Here are the Latest Collections of Tamil Kadhal Kavithaigal 2024 - தமிழ் காதல் கவிதைகள் SMS, Tamil காதல் கவிதை Love SMS and Tamil Love Status for Social Stories and Reels.
தமிழ் காதல் கவிதைகள் and Tamil Love Status
- Love Quotes in Tamil
- அழகிய காதல் கவிதைகள்
- Tamil Love SMS and Twitter Tamil kadhal Kavithaigal
- Tamil Love Status and Kadhal Kavithai Reels
- Long Distance Tamil Love Quotes
- Lovers Day kavithaigal
- தொலைதூர காதல் கவிதைகள்
- Kaadhal Kavithai Tamil
காதல் கவிதை
தொலைதூரம்
நீ போனால்
உன்னை தேடி
வெகுதூரம் பயணிக்குறது
உள்ளம்..
காதல் பிடிக்குள்
சிக்கி காற்றும்
திணறுகிறது
கொஞ்சம் இடைவெளிவிடு
பிழைத்துப்போகட்டும்...
உன்னருகில்
உன் நினைவில
மட்டுமே
என் மகிழ்ச்சியெல்லாம்...
கற்பனையிலிருந்தவன்
கண்ணெதிரே
தோன்றவும்
சொப்பனமோ
என்றெண்ணியது
மனம்...
கவிதையெழுத
சிந்தித்தால்
சிந்தைக்குள்
நீ வந்துவிடுகிறாய்
கவிதையாக...
பேச நினைத்த
வார்த்தைகளும்
தூரமானது உன்னருகில்
இன்னிசையாக
இதயத்துடிப்பும்
உனை காணும்
போதெல்லாம்...
(ஆனந்த யாழாய்)
இளைப்பாற
இடம் கேட்டேன்
இதயத்தில்
இணைந்து வாழும்
வரம் கொடுத்தான்...
உன்
நினைவில்
என் நொடிகளும்
கரைந்துக் கொண்டிருக்கு...
ஊடலும்
தேவை என்னில்
உன்னை தேட
குடைக்குள்
இரு இதயங்கள்
நனைகிறது
காதல் மழையில்...
பார்த்தநொடியே
கண்களுக்குள்
ஓவியமானாய்
காத்திருக்கு
விழிகளும்
உன்னுடன் சேர்ந்து
காவியம் பாட
நீ மூச்சி
காற்றுப்படும்
தூரத்திலிருந்தால்
நான் காற்றில்லா
தேசத்திலும்
உயிர் வாழ்வேன்...
துன்பக்கடலில்
தத்தளித்த போது
துடுப்பாயிருந்து
கரை சேர்த்தாய்
மறந்துப்போன
மகிழ்ச்சியை
மறுபடியும்
மலர
வைத்தாய் நீ...
விடுவித்து
விடாதே
உன் விழிகளிலிருந்து
ஒளியிழந்திடுமே
என் விழிகளும்...
மொத்த
கவலைகளும்
கலைந்துப்போகிறது
உன் நினைவு
தென்றலாய்
தீண்ட
மௌனமாக
பேசிட
உன்னிதழ்
மயங்கித்தான்
போனது
என் மனம்...
விடுதலையில்லா
சட்டம்
வேண்டும்
உன் காதல்
பிடிக்குள்
அகபட்டுக்கிடக்க...!
என்
உறக்கத்தை
இரையாக்கி
கொள்கிறது
உன் நினைவு...!
இருவரி
கவிதையொன்று
இணைந்து
எழுதிடுவோம்
இதழ்களிலே
விழி
திறக்கும்வரை
காத்திருக்குறான்
வண்ணக்கனவுகளோடு
வண்ணத்துப்பூச்சியாக
வானில் சேர்ந்துப்பறந்து
ரசித்து மகிழ்ந்திட
உன்னால்
என் நொடிகள்
ஒவ்வொன்றும்
அழகானதே
எனக்கு
பிடித்ததையெல்லாம்
நீ ரசிப்பதால்
உனக்கு
பிடிக்காததையெல்லாம்
நான் தவிர்க்கிறேன்
காற்றோடு
கலந்து வரும்
உன் நினைவுச்சாரலில்
நனைகின்றேன்
நானும்...
