2021 Kadhal Kavithai Collections - Tamil Kadhal Kavithai and Tamil Love Quotes.

Love Quotes in Tamil Font - காதல் கவிதை

காதல் கவிதை

Tamil Kadhal Kavithai

👇👇👇👇👇👇👇


உன் தலைக்கு
துணையான
தலையணை
நீயெழுந்ததும்
என் இதயத்துக்கு
இதமாகிறது
உன் இனிய
நினைவுகளோடு


வேரூன்றி
விட்டாய் மனதில்
வேறெங்கும்
நகர்வதில்லை
என் எண்ணங்களும்
உனையன்றி


உனை மறப்பதும்
மரணமும் ஒன்றுதான்
அன்பே


உன் வழியை
தொடர்ந்து
தொலைவதும்
சுகமான
அவஸ்தை தான்
என் விழிகளுக்கும்


ஆழுறக்கத்திலும்
உன் குரல்
செவிகளுக்குள்
கண்களை
மூடி நன்றாய்
தூங்கு என்று
ஆழமான
அதீத காதலுடன்


மொத்த காதலும்
நிரம்பி தளும்புது
உன்னிதழ்
பட்ட தேனீரில்


அம்பின்றி வேட்டையாட
பிடிக்கும் உனை
காதலால் கண்களில்


பேரலையில்
அகப்பட்டு
கொண்டாலும்
அமைதியாகவே
மூழ்கிடுவேன்
உன் நினைவினிலேயே


ஊடலின் போதெல்லாம்
சிறு ஆறுதல்
நம் சண்டைகளுக்கு
ஆயுளில்லை என்ற
உன் வார்த்தையே


உன் நிழலும் சுடுகிறதே
காதலின் கதகதப்பாய்


அனலான
உன் நெருக்கத்தில்
தணலாகுது மனம்
அணைத்துவிடு
கொஞ்சம் குளிரட்டும்
இரவும் குளிர் நிலவாய்


என்னை
உரசி உரசி
உன்னை ஞாபகபடுத்துகிறது
உன் காதல்
பரிசி கம்மல்


நம் நினைவில்
மூழ்கி விட்டால்
இரவும் எனக்கு
சிவராத்திரி தான்


என் இதயத்தில்
வீற்றிருக்கும்
உனக்காகவே
என் ஆலாபனைகளும்
என்னவனே


உன்னோடு நானாக
நமக்கே நமக்கான
இந்நொடிகள்
நம் வாழ்வின்
பொக்கிஷமே


உன் மீதுள்ள
அதீத காதல்
எனையும் எல்லைகள்
மீற சொல்லுதே
உனையும் இம்சித்து


விலகல்
நான் வெறுக்கும்
வார்த்தை
உன் நே(சுவா)சத்தில்
நெறுக்கத்தில்


காணவில்லை
என்று தேடியதில்லை
நீயும் நானும்
தொலைந்தால்
நமக்குள்
தான் என்றுணர்வதால்
நம் மனங்கள்


உன் வசீகர
பார்வையில்
சுவீகரித்து கொ(ல்)ள்கிறாய்
எனை காதலால்
கள்வனே


நித்தம் நீயில்லா
வேளைகளில்
சத்தமின்றி
மனதை தட்டி
எனை நினைக்க
சொல்லி தூண்டுகிறது
உன் நினைவின்
சத்தம் உனை


கொட்டி தீர்த்தாலும்
குறையாத காதல்
உனை மீண்டும் மீண்டும்
அழைக்க சொல்லி
மனதை அலையாய்
அடித்து கொசெ)ல்லுது


காதலின் கருவறையில்
ஒட்டிப் பிறந்த
குழந்தைகள் நாம்
ஒருவரையொருவர்
விட்டுப் பிரியா
நீயும் நானும்


மனதுக்குள் நினைத்தால்
என் முன் வந்து
விடுகிறாயே
நீயும் எனக்குள்
தான் எப்போதும்
இருக்கின்றாயா


எப்போதும் கொஞ்சுவதில்லை
எப்போதோ கொஞ்சியதை
இப்போது நினைத்தாலும்
மனம் கெஞ்சுது
உன் கொஞ்சலுக்காய்


உன் அன்பொன்றே
என் பலம்


முழு மதியாய்
உனை ரசித்த
மனம்
நீ தேய்பிறை
ஆனாலும்
ரசிக்கும் சற்றும்
மாற்றமில்லாது
இப்போதும்
எப்போதும்


