன்றைய தினம் கடினமாக இருக்கலாம்
நாளை மிக மோசமான தினமாக இருக்கலாம்
ஆனால், நாளைய மறுதினம் நிச்சயம் பிரகாசமாக இருக்கும்...
தன்னம்பிக்கை இருக்கும்
அளவுக்கு முயற்சியும்
இருந்தால் தான் வெற்றி
சாத்தியம்...
எல்லோரிடமும் உதைபடும்
கால்பந்தாய் இருக்காதே
சுவரில் எறிந்தால்
திரும்பிவந்து முகத்தில்
அடிக்கும் கைபந்தாயிரு...
எண்ணங்களிலுள்ள தாழ்வு
மனப்பான்மையால் திறமைக்கு
தடை போடாதீர்கள்....
முடியும் என்ற சொல்லே
மந்திரமாய்....
( நம்பிக்கை )
மகத்தான சாதனை புரிந்தவர்கள் யாவருமே,
தோல்வி பல கடந்து வென்றவர்களே...
தனியே நின்றாலும்
தன் மானத்தோடு...
சுமையான பயணமும்
சுகமாக....
(நம்பிக்கை)
எனக்கு பிரச்சினை என்று
ஒரு போதும் சொல்லாதீர்கள்
பிரச்சனை என்றால்
பயமும் கவலையும் வந்து விடும்
எனக்கு ஒரு சவால்
என்று சொல்லி பாருங்கள்
தைரியமும் தன்னம்பிக்கையும்
தானாக வந்து விடும்...
தோல்விகளை
தவழும் போது,
ஏமாற்றமென
நினையாமல்
மாற்றமென
நினையுங்கள்...
பாதிப்பு
இருக்காது...
உங்களுக்கும்
மனதிற்க்கும்...
இதுவும் கடந்து போகும்
ஒவ்வொரு நாளும்
வெற்றி பயணத்தை
தொடங்கிவிட்டேன் என்று
முதலடி எடுத்து வை
வெற்றிபெறும் நேரத்தைவிட
நாம் மகிழ்ச்சியுடனும்
நம்பிக்கையுடனும்
வாழும் நேரமே
நாம் பெறும்
பெரிய வெற்றி
தேவைகளுக்கான தேடலும்,
மாற்றத்திற்க்கான முயற்சியும்,
வாழ்க்கைக்கான யுக்தியும்,
உன்னால் மட்டுமே
உருவாக்க முடியும்...
(தெளிவும்-நம்பிக்கையும்)
எதிரி இல்லை
என்றால்
நீ இன்னும்
இலக்கை நோக்கி
பயனிக்கவில்லை
என்று அர்த்தம்
அனுபவம் இருந்தால்
தான் செய்ய முடியும்
என்பது எல்லா
வற்றுக்கும் பொருந்தாது
முதன் முதலில்
தொடங்க
படுவதுதன்னம்பிக்கை
சம்பந்தப்பட்டது...
நம்பிக்கையின் திறவுகோல்
தன்ன(ந)ம்பிக்கையே
மனதில் உறுதியிருந்தால்
வாழ்க்கையும்
உயரும் கோபுரமாக...
முயற்சி தோல்வியில்
முடிந்தாலும்
செய்த பயிற்சியின்
மதிப்பு குறையாது
விழுந்தால் எழுவேன்
என்ற நம்பிக்கையிருக்க வேண்டும்
யாரையும் நம்பிஏறகூடாது
வாழ்க்கையெனும் ஏணியில்...
வாய்ப்புகள் நம்மை
கடந்து சென்றாலும்
தொடர்ந்து முயற்சியுடன்
பின் தொடர்ந்தால்
திரும்பி பார்க்கும்
நாம் விரும்பிய படியே...
(நம்பிக்கையுடன்)
உன்னையே நீ நம்பு
ஓர் நாள் உயர்வு நிச்சயம்...!
வியர்வை துளியை
அதிகப்படுத்து
வெற்றி வந்தடையும்
வெகு விரைவில்
(உழைப்பே - உயர்வு)
முடியாது
என எதையும்
விட்டு விடாதே...!
முயன்றுபார்
நிச்சயம்முடியும்...
இழந்த அனைத்தையும்
மீட்டுவிடலாம் நம்பிக்கையை
இழக்காதிருந்தால்
அனைத்தையும்
இழந்தபோதும்
புன்னகை பூத்திருக்கு
மீள்வோமென்ற
நம்பிக்கையில்
தொடர்ந்து முயற்சி செய்து
கொண்டே இருங்கள்
தோல்வி கூட ஒரு நாள்
இவஅடங்கமாட்டானு
நம்ம கிட்ட தோற்றுவிடும்
வயதை பின்னுக்கு தள்ளி
வைராக்கியத்தோடு வாழும்
வயதானவர்கள் ஒவ்வொரு
வீட்டின் தன்னம்பிக்கை நாயகர்கள்...!