மணலில்
கிறுக்கியதை
அலைவந்து
அழித்தாலும்
நாம் மனதில்
கிறுக்கியது
மரணம்வரை
அழியாது...
ஒப்பனைகள்
தேவையில்லை
உன் அன்பே
போதும்
என்னை அழகாக்க...
ஓசையின்றி
பேசிடுவோம்
விழிமொழியில்.....
ஒரு முறை
நோக்கிடுயென்
பார்வையை
யார்
பாதையையும்
தொடராத விழிகள்
உன் வழியை
தொடருது
உன்னிதய
துடிப்போடு
என்பெயரும்
கலந்திட
நம் காதலும்
அழகாக மலர்ந்தது....
விடைபெறும்
போதெல்லாம்
பரிசாக்கி
செல்கின்றாய்
அழகிய
தருணங்களை...
மனதோடு
நீ
மழையோடு
நான்
நனைகின்றது
நம் காதல்...!
அடைமழையில்
தப்பித்து
உன் அனல்
பார்வையில்
சிக்கிக்கொண்டேன்
நீ
கவனிக்காமலே
கடந்து
செல்வதால்
உன்மீது காதலும்
வளர்கிறது...!
பயணிப்போம்
ஒரு பயணம்
கரம்பற்றி
களைப்பாகும்
வரை
காதல் தேசத்தில்...!
உன்னை
நினைத்து
என்னை
மறப்பதுதான்
காதலென்றால்
ஆயுள் முழுதும்
வாழ்வேன்
எனை மறந்து
நீ
கட்டளையிடாமலேயே
கட்டுப்பட்டுக்கிடக்கின்றேன்
உன் அன்பில்
மனதில் காரிருள்
சூழ்ந்தபோது
உன் அன்பெனும்
ஜோதியில்
வாழ்வை
ஒளிமயமாக்கினாய்
உன்னளவுக்கு
அன்புகாட்ட
தெரியாவிட்டாலும்
நீ மகிழ்ச்சியாக
இருக்குமளவுக்கு
என் பாசமிருக்கும்
தழுவிச்செல்லும்
தென்றலாய்
உன் நினைவும்
மனதை வருடிச்செல்கிறது
இடைவெளிவிட்டு
நாமிருந்தாலும்
இதயங்கள்
இணைந்தே
பயணிக்கின்றது
நீயில்லா
பொழுதுகளில்
உன் நினைவும்
என் ரசணையாகிப்போனது
என் கவலைகளுக்கு
நீ மருந்தாகின்றாய்
உன் கவலைகளை
மறைத்து
மௌன
கவிதை நீ
ரசிக்கும்
ரசிகை நான்
சுழற்றும்
சூறாவளியிலும்
நிலையாக
நிற்கும் நான்
உன்
நினைவுத்தீண்டலில்
தடுமாறிப்போகின்றேன்
என்னை
துளைத்தெடுக்கும்
உன் நினைவுகளைவிடவா
இவ்வுலகிலோர்
கூர்மையான
ஆயுதமிருக்கபோகிறது
ஏதேதோயெழுத
நினைத்து
உன் பெயரை
எழுதிமுடித்தேன்
கவிதையாக
நீ
நலமா
எனும்போதெல்லாம்
நீயின்றி எனக்கேது
நலம் என்கிறது
மனம்...
வருவேன்
என்ற எதிர்பார்ப்பை
ஏற்படுத்தி ஏமாற்றுகின்றாய்
மழையைபோல்...
காயங்களும்
மாயமாகும்
என்னருகில்
நீயிருந்தால்
உன் நினைவுகளை
மீட்டியே
வீணை வாசிக்கவும்
கற்றுக்கொண்டேன்
நெற்றியில்
திலகமிட்டுக்கொள்ள
வரம் தந்தவனுக்கு
அன்பு பரிசாய்
அவன் நெற்றிக்கொரு
இதழில் திலகம்
நாம் இமைக்காமல்
பார்த்துக்கொண்ட
நொடிகளில்
நம் இதயங்களும்
இடம்மாறிக்கொண்டது
சாலையோர
நடைப்பயிற்சியில்
காலைநேர
தென்றலாய் நீ...