நினைக்க நினைக்க
பேரழகு
உன்னை போலவே
மனதில் நிழலாடும்
உன் நினைவுகளும்
என்னவனே


உன் தாமதத்தில்
என்னிதயமும்
அதிவேகமாய் துடிப்பதை
அறிவாயா வந்துவிடு
இதயமும் நேர் கோட்டில்
பயணிக்கும்
முன் என்னன்பே


என்றோ உனக்காக
கிறுக்கியவை
இன்று படித்தாலும்
எனக்கே நாணத்தை
தருகிறது
அதீத காதலில்
இத்தனை பைத்தியக்கார
தனங்களா
என்று உன்மீதெனக்கு


முற்றுப் பெற்றது
என்ற பெருமூச்சோடு
அள்ளி முடிந்தாலும்
மனம்
அவிழ்த்து விடுகிறது
உன் நினைவுகளை
நீதான்
என் உயிர்மூச்சென்று


அடுத்த நொடி
எதுவாகவும்
இருக்கலாம்
என்னிறுதி நொடியும்
உனக்கானதாகவே
இருக்கட்டும்


அத்தனை எளிதல்ல
உன் நினைவுகளில்
இருந்து விடுபடுவது


சினுங்கும் கொலுசுக்கு
அஞ்சியே
மெல்ல நடை போடுது
பாதமும்
உன் உறக்கத்தை
சீண்டிட
கூடாதென்றே


உலாவி
கொண்டே இரு
நானும் உனை
ரசித்து கொண்டேருக்க
மன வானில்


கரையும் கண்ணீரில்
நிரம்பி வழிவதும்
நம் காதலே
உனக்காக
அழும் போதும்


பிரிந்தால் பறந்திடும்
உயிரென்றே
பற்றிக் கொள்கிறேன்
உனை மனதுக்குள்
என்னவா


அன்பில் உனை
வீழ்த்த நினைத்து
சாய்ந்தது நானடா
உன் அதீத
அன்பால்


பருகப் பருக
தீராத காதல்
நீ என் கண்களில்
காதலா


மனதை புரிந்தும்
வலியை தருகிறாயே
என்ற வருத்தமிருந்தாலும்
உன்னை கோபிக்கவோ
வெறுக்கவோ
எப்போதும் துணிந்ததில்லை
இந்த மனம்
அத்தனை காதல் உன்மீது


உன் மீதுள்ள
காதலை
மனதோடு
பூசிக் கொள்கிறேன்
அது வெட்கமாகிறது
அழகாய்


மனதையும்
கலைத்து விட்டு
சென்று விட்டாய்
எண்ணிக் கொண்டிருக்கிறேன்
நிமிடங்களை
மீண்டும்
உன் விளையாட்டுக்கு
காதலுடன்


துடிப்பும் தவிப்பும்
எனக்கானதாகவே
இருக்க வேண்டும்
உன்னிதயம்


இறுகப் பற்றும்
உன் விரல்கள்
உணர்த்துவதெல்லாம்
உனக்குள்
நான் என்பதே


ஆசையாய் கோர்த்து
சூடிக் கொள்கிறேன்
உதிர்ந்தாலும்
மகிழ்வே
உன்னணைப்பில்


காற்றாய் நீ தீண்ட
நானும் அசைந்தாடும்
ஊஞ்சல் தானடா


கட்டுண்டு கிடக்கிறேன்
உன் சுவாசத்தில்
என் நேசக் காதலா


அழகிய கனவுகளாய்
உன் நினைவுகளை
போர்த்தி கொள்கிறேன்
நீ சென்ற பின்


எதிலும் மனம்
லயிக்க வில்லை
உனை (சு)வாசித்தப்பின்
கவிதையாய்


மழையிலும் கரையாத
வானவில்லாய்
என் மனதில்
நிறைந்த
வண்ணம் நீ


தேடலில் கிடைப்பது
தான் பொக்கிஷம்
என்றால்
என் பொக்கிஷம்
நீயே


சத்தமின்றி
உன் மார்பினில்
புதைந்திட தோனுது
நித்தம்
நீ எனை
விலகாதிருக்க


தலை சாயும்
போது
நீ தலை
கோதிய நினைவுகள்
எனை அணைத்து
கொ(ல்) ள்கிறது
சுகமாய்


கண்ணை அலங்கரிக்கும்
மையாய்
என்னை அலங்கரித்து
கொள்கிறேன்
உன் அன்பால்


உன்னில் தொலைந்ததால்
நானும் நலமாக
நாமாய் என்னுள்


காதோரம் கிசுகிசுத்த
உன் குரல்
எனை காதலித்து
கொண்டேருக்கு
ரகசியமாய்


இனிமையாய் இம்சிக்கும்
உன் நினைவோசையின்
முன் சலங்கை ஒலிகூட
வெறும் இரைச்சல் தான்
என் மனதுக்கு