எல்லாம் இருந்தாலும்
இல்லை என்பார்கள்பலர்
எதுவும் இல்லை என்றாலும்
இருக்குஎன்பார்கள் சிலர்
(தன்னம்பிக்கை)
நம் பிரச்சனைகளை
நாமே தீர்துக்கொள்ளும்
போது
மனவலிமையும் நம்பிக்கையும்
இன்னும் அதிகரிக்கின்றது
எல்லாமே நம்ம நேரம்
எல்லாமே நம்ம நேரம்
சொல்லும் விதத்தில்
தான் உள்ளது
(தன்னம்பிக்கை)
விடாமுயற்சி
என்ற ஒற்றை நூல்
சரியாக இருந்தால்
வெற்றி எனும் பட்டம்
நம் வசமே
வெற்றி
கதைகளை என்றும்
படிக்காதீர்கள் அதிலிருந்து
உங்களுக்கு தகவல்கள்
மட்டுமே கிடைக்கும்
தோல்வி கதைகளை
எப்போதும் படியுங்கள்
அது நீங்கள்
வெற்றி பெறுவதற்கான
புதிய எண்ணங்களை கொடுக்கும்
வானவில்
தோன்றும் போது
வானம் அழகாகிறது
நம்பிக்கை
தோன்றும் போது
வாழ்க்கை அழகாகிறது
உனக்கு
இன்று ஏற்பட்ட
துன்பங்களுக்காக
மனம் வருந்தாதே
ஏனெனில்
அது தான்
உனக்கு வருங்காலத்தில்
எதையும் தாங்கும்
வலிமையான இதயத்தை
அளிக்கப் போகிறது
துணிந்து செல்
துணிவுடன் வென்று
விடலாம் வாழ்க்கையை
தோற்றுக் கொண்டே
இருந்தாலும் கவலைப்படாதே
நிச்சயம் ஒரு நாள்
வெற்றி பெறுவாய்
மனதில் உறுதியை
மட்டும் வை
கனவுகள் நனவாகும்
காலம் வரும்
திறமையும் நம்பிக்கையும்
இருந்தால்
கண்டிப்பா வாழ்க்கையில்
ஜெயிக்க முடியும்
ஒரு நாள் விடியும்
என்று காத்திருக்காமல்
இன்றே முடியுமென
முயற்சி செய்
வேதனைகளும்
வெற்றிகளாக மாறலாம்
தனித்து பறக்க
றெக்கைகள் முளைத்தால்
மட்டும் போதாது
மனதில் தன்னம்பிக்கையும்
தைரியமும் முளைக்க வேண்டும்
எப்போதும்
நம் மனதில்
உச்சரிக்க வேண்டிய
வாக்கியம்
என்னால் முடியும்
ஒவ்வொரு நொடியும்
உன் வாழ்க்கையில்
வெற்றிக்காக போராடு
ஆனால்
அந்த வெற்றியில்
பிறரின் துன்பம் மட்டும்
இருக்கவே கூடாது
என்பதில் உறுதியாக செயல்படு
காலம் பதில்
அளிக்கும் என்று
கடிகாரம் ஓடாமல் நிற்பதில்லை
பிரச்சனைகளை கண்டு
காலத்தை குறை சொல்லி
நாம் எதற்கும்
காத்திருக்க வேண்டியதில்லை
துணிந்து செல்பவனுக்கு
எப்போதும் வெற்றி தான்
எதிலும் பயம் அறியாமல்
முற்றிலும் தன் திறமையை
கொண்டு
விவேகமாக செயல் பட
தெரிந்தவனே
எல்லாவற்றிலும்
திறமைசாலியாக இருந்து
வெற்றிகளை பறிக்கின்றான்
எப்போதும் தன்னால் முடியும்
என்று முந்துபவற்கே முதல் பரிசு
சிறகுகள் நனைந்தால்
பறக்க முடியாதுதான்
ஆனால்
எந்த ஒரு பறவையும்
வானத்திடம் மழையே பெய்யாதே
என்று கெஞ்சுவது இல்லை
வாழ்க்கையே ஒரு போராட்டம்தான்
போராடுவோம் வெற்றி பெறுவோம்
வாழ்க்கையில் தகுதி
உள்ளவனைக் காட்டிலும்
தன்னம்பிக்கை உள்ளவனே
வெற்றி பெறுகிறான்
எவ்வளவு இடர்ப்பாடுகள்
வந்தாலும்
கலங்கி நின்று
நேரத்தை விரயமாக்காமல்
நம்மால் முடியும்
என்ற நம்பிக்கையே
வெற்றியை நிலை
நாட்ட முடியும்
தடைகள்
ஆயிரம் வந்தால் என்ன
அடியெடுத்து வைத்து
முன்னேறி விடு
வாழ்க்கை வசப்படும்
நம் நிலை கண்டு
கைகொட்டி சிரித்தவர்களை
கை தட்டி பாராட்ட
வைப்பதே வெற்றிகரமான வாழ்க்கை
நம்மால் முடிந்தவரை
செய்வதல்ல முயற்சி
நினைத்த செயலை
வெற்றிகரமாக முடிக்கும் வரை
செய்வதே உண்மையான முயற்சி
மற்றவர்கள்
தோள் மீது
ஏறி நின்று
தன்னை உயரமாக
காட்டிக் கொள்வதை விட
தனித்து நின்று
தன் உண்மையான உயரத்தை
காட்டுபவனே
சிறந்த தன்னம்பிக்கையாளன்
பயமும் தயக்கமும்
உள்ளவர்களிடம்
தோல்வி வந்து
கொண்டே இருக்கும்
பயத்தையும் தயக்கத்தையும்
தூக்கிப்போடுங்கள்
வெற்றி உங்கள் காலடியில்
எங்கு நீங்கள்
தவிர்க்கபட்டீர்களோ
அவமானம் செய்யப் பட்டீர்களோ
அங்கு நீங்கள்
தவிர்க்க முடியாத சக்தியாக
உருவெடுப்பது தான்
உண்மையான வெற்றி
மலையைப் பார்த்து
மலைத்து விடாதே
மலை மீதேறினால்
மலையும் உன் காலடியில்