விட்டுச்சென்ற
இடத்திலேயே
நிலைத்துவிட்டேன்
உன் நினைவுகளிலிருந்து
விடுபடமுடியாமல்...
நாணலும்
நாணம் கொண்டு
தலைசாய்ந்தது
உன் காதல்
மொழியில்
நீ எழுதாதபோதும்
பல கவிதைகள்
ரசிக்கின்றேன்
உன் விழிகள்
சலிக்காத ரசணைகள்
தூரத்து நிலவும்
அருகில் நீயும்...!
உன்
அருகாமை போதும்
தாய்மடியாய்
நினைத்து நானுறங்க
தனிமையும்
பிடித்துப்போனது
என்னுடன்
உன் நினைவுகளும்
வந்துவிடுவதால்
தொலைவில்
உன் குரல்
கேட்டாலும்
மனமேனோ
பறக்கின்றது
பட்டாம்பூச்சாய்
ஆறுதல் கூற
ஆயிரம்பேரிருந்தாலும்
உன்
அருகாமையைபோலாகுமா
நீ பேசாத போது
பேசி மகிழ்கிறேன்
நீ பேசிய
வார்த்தைகளோடு
மனதுக்குள்
உலகம் சுழல்வது
நின்றாலும்
உன் நினைவு
என்னுள் சுழல்வது
நிற்காது அன்பே
தோஷங்கள்
இல்லாத போதும்
பரிகாரங்கள் செய்கிறேன்
நம் காதலின்
சந்தோஷத்திற்காக
பூட்டி விட்டேன்
இதயத்தை
எங்கேனும் தொலைத்துவிடு
திறவுகோலை மீண்டும்
தொலையாமலிருக்க
என்னிதயத்திலிருந்து
என்னவன்
எங்கு ஒளிந்து
கொண்டாலும்
உன் நினைவிடமிருந்து
தப்பிக்க முடிவதேயில்லை
மனதோடு மாலையாய்
எனை சூடிக்கொள்
உன் உள்ளத்தில்
உதிராத மலராய்
நானிருப்பேன்
ஒரு விழி
நீ மறு விழி
நான் இரு விழிகள்
கொண்டு
அமைப்போமொரு
காதல் உலகை
நாம் வசிக்க
என்றோ
நாம் எதார்த்தமாய்
பேசிய வார்த்தைகளில்
எல்லாம்
காதல் நிரம்பி
வழியுதே
இன்று
என் கண்களுன்னை
காணும் போது
உன் கண்ணாமூச்சி
ஆட்டத்தில்
களைத்து போனது
என் விழிகள்தான்
உனக்காய் காத்திருந்து
எந்த ஜென்மத்தில்
செய்த தவமோ
இந்த ஜென்மத்தில்
கிடைத்தாய்
நீயும் வரமாய்
என்னவனே
உனக்கான எதிர்பார்ப்பில்
இத்தனை காதலென்றால்
விலகியே இருப்பேன்
நம் காதலுக்காக
சொந்தமென்று
என்னுள்
நீ வந்த பின்னே
இனி நான் தனிமையில்
தவிர்த்து இருக்க
அவசியமில்லை
காதல் ஒரு உணர்வு
பூர்வமானது
அதை தன் துணையிடம்
இருந்து ஆத்மார்த்தமாக
பெற வேண்டும்
அச்சத்தையும்
மிச்சம் வைக்காமல்
உச்சம் தொட்ட
உன்னிடம் கேட்பது
இந்த முத்தம் மட்டுமே
அதுவும்
நித்தம் வேண்டுமே
அவன் தரும் பரிசுகளில்
என்றும் நான் விரும்புவது
காதலுடன் அவன்
வைத்து விடும்
ஒரு முழப் பூவே
கடந்து செல்கிறது
நீள் இரவு
அவள் நினைவுகளின்
துணையாலும்
இதமளிக்கும் இசையாலும்
நீ விட்டு சென்ற ப்ரியம்
இந்த ஜென்மத்திற்க்கு
போதுமானதாய் இருக்கிறது
நீ கொடுக்கும்
எதிர்பார்ப்புகளும்
எனக்கு போதைதான்
உனக்காக காத்திருக்கயில்
நிஜமோ நிழலோ
நித்தம் கலைத்துசெல்கிறாள்