பேரலையாய் வந்து
என் மனதை
இழுத்து சென்றாய்
என் பேரழகா
காதலெனும் கடலுக்குள்


உறங்காமல்
அடம் பிடிக்குது
கண்களும்
உனை காண
வேண்டும் என்று


கோடையில் வெப்பமாய்
பருகியும் தீரவில்லை
உன் நினைவின்
தாகம்


உன் மௌனத்தில்
உணர்கிறேன்
என் தனிமையை
வெகு தொலைவாய்
இருப்பதாய்


கெஞ்சலிலோ
கொஞ்சலிலோ
முற்றுப் புள்ளி வைத்து
விடுகிறாய்
நம் ஊடலுக்கு


கண்ணாடி
உனை காட்டாத
போதும்
மன கண்ணாடியில்
உனை ரசிக்காத
நொடியில்லை
என்னுள்ளம்


கண்ணாடி
காட்டாதபொழுதும்
எப்பொழுதும்
என் முன்னாடி
நீதான் அன்பே


ஆயுள் இல்லா
சண்டைகளில்
அடித்துக் கொள்வதைவிட
அணைத்துக் கொள்வதே அதிகம்


என் பலவீனமும்
உன் அமைதியா
பத்தி கொ(ல்)ள்கிறதே
காதல் தீ உன்னில்


வரும் ஜென்மத்திலும்
துணை நீயே
என்றால்
இருப்பேன்
தவம் நானும்


சமையல் அறையிலும்
உன் காதலின்
ராஜ்ஜியம்
ஆள்கிறது எனை


பார்க்கும் இடமெல்லாம்
துளிர்கிறது
உன் நேசம்
பேரன்பின்
பெருங் காதலாய்


மொத்த உசுரயும்
எடுத்து விட்டு
கலைக்கிறாய்
மௌனத்தை
இந்த ஒத்த
உசுரு வாழ்வது
உனக்கென்று
உணராமல்


சத்தமின்றி யுத்தம்
செய்கிறது
உன் இம்சைகள்
போராடுது மனமும்
வெட்கத்தில்
போர்க்களமாய் சுகமாக


நீ காதோடு
கிசு கிசுக்கும்
காதல் மொழியை
கேட்டு வானும்
வண்ணம் மாறுகிறது
நாணத்தில்


உனை சுமந்தே
காத்திருக்கு கண்களும்
மன கதவையும்
திறந்தே
நீ வருவாயென


உன் அதீத
அன்பில்
ஆழ்ந்து
வாழ்தலும் வரம்
என் அன்பனே


எனக்கான
உன் சில நொடிகளில்
பல யுகங்கள்
வாழ்ந்து விடுகிறேன்
நான் மகிழ்வாய்
என்னவனே


கல்லுக்குள் ஈரமாய்
கண்ணுக்குள்ளும்
காதலுண்டு
நீ உணர்வாயா
என்னுயிரே


உள்ளத்தை ஊடுருவும்
இசையாய் உயிர் வரை
ஊடுருவுகிறது
உன் நினைவிசை
இன்னிசையாய்


தூரிகை என்றாலே
என் விழிகள்
ரசிக்கும் ஓவியம்
நீயாகுறாய்
அழகாக தீட்டாமலேயே


இருளுக்குள்
அகப்பட்டுக் கொண்டது
வெட்கங்களும் பேசியே
உனை கொல்லப் போகிறேன்
தைரியமாய் விழிகளால் சுகமாய்


கூட்டத்தில் இருந்தாலும்
மனம் தனிமை தான்
உடன் நீயில்லை என்றால்


போர்வை நீயென்றால்
அதில் அடங்கிக்
கிடக்கும்
உறக்கம் நானாவேன்


வாசித்த பின்னும்
தொடர்கிறது
உன் வரிகள்
என் மன ஏட்டில்
வார்த்தைகளாய்
காதலுடன் அழகாக