முயற்சி உனதானால்
வெற்றியும் உன் வசமே
ஆசை நிராசையாகலாம்
லட்சியங்கள் அலட்சியப்படுத்தலாம்
பயிற்சியில் குறையிருக்கலாம்
முயற்சியில் தோல்வியடையலாம்
ஆனால் ஆசைப்பட்ட
லட்சியங்களை அடைய
நீ செய்யும் பயிற்சியும்
அதில் வெற்றியடைய
நீ செய்யும் முயற்சியையும்
கை விடக்கூடாது என்ற
தன்னம்பிக்கை மட்டும்
இழந்து விடாதே
வெற்றி உன் காலடியில்
என்பதை மறவாதே
நம்மைநாமே
செதுக்கிக்கொள்ள
உதவும் உளி இலக்கு
தன்னம்பிக்கை
விடாமுயற்சி
எட்ட முடியாத
வானம் கூட உயரமில்லை
நீ எட்ட வேண்டும்
என்று முயற்சிக்கும்
உன் தன்னம்பிக்கையின்
முன்னால்
நம் வளர்ச்சியைத்
தடுக்க எப்போதும்
எதிர்ப்புகள் வரும்
அதை எதிர்த்துப்
போராடினால் தான்
முன்னுக்கு வர முடியும்
நேரத்தை வீணாக்காதே
உன்னால் முடியும்
சாதித்து கொண்டே
இரு வாழ்வில்
வெற்றியாளரின் பாதையில்
சென்று விரைவில்
வெற்றி அடைவதைக் காட்டிலும்
உனக்கென
ஒரு பாதையை உருவாக்கு
அதில் நம்பிக்கையுடன் பயணப்படு
நிச்சயமாக வெற்றி உன் வசமே
உன் வழியில்
உன்னை பின்பற்றி வர
பலர் காத்துக் கிடப்பார்கள்
எல்லை இல்லாத
வானத்தையும் அளக்கலாம்
எண்ணிக்கை கொள்ளாத
விண்மீன்களையும் எண்ணலாம்
எட்ட முடியாத நிலவையும்
எட்டி விடலாம்
முடியும் என்று
விடா முயற்சி செய்தால்
வெற்றி எனும்
மணி மகுடம்
உன் சிரம் தாங்கிடலாம்
தோல்வி அடைந்ததும்
துவண்டு போகாமல்
தோல்வி தற்காலிகமானது மட்டுமே
நிரந்தரமானதும் அல்ல
நிலைக்க வைக்கும் அளவிற்கு
நான் திறமை இல்லாதவனும் அல்ல
என்று முயற்சி கொண்டு போராடுங்கள்
வெற்றி உங்களுக்கு நிரந்தரமாகும்
உன்னை நீயே
யாருடனும் ஒப்பிடாதே
உன் சிறப்பு
எது என்பதை
நீயே உணராத பட்சத்தில்
மற்றவர்கள் அறிவது
என்பது எப்படி
சாத்தியம் ஆகும்
எதை காரணம் காட்டி
உங்களை நிராகரித்தார்களோ
அதை நிவர்த்தி செய்து
ஒரு நிமிடமாவது
அவர்கள் முன்
நிமிர்ந்து நின்று
கடந்து விடு
என்னால் முடியும்
என்ற நம்பிக்கை கொண்ட
மனிதன் யாவரும்
அடுத்தவர்களின் உதவியை
நாடுவதில்லை
முதல் முயற்சி
தோல்வி என்றால் என்ன
மீண்டும் மீண்டும்
முயற்சி செய்யுங்கள்
தோல்வியை வென்றுவிடலாம்
வெற்றியால்
பாதைகளில் தடைகள்
இருந்தால்
அதை தகர்த்து
விட்டு தான்
செல்ல வேண்டும் என்றில்லை
தவிர்த்து விட்டும் செல்லலாம்
எறும்பை போல
இன்று நாம்
பேசநினைக்கும் கருத்துக்களை
சிலர் உனக்கு
என்ன தெரியும் என்று
நம்மை தடுத்துவிடுவார்கள்
அதற்கு வருந்தாதீர்கள்
காலத்தின் வட்டத்தை
நம்புங்கள்
அந்நாள்
நம் கருத்துக்கள் தான்
கை ஓங்கி நிற்கும்
இன்பமும் துன்பமும்
எல்லாம்
இறைவன் கட்டளையே
கஷ்டங்களை கொடுத்தவர்
அதற்கான தீர்வையும்
கொடுப்பார்
தன்னம்பிக்கையை ஒருபோதும்
சிதற விடாமல்
மன வலிமையோடு
எதிர்க் கொள்வோம்
பிரச்சினைகள்
நம்மை செதுக்க
வருவதாக நினைத்து
எதிர் கொள்ளுங்கள்
சிதைந்து போகாதீர்கள்
நமக்கு பிடித்த ஒன்றை
அடைந்தே தீரவேண்டும்
என்ற பிடிவாதத்தை
பிடிவாதமாக
பிடித்துக்கொள்வதில்
இருக்கிறது நமது தன்மானம்
உனது நேற்றைய
தோல்விக்கான
காரணங்களை கண்டறிந்தால்
மட்டுமே
வெற்றியை நோக்கி பயணம்
செல்கையில் வரும் தடைகளை
உடைத்தெறிய முடியும்
அடுத்தவர்களின்
கற்பனைகளுக்கு
பதில் சொல்ல வேண்டிய
அவசியம் இல்லை
நம்மை பற்றி
நமக்கு தெரியாததா
அவர்களுக்கு
தெரிந்து விடப்போகிறது
ஓய்வில்லாமல் உழைப்பதால்
தான் கடிகாரம்
உயர்ந்த இடத்தை
அடைந்தது
நாமும் உயர வேண்டும்
என்று தன்னம்பிக்கை கொண்டு
உழைத்தால்
நிச்சயமாக உயரலாம்
துன்பமும்
தோல்விகளும்
நாம் விரும்பாமலே
நம்மைத்தேடி
வந்ததைப்போல்
நாம் விரும்பிய மகிழ்ச்சியும்
ஓர்நாள் வந்தே சேரும்
நம்பிக்கையுடன்