என் உறக்கத்தை
நான் தியானிக்கும்
பூங்காற்று நீ
என் தியானத்தின்
உயிர் மூச்சு நீ
துளித் துளியாய்
உன் புன்னகை
துளிர்க்கின்றதே
ஒரு நேசம்
ஏக்கம் கொண்ட
மனதிற்கு ஏமாற்றமே
நிரந்தரம் ஆகிறது
நீ இல்லாத நேரத்தில்
பதற்றம் நீங்கியது
இன்னும் பல
கனவுகள் நின்றாடுது
உனைத்தேடி
உன்னை
விட்டு பிரியவில்லை
இடம் மாறியே
இருக்கப்போகிறேன்
நீராக நீயே என்னுள்
தொடர் கதையில்
தொலைந்த தென்றல் நீ
உன் முகம் தேடியே
மௌனத்தில் பூத்த
மலரானேன்
எனக்கு பிடித்து
செய்ததை விட
உனக்கு பிடிக்கும்
என்று செய்ததே அதிகம்
உன் பிரிவு
என் இதயத்தை
நெடுங்காலமாய்
மரத்துபோகச்
செய்கிறது
என் இதயத்திற்கு
இறகுகளைப் படைத்து
உன்னைச் சுற்றியே
ஒவ்வொரு நொடியும்
என்னை பறக்கச் செய்கிறாயே
ஆழம் விழுதை போல்
வேர் பிடித்து
பனை மரம் போல்
பெருக வேண்டும்
நம் காதல்
எண்ணற்ற நட்சத்திரங்களை
கூட எண்ணி
முடித்து விடலாம்
மிகவும் எளிதாக எனினும்
உன் பார்வை என்னவென்று
எண்ண முடியாது
தவிக்கிறேன் நான்
உன் புன்னகையின்
ஒவ்வொரு கோணமும்
என் மனதை சிக்க வைக்கும்
காதல் வாசம்
உன்னோடு பேசாத
நொடி கூட
என் இதயம் ஓயாத
ஓசை போல இருக்கிறது
நீயிருக்கும்
இடம் மட்டும்
எனக்காகவே ஆன
ஒரு சிறிய சொர்க்கம்
மலர்களின்
மணம் போல்
உன் மனம் எனக்கு
இனிமையாக விளங்குகிறது
உன் விழிகளின் தீண்டலே
என் நெஞ்சினை சிக்கவைத்தது
உன் உதடுகளின் பரிமளத்தில்
என் ஆன்மா கரைந்து
உன் சுவாசத்தில் மூழ்குகிறேன்
உன்னிடம் பசியாய் இருக்கின்றது
காதலா ❤
காமமா 🙈
அறியாமல் எனை
தவிக்க வைக்கிறது
உன் அருகில்
இருக்கும் போது
என் உயிரின்
ஒவ்வொரு நொடியும்
உன்னுடன்
இணைந்திருப்பது போல
உணர்கிறேன்
மார்கழி மாலை மஞ்சள்
வெளிச்சத்தில்
உன் குரல் மெல்லிசை
போல் ஒலிக்கிறது
என் வாழ்க்கையின்
ஒவ்வொரு பகுதியிலும்
உன் நினைவுகளே
எனது காதல்
சிந்தனைகளின் வழிகாட்டி
நினைவுகள்
தோழமையாக நீந்தும்
உன் அன்பு
ஓயாத நதியாக
என்னை நனைக்கிறது
உன் அரவணைப்பில்
அடையும் அமைதி
என் வாழ்வின்
சிறந்த இசையாக மாறுகிறது
உன் நினைவுகள்
என் வாழ்க்கையின்
ஆறாக ஓடுகிறது
அதில்தான்
நான் தினமும்
மூழ்கி வாழ்கிறேன்
உன் காதலில்
நான் காணும்
ஒவ்வொரு நிமிடமும்
என் இதயத்தின்
இசை அதிகரிக்கிறது
காதல் என்பது
இரு இதயங்களின் இசை
ஒவ்வொரு துடிப்பிலும்
அந்த இசை மேலும்
அழகாக மாறுகிறது
நீ எனக்கு ஒரு கனவின் சித்திரம்
அதை உண்மையாக மாற்ற
நான் உன்னுடன் இருக்க வேண்டும்
