மகளிர் தினம் - Happy Women's day SMS & Kavithai in Tamil.

Women's Day SMS in Tamil

  • மகளிர் தினம் கவிதை
  • மகளிர் கவிதை
  • பெண்கள் தின வாழ்த்து கவிதை

மகளிர் தினம் வாழ்த்து


கட்டுப்பாடோடு
வாழ தெரிந்தவர்கள்
பெண்கள்
அக்கறை பாதுகாப்பு
என்று அவர்களின்
முயற்சிக்கும் சிந்தனைகளுக்கும்
தடை போட்டு
பெண்களை
ஊனமாக்கிவிடாதீர்கள்


சமையலறை மட்டுமே
பெண்களுக்கு சொந்தம்
என்ற எண்ணத்தை
உடைத்தெறிந்து
ஒரு நாட்டையே
ஆட்சி செய்யும்
அளவிற்கு
முன்னேறியவர்கள் பெண்கள்
நாம் பெண்ணாகபிறந்ததில்
நமக்கு பெருமை
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்


இன்பத்தை கருவாக்கினாள்
பெண்
உலகத்தில் மனிதரை உருவாக்கினாள்
பெண்
விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும்
விலையற்ற செல்வம்
பெண்
மகளிர் தின வாழ்த்துகள்


எல்லாத்தையும் அழிச்சிட்டு
மறுபடியும் எழுதுற மாதிரி இருந்தா
வாழ்க்கை செம்மையா இருக்கும்ல
என்னோட கைய பிடிச்சு
எழுத வைச்ச
எல்லாரையும் தள்ளிவச்சிட்டு
நானே அழகா எழுதிருப்பேன்
எனக்கு பிடித்த மாதிரி
மகளிர் தின வாழ்த்துக்கள்


பெண்ணே
உன்னை மதிப்பவர்களுக்கு
மலராய் இரு
உன்னை மிதிப்பவர்களுக்கு
முள்ளாய் இரு
பெண்கள் அனைவருக்கும்
மகளிர் தின வாழ்த்துக்கள்


பெண்ணாக பிறந்ததில்
பெருமை கொள்கிறேன்
வாழ்த்துக்கள் தோழிகளே
Happy International Women’s Day


வணக்கம் பெண்ணே
மகளிர் தின வாழ்த்துக்கள்
இந்த இனிய தினத்தை
ஒரு வெற்றி படியாக
எடுத்து கொண்டு
உங்கள் வாழ்க்கையில் இன்னும்
பல சாதனைகளை படைக்க
எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்


ஆம்
ஒரு ஆணின் வெற்றிக்கு
பின்னால் இருப்பாள்
அது அன்னையோ
தோழியோ
மனைவியோ
அந்த அன்பு தரும்
தைரியமும்
ஊக்கமும்
பல கஷ்டங்கள்
கடந்து
சாதனை ஆக்குகிறது
மகளிர் தின வாழ்த்துகள்


மகளிர் தின வாழ்த்துக்கள்
பெண்கள்
அவர்களின்
வேதனை மற்றும்
ஆசைகளை
வெளிப்படையாக
காட்டிக்கொள்ள மாட்டார்கள்
அவர்களிடம் சிறிது நேரம்
மனம் விட்டு பேசும் போது
தான் புரிகிறது
அவர்களின் ஆசைகள்
மற்றும் இலட்சியங்கள்
அவர்களின்
உணர்வுகளை மதிப்போம்
துணையாய் நிற்போம்


Women's Day Greeting Wishes

Tamil Name Wish Greetings 💛

✅ Send wish with your Name
✅ Get your Custom Wish Link
✅ Share in all Social Media Platformsஎங்க போறீங்க இதோ உங்களுக்காக