நடைப்போடுவோம்
எதிர்காலம் என்பது
முக்காலத்தில்
ஒரு காலம் மட்டுமல்ல
நம்மை ஏளனமாக
பேசும் சிலருக்கு
நம்மை நிரூபித்துக் காட்ட
இறைவன் கொடுத்த பொற்காலம்
சூரியன் உதிக்கும் போது
பிரகாசமாக காட்சியளிக்கும்
நான் வந்துட்டேன் என்று
பிரமாண்ட ஒளியுடன்
அதே போல்
நம்மை மட்டம் தட்டுபவர்கள்
முன் சூரிய ஒளியைப் போல்
பிரமாண்டமாக
சாதித்து காட்ட வேண்டும்
ஓர் இலக்கை
அடைய வேண்டும் என்றால்
அதில் வரும்
வலி மற்றும் வேதனைகளை
அனுபவித்து தான்
கடக்கவேண்டும்
அப்போதுதான்
நம் தன்னம்பிக்கையின்
பலம் மற்றும் பலவீனத்தை
உணரமுடியும்
நம்மால் முடியவில்லை என்றால்
அதனை சவாலாக
எடுத்துக் கொள்ளுங்கள்
வலியுடன் கிடைக்கும் வெற்றிக்கு
அதிக மதிப்புண்டு
வேடிக்கை பார்ப்பவர்கள்
என்ன நினைத்தால் என்ன
நகர்ந்து கொண்டே இருப்போம்
நல்லதோ கெட்டதோ
நடப்பது நமக்குத் தான்
ஒன்றை மட்டும்
நினைவில் கொள்ளுங்கள்
நீங்கள் தான் சிறந்தவர்
என்று உங்களை நம்புங்கள்
எத்தகை கடினமான இலக்குகளை
சுலபமாக எட்டிவிடலாம்
பிறரின் பார்வை
உங்கள் திறமையை
கண்டு கொள்ளவில்லை
என்று எண்ணாதீர்கள்
நீங்கள் போகும் பாதையில்
செய்யும் முயற்சிகளை
தொடர்ந்து கொண்டே இருங்கள்
ஒரு நாள் உங்கள் தேவை
அறிந்து அவர்கள் பார்வை
உங்கள் வசம் வரும்
விரிக்காத வரை
சிறகுகள் பாரம்தான்
விரித்துப் பார்த்தால்
வானம் கூட தொடுதூரம்தான்
நமக்கென்று
ஒரு அடையாளம்
கிடைக்கும் வரை
பிடித்ததை
முயற்சி செய்வோம்
தன்னம்பிக்கை தான்
நம் வாழ்விற்கான வெற்றி
பிறர் கை எதிர்பார்த்து
நம் வாழ்க்கையை
வாழ எண்ணினால்
நமக்கான வாழ்வு
அங்கே பறிபோகும்
குறையோ நிறையோ
நமக்கான வாழ்வை
நாமே தீர்மானிப்போம்
வலிகளையும் தோல்விகளையும்
அனுபவித்து பழகிவிட்டால்
வெற்றிக்கான பாதையை
உருவாக்கிவிடலாம்
யாரும் இல்லை என்ற
கவலை வேண்டாம்
உனக்காக அழுவதற்கு
உன் கண்களும்
துடைப்பதற்கு
உன்கைகளும் இருக்கிறது
கடக்கவே முடியாது
என்று நினைத்த நாட்களை
போராடி கடந்ததற்காக
உங்கள் மீது நீங்கள்
பெருமை கொள்ளுங்கள்
உங்களை தோல்விகள்
ஓட ஓட துரத்தினாலும்
நீங்கள் ஓட்டத்தை
நிறுத்தி விடாதீர்கள்
இடையே வரும்
தோல்வியும் தடையும்
வெற்றியின் ஆரம்ப படிநிலைகள்
வாழ்க்கையை
அடிக்கடித் திரும்பிப் பாருங்கள்
நாம் அடைந்த வலிகளும்
அதனைக் கடந்து வந்த
வழிகளும் நமக்கு
நம்பிக்கை ஊட்டும்
தோற்றாலும்
நம்பிக்கையோடு இரு
ஆனால் யாரையும் நம்பி
தோற்றுவிடாதே
மற்றவர்களின்
வார்த்தைகளை விட
அனுபவமே ஒரு
உண்மையான
வழிகாட்டியாகும்
நல்வாழ்வு
நல்ல செல்வம்
உடல் நலம்
உயர்ந்த செல்வம்
நோயற்ற வாழ்வே
குறைவற்ற செல்வம்
நேரமும் வாய்ப்பும்
எல்லோருக்கும் எப்பொழுதும்
இருந்து கொண்டே தான்
இருக்கின்றன
முயற்சி எடுப்பவர்கள்
மட்டுமே தாங்கள் நினைத்ததை
அடைகின்றனர்
எந்நேரமும் உதடுகளில்
ஒரு புன்னகை வைத்திருங்கள்
அது தருகின்ற தன்னம்பிக்கை
வேறு எங்கேயும் கிடையாது
முதல் முயற்சியில்
வெற்றி கண்டவனை விட
முதல் முயற்சியில்
தோல்வி கண்டவனே
விரைந்து அடைகிறான்
தன் இலக்கை
எதையும் எதிர்கொண்டு
வாழ்வோம்
என்ற துணிச்சல்
மட்டும் இருந்தால்
நாளை வரும் துன்பங்களை
கூட துரத்தி அடிக்கும் என்பதை
என்றும் நினைவில்
வைத்துக் கொள்ளுங்கள்
நாம் வாழ்வில்
வெற்றி பெறுவதற்கான
முதல் ரசியம்
உற்சாகத்துடனும்
நம்பிக்கையுடனும்
இருப்பதே
முடியாது என்று
எதையும் விட்டுவிடவேண்டாம்
முயற்ச்சிசெய்தால்
நம்மால் முடியாது
என்று எதுவும் இல்லை
உன்னை
வீழ்த்த நினைப்பவன்
பயன்படுத்தும் ஆயுதம்
உன் மனதை சிதைப்பது
நீ உன் மனதால்
தெளிவாக இரு
உன்னை ஒருவராலும்
வீழ்த்த முடியாது
கவனமுடன் படிப்படியாக