நம்பிக்கை இல்லாத காதல்
காற்றில் பறக்கும்
ஒரு காகிதம் போல
உன்னுடன் பேசும்
ஒவ்வொரு வார்த்தையும்
என் இதயத்தின் இசை
மழை போல நீ வந்தாய்
உன் நினைவுகள் நனைத்தும்
என் இதயம்
சுத்தமாய் மலர்கிறது
உன் சிரிப்பில்
அடங்கியிருக்கும் மழைத்துளிகள்
என் மனதின்
வறண்ட மண்ணை
சாகராக மாற்றுகிறது
என் நெஞ்சில் உன் பெயர்
என் கண்களில் உன் கனவு
என் வாழ்கையில் உன் காதல்
உன்னுடன் இருக்கும்போது
உலகின் எதுவும் எனக்கு
வித்தியாசம் இல்லை
நீ மட்டும் போதுமானது
வானத்தில்
நட்சத்திரங்கள் போல்
காதலும் மனதைக் கவர்கிறது
உன் நினைவுகளும்
என் இதயத்தின்
முக்கியமான
இடத்தில் இருப்பவை
நீ பேசாமல் இருந்தாலும்
உன் கண்கள்
காதலின் கதை சொல்லும்
உன் காதல்
என் வாழ்வின் நம்பிக்கை
அதை தாண்டி
வேறொன்றும் தேவையில்லை
எனது வாழ்கை முழுதும்
உன் நினைவுகளால்
நிறைந்திருக்க வேண்டும்
உன் பார்வையில் நான்
என் உலகை காண்கிறேன்
உன் சந்தோஷத்தில்
என் வாழ்க்கை வாழ்கின்றேன்
காதல் என்பது
ஒருவரை காணுவதில் இல்லை
அவரை மனதின் ஆழத்தில்
உணருவதில் இருக்கிறது
நீ சுவாசிக்கும் காற்றில் கூட
உன் காதலின்
துளிகளை உணர்கிறேன்
காதல் என்பது
ஒரு கண்ணியமான நிலை
அது வேதனையை
பூவாக மாற்றும்
சிறப்பான விலைமதிப்பற்ற சக்தி
சில வார்த்தைகளால் மட்டுமல்ல
என் முழு உயிரால்
உன்னைக் காதலிக்கிறேன்
தனிமையில் கூட
உன் நினைவுகள்
என்னை பாதுகாப்பதுபோல்
உணர்கிறேன்
நான் கண்ட
வெண்மேகம் கூட
உன் முகம் போல்
சுத்தமாய் தெரிகிறது
நான் உன்னை கண்டபோது
காதலின் அர்த்தத்தை உணர்ந்தேன்
உன் புன்னகை
எனக்கான உலகத்தை மாற்றியது
உன் கண்கள் என் மனதை திருடியது
உன்னுடைய நினைவுகளுடன்
என் உள்ளம்
என்றும் கலந்திருக்கின்றது
உன் நினைவுகள்
என்னை விட்டுப் பிரிந்தாலும்
என் சுவாசத்தில் தொடர்ந்து வாழும்
என் வாழ்க்கையின்
பாதையில்
உன் அன்பு தான்
எனது நம்பிக்கையை
வளர்க்கின்றது
உன் கைகளை
பிடித்து நிற்கும் போது
காலம் கூட
தனக்கு நேரம் வேண்டாம்
என்று சொல்வதுபோல் உணர்கிறேன்
உயிருக்கு ஆக்ஸிஜன்
தேவைப்படுவதுபோல்
என் மனதுக்கு
உன் சிரிப்பு தேவைப்படுகிறது
உன்னுடைய பார்வையில்
மறைந்திருக்கும் கவிதை
என் மனதை வழிநடத்தும்
இசை ஆகிறது
காற்றில் கூட
உன் நறுமணத்தை தேடுகிறேன்
அது என்னைக் கவர்கிறது
உன்னோடு எவ்வளவு நேரம்
கழித்தாலும்
உன்னையே தேடுகிறேன்
காதல் பேசும் வார்த்தைகளில்
உண்மை இருக்கும்
அதனால் தான்
அது காதலாகிறது