நீ ரசிக்க
மையிட்டு
நானே
கிறங்கி போனேன்
உன் விழிகளில்


சுதியோடு இசைக்க
காத்திருக்கு
சலங்கையும்
உன் ரசனைக்காய்
நீ வருவாய் என


எங்கிருந்தோ
எனை உயிர்பித்துக்
கொண்டிருக்கிறாய்
உயிர் வேராய்


சிறு கடிகார
வட்டத்துக்குள்
ஓடும் முட்களாய்
மனமும்
உனை சுற்றியே
சுழல்கிறது
நீயே
என் உலகமென்று


தூரத்தில் இருந்தாலும்
ஒளி தருகிறாய்
நிலவாய்
மனதுக்கு அழகாய்


கலைத்திட விரும்பாத
கனவொன்று கண்களில்
நிறைந்திருக்கு நீயாக


என்றோ யோசிக்காமல்
கிறுக்கியவைகள் எல்லாம்
உன்னில் நேசம்
கொண்டுதான்
என்றுணர்கிறேன்
நீ வாசிக்கும் போது


எண்ணம் போல்
வாழ்க்கை
வண்ணமாய் உன்னால்


உன் காதலின் முன்
என் அன்பெல்லாம்
வெறும் பூஜியம் தான்


உயிரை தாங்கி
நடமாடும்
உடலாய் உனை
ஏந்தி நடமாடுகிறேன்
உயிருக்குள் உயிராய்


ஒரு நொடி
தோள் கொடு
என் பல வருட
கனவை
நனவாக்கி கொள்ள


தேடலுக்காகவே
காணாமல் போகிறாய்
கண்களுக்கு தண்டனையை
கொடுத்து


தினம் ஜெயித்து
கொண்டிருக்கிறாய்
உனை மட்டுமே
நினைக்க வைத்து
காதலில் எனை


உன் மூச்சும்
மோத. திணறுதே
என் பேச்சும்
உயிரே


தானாய் மலரும்
பூவாய் நீயும்
மலர்ந்தாய்
என் இதயத்தில்
என்றும்
உதிரா (சு)வாசமாய்
அழகாய்


என் அத்தனை
எதிர்பார்ப்புகளும்
நீயென்ற
ஒற்றை சொல்லுக்குள்ளேயே
அடங்கும்


முடிவுக்கு வந்தாலும்
முற்றுப் பெறாத
நேசம் நீ


என் நாழிகையில்
தவிர்க்க முடியாத
நொடிகள் நீ


உன்னிதயத்தை
யாரும் நேசிக்கட்டும்
ஆனால் என்னிடத்தை
பாதுகாப்பது
உன் பொறுப்பே


என் காயங்களுக்கு
மருந்தாயிருக்கும்
நீ உன் துயரத்தில்
குழந்தையாகி விடுகிறாயே
எனையும்
சிறு பிள்ளையாக்கி


நிலையான மனம்
தான் இன்று
நிலைக் கொள்ளாமல்
அலை பாயிது
உன் நினைவு மோத


ரசிப்பதில் மட்டுமல்ல
ரசிக்க வைப்பதிலும்
நீ மாயக் கண்ணன் தான்
என் மனதை வென்ற


அழகானவை
எல்லாம்
உன் அன்பின்
அடையாளங்கள்


என் காதலும்
அழகு தான்
உன் இதயமெனும்
கருவறைக்குள்
சுவாசிப்பதால்


உன் அதிகாரமும்
பிடிக்கும்
அது அன்பு
கலந்த
அணைப்பென்றால்


மறந்து போன
ஞாபகங்கள்
துளிர் விடுகிறது
நீயாக


முப்பொழுதும்
நீயென் அருகில்
இல்லாவிட்டாலும்
எப்பொழுதும்
என் நினைவிலிருக்கிறாய்
என்னவனே


எத் தொலைவில்
நீயிருந்தாலும்
கண்ணருகே தான்
உன் பிம்பம்
என் நிழலாய்


சிறுகச் சிறுக
சருகாய் உதிர்ந்தாலும்
உயிரின் கடைசி
துளிவரை
உன் நினைவே
நிறைந்திருக்கும்
என்னில் என்னன்பே


எப்போதும்
என் ராட்சஷனாகவே
இருந்து விடு
எனை காதலித்தே
கொல்லும்


என்னோடு நீயிருந்தால்
உன் கண்ணோடு
நானிருப்பேன்
காலமெல்லாம்
என் கண்ணாளா


பாதி நீ பருக
முழுதாய்
நான் சுவைத்துக்
கொண்டிருக்கிறேன்
மீதியை
உன்னிதழ் சுவையோடு


எங்க போறீங்க இதோ உங்களுக்காக