முன்னேறுபவன் தான்
வாழ்க்கையில் மிகப்பெரிய
வெற்றியை பெறுவான்
தோல்வியில் விழும்போது
சிரித்தவர்களின் முன்
வெற்றிபெற்று எழுந்து
வியக்கும்படி வாழ்ந்துவிடு
உன் வாழ்க்கையில்
தன்னம்பிக்கையும்
மன தைரியமும்
இரண்டையும்
வளர்த்துக்கொண்டாலே
எதற்கு அஞ்சாமல்
துணிந்து வெற்றி
அடையும் வரை
போராடிக் கொண்டே
இருப்பாய்
சோர்வு என்பதே
நமது வாழ்வில் கிடையாது
புத்துணர்ச்சியோடு
நாம் எடுத்து வைக்கும்
ஒவ்வொரு அடியும்
எனது வெற்றிக்கான ஏணிப்படிகளே
தடைகள்
நம்மைத் தடுப்பதற்கு
அல்ல நாம் தாண்டும்
உயரத்தைக்
கூட்டுவதற்கே
வீழ்ச்சியை கண்டு
அஞ்சிவிட்டால்
எந்த விதையும் முளைக்காது
முயற்சியை கைவிடாதே
வாழ்கை ஒருநாள் கைகொடுக்கும்
எதையும்
எளிதாகப் பெற முடியாது
முயற்சியில் நம்பிக்கை வையுங்கள்
வெற்றி உனதே
தோல்வியை எவ்வாறு
சமாளிக்க வேண்டும்
என்பதைக் கற்றவர்
வெற்றியை நிச்சயம்
அடைய முடியும்
மன அழுத்தத்தை
சமாளிக்கிற உன்னால்
உன் வெற்றியை
சாத்தியமாக்க முடியாது
என யாரும் சொல்லமாட்டார்கள்
அதற்கான நம்பிக்கையும்
வலிமையும் உன்னுள் உள்ளது
சில நேரங்களில்
அமைதியாக போரிடுவதை விட
சிறந்த ஆயுதமில்லை
பலவீனத்தை விட
நம்ம பலத்தை
நம்பித்தான் இருக்கனும்
தோல்வியை
எதிர்கொள்ளத் துணிவானவர்களுக்கு
மட்டுமே வெற்றி சொந்தமாகும்
வெற்றி பெற
எதுவும் இலக்காகாத போது
நீங்கள் புதிய வழியை
உருவாக்குங்கள்
நேர்மையை
எவ்வளவோ தடைகள்
அணைத்தாலும்
அது தன்
வெளிச்சத்தை இழக்காது
வெற்றி அடைய
முயற்சி தொடங்கும் முன்
தோல்வியை நம்பாதே
கடினமான சூழ்நிலைகளை
சமாளிக்க
உங்கள் உள்ளத்தில்
உறுதியையும் நம்பிக்கையையும்
வளர்த்துக்கொள்ளுங்கள்
ஒவ்வொரு சவாலும்
உங்களை வலுப்படுத்தி
எதிர்காலத்திற்கான
வழிகாட்டியாக அமையும்
உங்கள் மனதில்
உள்ள சக்தியை உணருங்கள்
இன்று உங்கள்
சிறந்த நாளாக மாற்றுங்கள்
எப்போதும் கேள்விகள்
மற்றும் விமர்சனங்கள்
உங்களிடம் வந்தாலும்
அவற்றை
ஒரு வாய்ப்பாகக் கருதுங்கள்
உங்கள் முயற்சிகளை
மேலும் வலுப்படுத்துங்கள்
பின்வாங்காதீர்கள்
உங்கள் வளர்ச்சிக்கு
இது ஒரு முக்கியமான
கட்டமாக இருக்கும்
உங்கள் உள்ளத்தில்
மறைந்துள்ள சக்தியை
உணருங்கள்
நம்பிக்கை இழந்தாலும்
உங்கள் மனதின்
வலிமையால் மீண்டும்
எழுந்து நிற்க முடியும்
உங்கள் இலக்கை அடைய
கவனத்தை மையமாக்குங்கள்
தேவையற்ற விஷயங்கள்
உங்கள் முன்னேற்றத்தை தடுக்கும்
உங்கள் கனவுகளை
நம்பி முன்னேறுங்கள்
மற்றவர்கள்
என்ன சொல்வார்கள்
என்பதைப் பற்றிய
கவலையை விட்டுவிடுங்கள்
உங்கள் இலக்குகளை நம்புங்கள்
மற்றவர்கள் என்ன சொன்னாலும்
நீங்கள் முன்னேற வேண்டும்
தவறுகள் முடிவு அல்ல
ஒரு புதிய தொடக்கம்
அவற்றை கற்றுக் கொண்டு
முன்னேறினால்
வெற்றி நமக்கே உறுதி
விழுந்துவிட்டோம் என்று
நினைப்பது
வாழ்க்கையின் முடிவல்ல
மீண்டும் எழுந்து விடுவோம்
என்ற "இருங்க பாய்" மொமெண்ட்
வாழ்க்கையில் இருந்தால் தான்
நம்மை வெற்றிக்கு
அழைத்து செல்லும்
என் வெற்றியை
நேசிக்காதவர்கள்
பார்வைக்கு முன்
காயங்களையும்
சோதனைகளையும்
தாண்டி மீண்டு நிற்பதே
என் வெற்றியின் முதல் படி
தோல்விகளையும் தாண்டி
என்னை வெறுத்தவர்களின்
கண்களுக்கு முன்னால்
மீண்டு சாதனை படைத்தவனாக
எண்ணப்படுவேன்
வெற்றியை நோக்கி
செல்லும் பாதையில்
வெறுப்பும் விமர்சனமும்
கற்களாக வரும்
அதை கடந்து
செல்லும் காலடிகள்
வெற்றியின் சுடரை
எரியச் செய்கின்றன
வாழ்க்கை
ஒரு நீண்ட பயணம்
அதில் தொடர்ந்து
பயிற்சியும்
சீரான முயற்சிகளும்
உங்கள் இலக்கை
எட்டச் செய்யும் சக்தியாகும்
பயத்தை
உங்கள் எல்லைகளை
நிர்ணயிக்க விடாதீர்கள்