நம் இதயங்களின் இசை
உலகத்தையே மயக்கும்
காதல் ராகம்
நான் உன்னை மட்டும்
காதலிக்கவில்லை
உன் அருகில் இருந்த
ஒவ்வொரு நிமிடத்தையும்
காதலிக்கிறேன்
உன் பேரழகில்
அடங்கும் சூரியன்
என் இதயத்தில்
மீண்டும் உதிக்கிறது
இதயம் பேசும்போது
காதல் என் மனதை
தொட்டு பேசுகிறது
பார்வையில் ஒளியோடு
மனதிலும் உயிர் மூச்சோடு
பசுமை சேர்க்கும் உணர்வு காதல்
என் கனவுகளின் எல்லை
உன் அருகில் நின்றவுடன்
முடிவடைகிறது
நீ இல்லாமல் நான் இல்லை
என் இதயம்
உன் பெயரில் எழுதி முடித்தது
உன் புன்னகை எனக்கு
காதலின் முதல் கவிதை
என் மனசுக்கு
சொந்தமான சூரியன் நீயே
எனது இரவை
ஒளிர்க்கும் சந்திரனும் நீயே
நான் எங்கே இருந்தாலும்
என் இதயத்தின் திசை
உன்னைச் சுட்டிக்காட்டும்
உன்னுடன்
சில நொடிகள் வாழ்ந்தால்
வாழ்க்கை முழுவதும் போதுமானது
உன் உதடுகள்
என் உதடுகளை தொடும் பொழுது
எங்கு சொர்க்கம் என்பது புரிகிறது
ஒரு முத்தம்
அன்பின் மொழியில்
சொல்ல முடியாத
அனைத்தையும் சொல்கின்றது
என் உயிரின் துடிப்பில் ஒளிர்வது உன் நினைவின் தீபம்
உன்னால் மலர்ந்த காதல்
என் வாழ்வின் உச்சிமுடியாகிறது
காதல் என்பது
இரண்டு இதயங்களின்
மௌனப் பேச்சு
அதை வார்த்தைகளால்
அளவிட முடியாது
காதல் நேரம் தெரியாமல்
பேசும் ஒரு கவிதை
மனம் அதை
உணர்ந்தால் மட்டுமே
அதன் அர்த்தம் புரியும்
நீ எனது கண்ணில்
மின்னும் நட்சத்திரம்
நானும் உனது இருளில்
ஜொலிக்கும் ஒளி
உன் பார்வையின்
மெழுகுவர்த்தியில்
என் இதயம் மெலிந்து
காதலாக ஒளிர்கிறது
வார்த்தைகள் இல்லாமல்
பேசும் உன் பார்வை
என் உலகத்தையே
காதலாக மாற்றிவிட்டது
உன் பெயர் உதடுகளில்
மௌனமாகத் தோன்றும்போது கூட
என் இதயம் அதை
ஓசையாக உனக்கே சொல்லிவிடும்
நீ பேசாமல் இருந்தாலும்
உன் நினைவுகளே
என் மனதை காதலாகப் பாட வைக்கும்
இரவில் நிலவாக மாறினாலும்
பரவாயில்லை
உன் கைகளில் மட்டும்
சூரியனாக ஒளிர விரும்புகிறேன்
உன் பார்வையின் நிழலிலும்
என் மனது
காதலின் ஒளி தேடுகிறது
உன் ஒவ்வொரு தொடுதலில்
என் உயிர் தீப்பொறியாக எரிகிறது
உன் விரல்கள்
என்மீது ஓடும் போதே
என் உடல் உருகுகிறதே
உன் உதடுகள்
தீயாக இருந்தாலும் பரவாயில்லை
என் ஆசை காற்றாக
உன்னை தீண்டட்டும்
ஒவ்வொரு தொடுதலும்
எளிதில் அணைக்க முடியாத
நெருப்பாக மாறுகிறது
என் இதயத்தைக் கேட்டால்
அது உன் பெயரையே
மெல்லிசையாக
மெல்லிசையாக உச்சரிக்கும்
நாள்தோறும் சூரியன்
உதிக்கிறதுபோல்
என் காதலும்
உன்னைக் காணும்