தைரியமே அதனைத் தாண்டும்
திறன் கொண்டவை
உலகம் என்ன சொல்கிறது
என்ற கவலையை விட்டு விடுங்கள்
நம்பிக்கையுடன்
வாழ்க்கைப் பயணத்தை
தொடருங்கள்
தன்னம்பிக்கையுடன் வாழ்ந்தால்
எதையும் தாங்கும்
மழலையாக மாறலாம்
பயத்தை நீக்கி
நேரத்தை கட்டுப்படுத்துங்கள்
வெற்றி உங்கள்
பாதையில் காத்திருக்கிறது
எதிர்காலத்தின் பிரச்சனையை
சமாளிக்க இன்று துணிந்தால்
நாளை ஒரு புதிய ஆரம்பமாகும்
உங்கள் கனவுகளை அடைய
கடின உழைப்பும்
உறுதியும் அவசியம்
உங்கள் பயணம்
எவ்வளவு கடினமாக
இருந்தாலும்
உங்கள் இலக்கை
மறக்காதீர்கள்
நீங்கள் நினைத்தால்
நீங்கள் செய்யலாம்
உங்கள் மனதில் உள்ள
சக்தியை உணருங்கள்
வாழ்க்கையின்
சவால்களை எதிர்கொண்டு
உன்னை மேலும் வலிமையாக்கு
உங்கள் இலக்குகளை அடைய
ஒவ்வொரு நாளும்
சிறிய முன்னேற்றங்களை
செய்யுங்கள்
வலியை எதிர்கொண்டு
உன் கனவுகளை
அடைய உறுதியாக
இருக்க வேண்டும்
விழுந்தாலும்
எழுந்து நில்லு
நீ விழுந்த இடமே
உனக்கான
புது தொடக்கமாகும்
தோல்வி ஒரு
full stop அல்ல
அது ஒரு comma
அதற்கு பின்னால்
வெற்றி நிரந்தரமாக இருக்கும்
சில நேரங்களில் வாழ்கையை
புயலாக சந்தித்தாலும்
உங்கள் நம்பிக்கை
பாறையாக
நிலைத்திருக்க வேண்டும்
வழியில் சிக்கல்கள் வந்தாலும்
உன் இலக்கை நோக்கி
செல்வதே முக்கியம்
சிந்தனைகள் உருமாறினாலும்
நம்பிக்கை என்றும்
நிலையாக இருக்க வேண்டும்
விழுவதில் வெட்கப்படாதே
எழுந்து நிற்கும்
தைரியம் உன்னுடையது
எதிர்பாராத சவால்கள்
நம் திறமையை
வெளிப்படுத்த உதவியிருக்கின்றன
வெற்றிக்கான வழி
எளிதானதல்ல
முயற்சிக்கும் மனதுடன்
எப்போதும் முன்னேறுங்கள்
ஒரு புத்தகத்தின்
பக்கம் மாறுவது போல்
வாழ்க்கையில்
புதிய அத்தியாயத்தை
தொடங்குங்கள்
புதிய காலம்
உங்களுக்காக காத்திருக்கிறது
வெற்றிக்கு
முழுமையான நம்பிக்கை
மட்டும் தேவையானது
வாழ்க்கை
ஒரு பெரும் பயணமாகும்
ஒவ்வொரு சவாலும்
வெற்றிக்கு அருகிலுள்ள
ஒரு துவக்கம்
வாழ்க்கை உன்னை
சோதிக்கும்போது
நீ அதை
வெற்றி என
மாற்றிக் காட்டு
கனவு மட்டுமே போதாது
அதை நனவாக்க
உழைப்பு அவசியம்
விழுந்தாலும்
எழுந்து நின்றால்
அதுவே வாழ்க்கையின்
உண்மையான வெற்றி
வாழ்க்கையை பாசிட்டிவாக
பார்ப்பவர்கள் மட்டுமே
வெற்றி அடைய முடியும்
உழைப்பும் நம்பிக்கையும்
இணைந்தால் வெற்றி நிச்சயம்
புதிதாக எழும்
சூரியனை போல்
உங்கள் முயற்சிகளும் ஒளிவீசட்டும்
உன் முயற்சிக்கு
இடையூறாக வந்தாலும்
வெற்றிக்கு வழி காட்டும்
நம்பிக்கையை
ஒருபோதும் இழக்காதே
அதுவே உன்னுடைய முதல் வெற்றி
இன்று நீ விடாமல் செய்த வேலை
நாளைய வெற்றிக்கான விதை
எப்போதும் உங்களால்
செய்ய முடியும் என்பதை
நம்புங்கள் அப்படியானால்
முடியாது என்ற
எண்ணம் விலகிவிடும்
உயரத்துக்கேற விரும்பினால்
அடித்தளத்தில் எப்போதும்
உறுதியாக இரு
வாழ்க்கை
உன்னை சோதிக்குமுன்
நீ அதை வெல்ல
ஒரு முயற்சி செய்
சரியான நேரம் வரும் என்று
காத்திருப்பதை விட
உன் நேரத்தை நீயே உருவாக்கு
சரிவு முடிவாக இருக்காது
அது உச்சத்திற்கான
தொடக்கம் மட்டுமே
உங்களுக்கு பிடித்த வாழ்க்கை
உருவாக வேண்டுமா
உங்கள் முயற்சியில்
உறுதியாய் இருங்கள்
வெற்றி கிடைக்காமல்
இருந்தாலும்
அதற்கு ஏற்ற உழைப்பு
ஒரு வெற்றியே
வீழ்ந்தால் மீண்டும் எழு
உன் பயணம் நிறைவதற்கு
இன்னும் தூரம் உள்ளது
மௌனம் தோல்வி அல்ல
அது புதிய வெற்றிக்கான
இரகசிய திட்டம்
முன்னேற விரும்பினால்
முன்னேற்றம் செய்ய
தயாராக இரு
நீங்கள் நினைத்ததை
எப்போதும் செய்க
அது உங்கள் வாழ்வின்
திறவுகோலாக மாறும்
கனவுகள் பெரிதாக
இருந்தால் மட்டுமே
முயற்சிகள் உயிர் பெறும்
சூறாவளி வந்தாலும்
மரத்தின் வேர்களை போல