ஒவ்வொரு முறையும்
புதிதாக உணர்கிறேன்
கைகளின் வசீகரம்
சுவாசத்தின் மயக்கம்
இருவருக்குள் ஒரு மாயம்
மூச்சுகள் ஒன்றோடொன்று
கலக்கும் நேரம்தான்
இருவரும் உண்மையில்
ஒன்றாகும் தருணம்
உன்னிடம் இருந்து
ஒரு வார்த்தை கூட
பேசாமல் இருந்தாலும்
என் மனம் உன்னோடு
ஆயிரம் கதைகளை பேசுகிறது
நீ பேசும்
ஒவ்வொரு சொல்லும்
என் இதயத்துக்குள்
காதல் ராகமாக ஒலிக்கிறது
மொழிகள் பேசாமல்
இருகண்கள் பேசும் நேரம்
உண்மையான நேசத்தின் சிறப்பு
அருகில் வந்ததும்
நேரம் நின்று போகிறது
கண்கள் சந்தித்ததும்
ஒரு புதிய பிரபஞ்சம் தொடங்குகிறது
உன்னை பார்க்கும்
ஒவ்வொரு நொடியும்
என் இதயத்துக்குள்
ஒரு புதிய துடிப்பு
உன் கண்களில்
நான் மூழ்கவில்லை
என் இதயம் தான்
உன் பார்வையில்
கரைந்துவிட்டது
நீ என்னுடன்
இல்லாத நேரம் கூட
உன் நினைவுகள்
என்னை விட்டு போக மறுக்கின்றன
என் இதயம் உன்னிடம்
அடகு வைத்துவிட்டேன்
திருப்பி கொடுக்க வேண்டாம்
காதலாகவே வைத்துக்கொள்
நீ பேசும்போது
என் மனது காதலாகிறது
நீ அசைந்தால்
என் உலகமே நடனமாடுகிறது
காதல் என்பது ஒரு பூ
அதை சரியான முறையில் பராமரித்தால்
அதன் மணம் வாழ்நாளின்
இறுதி வரை நம்மை தொடரும்
காதல் ஒரு இசை
அதில் உள்ள ஒவ்வொரு நொடிக்குமே
தனி ராகம் இருக்கிறது
அதை உணர முடியாதவர்கள்
இசையின் அழகையும்
புரிந்துகொள்ள முடியாது
நீ பேசும் ஒவ்வொரு வார்த்தையும்
காதல் கவிதையாக
எனது இதயத்தில் பதியிறது
உன்னுடன் பேசாத
ஒரு நாள் கூட
உயிர் இல்லாத
ஒரு நாள் போல் தோன்றும்
உன்னைக் காணாத
ஒரு நாளே எனக்குத் தவிப்பு
உன்னை பார்க்கும் தருணமே
என் உயிரின் அர்த்தம்
காதல் ஒரு மொழியாக இருந்திருந்தால்
அதை புரிந்துகொள்ள
காது தேவையில்லை
ஒரு இதயம் இருந்தாலே போதும்
காதல் என்பது
இரு இதயங்களின் மொழி
வார்த்தைகள் இல்லாமலே
பேசும் உணர்வு
காதல் என்பது
இரு இதயங்கள்
இசையும் ஒரு அலை
அதில் யாரேனும்
பின்னடைவு அடைந்தாலும்
அந்த இசை நிறைவடையாது
நீ பேசும் போது
என் மனம் காதலிக்கிறது
நீ அணைக்கும்போது
என் ஆன்மா முழுவதுமாக
உன்னுடையதாகிறது
நேரம் மாறலாம்
உலகம் மாறலாம் ஆனால்
உண்மையான காதல்
ஒருபோதும் மாறாது
உன்னிடத்தில் நான்
என்னவாக இருந்தாலும் பரவாயில்லை
ஆனால் உன்னிடம் இல்லாத
ஒரு நாளும் எனக்கு வேண்டாம்
உலகம் எத்தனை
அழகானதாக இருந்தாலும்
என் கண்கள் உன்னை
காணும் போது மட்டுமே
அதை உணர்கிறேன்
காதல் என்பது
இதயம் கூறும் கவிதை
அதை உணர்வதற்கே