உறுதியுடன் இருங்கள்
உன் கனவுகளுக்கான
நம்பிக்கை துணை இருந்தால்
வாழ்க்கை எளிமையான பாதை
சிரமம் என்ற கடல்
உழைப்பின் படகில்
தாண்டி செல்ல முடியும்
தோல்வியை பாடமாக்கி
முன்னேறும் மனதிற்கு மட்டுமே
வெற்றி நிச்சயம்
இன்று கஷ்டப்பட்டால்
நாளைய வெற்றியின்
சுவை இன்னும் இனிக்கும்
நம்பிக்கையுடன்
மின்னும் ஒருவர்
வாழ்வின் ஒளியாக மாறுவார்
வெற்றிக்காக உறுமும் சிங்கம்
முயற்சிக்காக அமைதியாக உழைக்கும்
நம்பிக்கையும் முயற்சியும்
தடை இல்லாத
பாதையை உருவாக்கும்
நேரத்தை வீணாக்காதே
அது உன் வாழ்க்கையை
செதுக்கும் சிற்பி
வாழ்க்கை ஒரு கால்பந்து ஆட்டம்
சறுக்கினாலும்
முன்னேறிக்கொண்டே இரு
காற்றை எதிர்த்துப் பறக்கும்
பறவை போல
சிரமங்களை முன்னேற்றமாக மாற்று
கனவு காண்பது மட்டும் போதாது
அதை நனவாக்குவதற்காக
போராட வேண்டும்
கஷ்டத்தை சமாளிக்காமல்
வெற்றியை பெற முடியாது
ஓய்வின்றி ஓடுபவன் மட்டுமே
வெற்றியின் கதவை திறக்க முடியும்
எல்லோருக்கும் நம்மை
நம்ப செய்ய முடியாது
ஆனால் நாமும் நம்மை
நம்ப மறக்கக்கூடாது
வெற்றிக்காக பயப்படாமல் உழைத்தால்
தோல்விக்காக கவலைப்பட வேண்டியதில்லை
உன் முயற்சியை
இன்று தொடங்கு
நாளைய வெற்றிக்கான
அடித்தளம் அதுவே
அழிவின் எல்லையிலும்
புதிய வாய்ப்புகள்
மறைவாகக் கிடக்கும்
தேடுவதற்குத் துணிச்சல் தேவை
விடாமுயற்சி என்பது
வெற்றியின் இரகசியக் குறி 📕
விடாமுயற்சி இருந்தால்
வாழ்க்கையில் வெற்றி நிச்சயம் 😎
விடாமுயற்சியுடன் உழைத்தால் 🏃
காலம் கூட உன்னை
வெல்ல முடியாது 💪
உன் முயற்சியால்
இன்று சிறிய முன்னேற்றமாவது
செய்யமுடிந்தால்
நீ பெரிய வெற்றிக்கு
அருகில் இருக்கிறாய்
ஒரு நாள் அல்ல
முதல் நாளாக நினைத்து
இன்று தொடங்குவோம்
தோல்வியில் மறைந்திருக்கும்
திறமையை தேடி எழுந்தால்
வெற்றி உன்னையே தேடி வரும்
சிறிய ஒரு விளக்கே
இருள் நிறைந்த அறையை
ஒளியூட்டும்
அத்தகைய சிறிய நம்பிக்கையே
வாழ்வை மாற்றும்
ஒளியைக் காண இருட்டை
வெல்ல வேண்டும்
வெற்றியை காண
முயற்சியை தொடர வேண்டும்
வீழ்வதை விட எழுவதே முக்கியம்
தோல்வியை விட மீண்டும்
முயற்சிப்பதே வெற்றிக்கு அடையாளம்
ஒரு விதை
மண்ணில் புதையும்போது
அழிந்தது என்று நினைக்காதே
அது உன்னிடம்
பொறுமையை மட்டும் கேட்கிறது
வெற்றி மலர்வதற்காக
வாழ்க்கை ஓர் ஓட்டம்
நீ முன்னேறினால் மட்டுமே
அதன் அர்த்தம் புரியும்
கடினமான தருணங்கள்
உன்னை முறியடிக்க அல்ல
மாற்றி உயர்த்த வந்தவை
காலம் மாறும்
சூழ்நிலை மாறும்
ஆனால் உன் மனவலிமையை
யாரும் மாற்ற முடியாது
முட்டாள்கள் வாயால் பேசுவார்கள்
புத்திசாலிகள் செயலால் பதிலளிப்பார்கள்
உன் கனவுகளை
நகைக்கின்றவர்களிடம்
விளக்கம் தேடாதே
அதை சாதித்து காட்டு
சில பயணங்கள்
தனிமையில் தொடரவேண்டும்
வாழ்க்கையின் அர்த்தம் புரிய
கனவுகளை நிஜமாக மாற்ற
ஒரு முயற்சி போதாது
தொடர்ச்சியான முயற்சியே
வெற்றியின் சூத்திரம்
நம்முடைய கனவுகளை
நம்மை தவிர
வேறு யாரும் நிஜமாக்க முடியாது
அதனால் நாமே போராட வேண்டும்
காற்று எதிராக வீசினாலும்
வானத்தில் பறப்பது கழுகே
துணிவும் முயற்சியும் இருந்தால்
உன் உயர்வை எதுவும் தடுக்காது
தோல்வியை எரிவாயுவாக
பயன்படுத்தும் மனிதன் மட்டுமே
வெற்றியின் ராக்கெட்டில்
ஏறி பறக்க முடியும்
சூரியன் மறைந்தாலும்
மறுநாள் மீண்டும் உதயமாகும்
அதுபோல இன்று முடிந்ததெல்லாம்
நாளை ஒரு புதிய வாய்ப்பாக தோன்றும்
மூன்றாம் முயற்சியில்
வெற்றி பெறுபவன் புத்திசாலி
முதல் முயற்சியில்
வெற்றி பெறுபவன் அதிர்ஷ்டசாலி
ஆனால் ஒவ்வொரு தோல்வியிலும்
படிப்படியாக முன்னேறுபவன்
உண்மையான போராளி
தோல்வியை சந்திக்காமல்