ஒரு உயிர் போதும்
உன்னிடம் பேசும்
ஒரு நொடி கூட
ஒரு முழு வாழ்க்கையை
போல் உணர்கிறேன்
காதல் என்பது
இதயத்தால் உணர்ந்த கவிதை
அது எழுதப்பட வேண்டியதில்லை
உணரப்பட வேண்டியது
உன்னை நினைக்கும்போது
என் மனதில் மலர்கள் மலர்கின்றன
ஆனால் உன்னை காணும் போது
எனது உலகமே பரிமளிக்கிறது
நீ சொல்லும்
ஒவ்வொரு வார்த்தையும்
என் இதயத்தில்
ஒரு நிலையாக நிலைக்கிறது
உன் காதல் எனது உலகத்தை
ஓரிரு வார்த்தைகளில் எழுதிவிட்டது
"நீ மட்டும் போதும்"
உன் கண்ணோடுகள் பேசும் போது
வார்த்தைகள் தேவையில்லை
உன் நேசம் உணர்த்தும் போது
விளக்கங்கள் தேவையில்லை
காதல் என்பது
இரு இதயங்கள்
ஒன்றாக சிந்திக்கும்போது
உருவாகும் மந்திரம்
காதல் என்பது
மனிதரை மாற்றும் மந்திரம்
அதை உணர்ந்தவனே
உண்மையாக வாழ்கிறான்
நீயில்லா உலகத்தை
நினைத்தாலே பயமாக இருக்கிறது
ஏனென்றால் என் உயிரும்
என் காதலும் உன்னுடன்
பின்னிப்பிணைந்திருக்கிறது
நம் அன்பு மொழியற்றது
ஆனால் நம் இதயங்கள்
பேசிக் கொண்டிருக்கின்றன
உன் கண்கள்
என்னை பார்க்கும்போது
என் மனசு பேசாமல்
காதல் சொல்லி முடிக்கிறது
உன் நினைவுகள்
எனது இதயத்தில்
மழைபோல் பொழிகிறது
ஆனால் அது என்னை
ஈரமாக செய்யவில்லை
மூழ்கடிக்கிறது
நினைவுகளை மட்டுமே
காதலிக்க முடியாது
ஆனால் சிலர்
நினைவாகவே மாறிவிடுகிறார்கள்
இதயம் ஒருமுறை
ஏற்றுக்கொண்டால்
எந்த தூரமும்
காதலை பிரிக்க முடியாது
இதயம் பேசும்
மொழியை காதல் மட்டுமே
புரிந்துகொள்ள முடியும்
சிலருடன் பேசும்போது
வார்த்தைகள் இல்லை
ஆனால் உணர்வுகள்
நிறைந்திருக்கும்
தூரம் அதிகமானாலும்
உணர்வு இணைந்திருந்தால்
காதல் என்றும் பிரியாது
ஒரு சிரிப்பில்
வாழ்க்கையை காண்பதே
உண்மையான காதல்
காதல் ஒரு மழை போல
நனைந்த பிறகே
அதன் அழகை உணர முடியும்
இதயம் ஒரு மழைப்பொழிவு
அதை உணர்வது மட்டுமே காதல்
நினைவுகள் மட்டும்
மிஞ்சும் காதல்
காலம் கடந்தாலும் அழியாது
காதல் ஒரு மெழுகுவர்த்தி போல
தீ கொளுத்தினால் கருகும்
ஆனால் அதன் ஒளியில்
இருவரும் பிரகாசிப்பார்கள்
மௌனத்தில் கூட
காதலின் ஓசைகள் கேட்கும்
அதற்கு இரண்டு இதயங்கள்
மட்டும் போதும்
சிலரின் குரல் கேட்டவுடனே
மனம் அமைதியடைகிறது
அதுதான் உண்மையான காதல்
➡ Tamil Kavithai and Tamil SMS Whatsapp Channel
Related Posts - Kadhal SMS
- லவ் Quotes
- தமிழ் லவ் எஸ் எம் எஸ்
- தமிழ் அன்பு கவிதை
- காதலர் தினம் கவிதைகள் - Valentine's Day Wishes in Tamil