வெற்றி கிடைக்காது
முயற்சிக்காமல் வாழ்க்கை
வலுவாக மாறாது
வெற்றி என்பது
எவ்வளவு உயரம்
ஏறினாய் என்பதல்ல
கீழே விழுந்த பிறகு
எவ்வளவு தூரம் முன்னேறினாய்
என்பதே முக்கியம்
நீ தோல்வியை சந்திக்கும்போது
அது முடிவு என்று நினைக்காதே
அது வெற்றிக்கான
முதல் படியாக எண்ணிக்கொள்
ஒவ்வொரு தோல்வியும்
வெற்றிக்கான புதிய வழியை
காட்டும் கதவுகள்
திறக்கத் துணிந்து
நிலைத்து நிற்கும்
பொழுது மட்டுமே
முன்னேற்றம்
உன் பக்கம் இருக்கும்
வெற்றி கிடைக்கும்போது
உலகம் உன்னோடு இருக்கும்
தோல்வியில் நீ
உன்னுடன் இருப்பதுதான்
உண்மையான முன்னேற்றம்
ஒரு கனவை அடைய முடியுமா
என்ற கேள்வியைக் கேட்பதை விட
அதற்காக உன்னிடம்
என்ன இருக்கிறது என்று
நீ கேள்வி கேள்
உன் கனவுகளுக்கு
உன்னையே தடையாக
மாற்றிக்கொள்ளாதே
விருதுகளை வெல்ல
உன்னிடம் தன்னம்பிக்கை
மட்டுமே போதும்
முடியாது என்ற வார்த்தை
நீங்கள் நம்பும் வரை மட்டுமே
அது உண்மை
முயற்சிக்கலாம் என்ற நம்பிக்கை
கொண்டவனுக்கு
எல்லாமே சாத்யம்
வெற்றி கிடைக்கும்போது மட்டும்
உலகம் பாராட்டும்
ஆனால் தோல்வியில்
நீங்கள் உங்களை
நேசிக்க பழகிக்கொள்ள வேண்டும்
ஒரு தோல்வி என்றால்
அந்த இடத்தில்
உங்கள் முயற்சி
முடிந்துவிட்டது என்றல்ல
அது வெற்றிக்கான
ஒரு புதிய வழி
தேட வேண்டும் என்பதற்கு குறியீடு
வெற்றி அடைய முடியாது
என்று நினைக்கும் போது
உங்களை சந்திக்கும் ஒரு மந்திரம்
இன்னும் முயற்சி செய்
வெற்றி பெறும் வரை
விடாமுயற்சி செய்யுங்கள்
ஏனெனில் அந்த முயற்சி
உங்களை ஒரு புதிய உலகத்துக்கு
அழைத்துச் செல்லும்
உங்கள் முயற்சிகள்
ஒருநாள் உங்கள் அடையாளமாக
மாறும் அதை தவற விடாதீர்கள்
வெற்றி பெற
ஆசைப்படுபவர்கள் பலர்
ஆனால் உழைப்பதற்காக
முன் வருபவர்கள் தான்
உண்மையான வீரர்கள்
நம்மிடம் இருக்கும்
சிறந்த உடை "நம்பிக்கை"
அதை அணிந்திருந்தால்
எந்தப் பாதையும் கடக்கலாம்
வீழ்வதை விட
மீண்டும் எழுவது தான் முக்கியம்
ஏனென்றால்
வெற்றி கிடைக்கும் வரை
போராடவேண்டும்
உன் பாதை கடினமாக
இருந்தாலும் பயப்படாதே
ஏனெனில் உயரமான மலைகளின்
சிகரத்தில் தான்
சிறந்த காட்சிகள் இருக்கும்
முயற்சி தொடர்ந்தால் மட்டுமே
வெற்றியின் வாசல் உனக்கு திறக்கும்
உன் சோகங்களை மறைத்து
உலகத்திடம் புன்னகைக்கத் தெரிய வேண்டும்
ஏனெனில் வாழ்க்கை வருத்தத்தை விட
போராட்டத்தையே பாராட்டும்
நீ முன்னேறும்போது
சந்திக்கிற எதிர்ப்புகள்
உன் வெற்றியின்
உயரத்தை நிர்ணயிக்கும்
நம்பிக்கையை
நிலையாக வைத்திரு
அது உன்னை
உயரமாக கொண்டுசெல்லும்
நம்பிக்கை உள்ளவன்
எப்போதும்
புதிய பாதையை
காண முடியும்
முடியும் என்ற
நம்பிக்கை இருந்தால்
முடியாதது கூட
ஒருநாள் சாதனையாகும்
நேரம் எல்லோருக்கும்
ஒரே மாதிரிதான்
அதை யார் உபயோகிக்கிறார்கள்
என்பதில்தான் வெற்றி அடங்கியுள்ளது
ஒருவர் உன்னை
இழிவாக நினைத்தால்
அவருக்கு உன்னுடைய
உயரத்தை காட்டி விடு
சோர்வாக இருந்தாலும்
ஒரு கட்டம் மேலே
ஏறி பார்க்க
அங்கே வெற்றி காத்திருக்கும்
தொடர்ந்து
முயற்சி செய்தால் மட்டுமே
வாய்ப்பு ஒன்று திறக்கப்படும்
உன் கனவை
உயரத்துக்கு கொண்டு செல்ல
பயமின்றி செயல்பட வேண்டும்
ஒரு சிறிய மின்னல் கூட
இருளை அழிக்க முடியும்
ஒரு சிறிய முயற்சி கூட
வாழ்க்கையை மாற்ற முடியும்
கடினமான பாதை தான்
வெற்றிக்கு அழகான
கதையை எழுதும்
சிறிய வெற்றிகளையும்
கொண்டாடு அதுவே
பெரிய வெற்றிக்கான முதல் படி
கனவுகள் நினைத்ததாலே
நிறைவேறாது அதை அடைய
உழைத்தால்தான் வெற்றி
உன் பாதையை நோக்கி வரும்
சாதனைகள் செய்வதற்கு
உன் மனம் தயாராக இருந்தால்
சந்தர்ப்பங்கள் தானாகவே
உன்னை தேடி வரும்